கிரிப்டோகரன்சி குறித்து கவலைத் தெரிவித்துள்ள ரிசர்வ் வங்கி, அதை தடை செய்யவேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளது. நாட்டின் நிதி மற்றும் பண ஸ்திரத்தன்மையை கிரிப்டோகரன்சி அழித்துவிடும் என எச்சரி்த்துள்ளது என மத்திய நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
கிரிப்டோகரன்சி குறித்து கவலைத் தெரிவித்துள்ள ரிசர்வ் வங்கி, அதை தடை செய்யவேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளது. நாட்டின் நிதி மற்றும் பண ஸ்திரத்தன்மையை கிரிப்டோகரன்சி அழித்துவிடும் என எச்சரி்த்துள்ளது என மத்திய நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
கிரிப்டோகரன்சி குறித்த கேள்விக்கு மத்திய நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களவையில் இன்று எழுத்துப்பூர்வமாக விளக்கம் அளித்தார் அப்போது அவர் கூறியதாவது:
உலகின் வேகமாக வளரும் பொருளாதாரத்தை பாஜக அழிக்கிறது: ராகுல் காந்தி விளாசல்
நாட்டின் நிதி மற்றும் பண ஸ்திரத்தன்மையை கிரிப்டோகரன்சி அழித்துவிடும் என்று ரிசர்வ் வங்கி கவலை தெரிவிக்கிறது. இந்த விவகாரத்தில் சட்டம் இயற்ற வேண்டும் என்று ரிசர்வ் வங்கி பரிந்துரைத்துள்ளது. ரிசர்வ் வங்கி நாட்டில் கிரிப்டோகரன்சி தடை செய்யப்பட வேண்டும் என்று விரும்புகிறது.
இலங்கை மக்கள் நிம்மதிபெருமூச்சு, மகிழ்ச்சி: கடந்த 6 மாதத்தில் முதல்முறையாக அறிவிப்பு
இந்தியப் பொருளாதாரத்தில் எதிர்மறையான விளைவுகளை கிரிப்டோகரன்சி உருவாக்கிவிடும் என ரிசர்வ் வங்கி தனது கவலைகளைப் பதிவு செய்துள்ளது. கிரிப்டோகரன்சி ஒரு கரன்சி அல்ல. ஏனென்றால், ஒவ்வொரு நவீன கரன்சியும் மத்திய அரசால், அல்லது மத்திய வங்கியால்தான் வெளியிடப்பட வேண்டும்.
இதுபோன்ற கரன்சிகளின் மதிப்பு நிதிக்கொள்கையால் முடிவு செய்யப்பட வேண்டும், சட்டப்பூர்வமாக இருக்க வேண்டும். ஆனால், கிரிப்டோகரன்சியின் மதிப்பு முழுமையாகவே ஊகத்தின் அடிப்படையில் நிர்ணயிக்கப்படுகிறது, அதிகமான வருவாய் கிடைக்கும் நோக்கில் முதலீடு செய்யப்படுகிறது.ஆதலால், இந்த கிரிப்டோகரன்சி நாட்டின் நிதிநிலைத்தன்மை, பணத்தின் நிலைத்தன்மையை குலைத்துவிடும்.
கிரிப்டோகரன்சி எல்லை இல்லாதது, இதை தடுப்பதற்கு சர்வதேச அளவிலான ஒத்துழைப்பு அவசியம். கிரிப்டோகரன்சிமட்டுமல்ல இதுபோன்ற எந்த கரன்சியையும் தடை செய்ய வேண்டுமானால், சர்வதேச அளவிலான ஒத்துழைப்பு, இடர்பாடுகள் மதிப்பீடு போன்றவை செய்ய வேண்டும்.
சமையல் எண்ணெய் விலை லிட்டருக்கு ரூ.30 குறைப்பு: அதானி வில்மர் அதிரடி
கடந்த 2013ம் ஆண்டிலிருந்து ரிசர்வ் வங்கி கிரிப்டோகரன்சி குறித்து அதைப் பயன்படுத்துவோர், விற்போர், வாங்குவோர் பாதுகாப்பாகவும், எச்சரிக்கையாகவும் இருக்குமாறு எச்சரித்துவருகிறது. கிரிப்டோகரன்சி பொருளாதார, நிதி, இடர்பாடுகளுக்கு உட்பட்டது, சட்டப்பூர்வ பாதுகாப்பு இல்லாதது என எச்சரித்துள்ளது.
இது தொடர்பாக கடந்த 2018 ஏப்ரல் 6ம்தேதி, 2020ம் ஆண்டு மார்ச் 4ம் தேதியும் சுற்றறிக்கை விடப்பட்டுள்ளது
இவ்வாறு நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.