rbi rate: தொந்தரவா! போலீஸில் புகார் கொடுங்க; ஆன்-லைன் கடன் ஆப்ஸ் பற்றி மக்களுக்கு சக்திகாந்த தாஸ் அறிவுரை

By Pothy RajFirst Published Jun 9, 2022, 10:46 AM IST
Highlights

rbi rate :ஆன்-லைன் மூலம் கடன் அளிக்கும் பெரும்பாலான செயலிகள் ரிசர்வ் வங்கியில் பதிவு செய்யவில்லை. கடன்வாங்கியவர்களை ஆன்லைன் ஆப்ஸ் தொந்தரவு செய்தால் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யலாம் என ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் அறிவுறுத்தியுள்ளார்.

ஆன்-லைன் மூலம் கடன் அளிக்கும் பெரும்பாலான செயலிகள் ரிசர்வ் வங்கியில் பதிவு செய்யவில்லை. கடன்வாங்கியவர்களை ஆன்லைன் ஆப்ஸ் தொந்தரவு செய்தால் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யலாம் என ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் அறிவுறுத்தியுள்ளார்.

நாட்டின் பணவீக்கத்தை 2 முதல் 6 சதவீதத்துக்குள் கட்டுப்படுத்த ரிசர்வ் வங்கி இலக்கு வைத்திருந்தது. ஆனால், 2022 ஜனவரி முதல் மார்ச் மாதம்வரை பணவீக்கம் 6 சதவீதத்தைக் கடந்தது. அதிலும் ஏப்ரல் மாதத்தில் 7.79 சதவீதமாக உயர்ந்தது.

இதையடுத்து, அவசரமாக முடிவு எடுத்த ரிசர்வ் வங்கி வட்டிவீதத்தில் 40 புள்ளிகளை உயர்த்தியது, ரொக்கக் கையிருப்பு வீதத்தை 50 புள்ளிகள் உயர்த்தியது. இதனால் கடனுக்கான வட்டிவீதம் 4 சதவீதத்திலிருந்து 4.40 சதவீதமாக அதிகரித்தது.

கடந்த 3 நாட்களாக நடந்த நிதிக்கொள்கைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி வட்டிவீதம் மேலும் 50 புள்ளிகளை உயர்த்தி ரிசர்வ் வங்கி நேற்று அறிவித்தது. அதுகுறித்து ரிசர்வ் வங்கி கவர்னர் சக்தி காந்த தாஸ் நிருபர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது: 

இன்று ஆன்-லைன் மூலம் கடன் அளிக்கும் ஏராளமான செயலிகள் வந்துவிட்டன. ஆனால், இந்த ஆன்-லைன் ஆப்ஸ் மூலம் கடன் அளிக்கும் நிறுவனங்களில் பெரும்பாலானவை ரிசர்வ் வங்கியில் ப திவு செய்யவில்லை.அதிகாரபூர்வமில்லாமல் வாடிக்கையாளர்களுக்கு கடன் வழங்குகின்றன

இந்த ஆன்-லைன் ஆப்ஸில் கடன் பெற்றுவிட்டு திருப்பிச் செலுத்த முடியாவிட்டால், வாடிக்கையாளர்களை தவறாகப் பேசுவது, மரியாதைக்குரியாக நடத்துவது போன்றவை நடக்கின்றன. ஆன்-லைன் கடன் கொடுக்கும் செயலிகளின் தொந்தரவு தாங்காமல் கடன் வாங்கியவர்கள் தற்கொலை செய்த சம்பவங்களும் உண்டு. 

இதில் ஒரு விஷயத்தை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். ரிசர்வ் வங்கியில் பதிவு செய்த நிறுவனங்களுக்கு எதிராகத்தான் ரிசர்வ் வங்கி நடவடிக்கை எடுக்கும். மற்ற நிறுவனங்களுக்கு  எதிராக மக்கள் புகார் அளிக்க வேண்டுமென்றால் அருகில் உள்ள போலீஸ்நிலையத்தில் புகார் செய்யலாம்.

எங்களுக்கு ஏராளமான புகார்கள் ஆன்-லைன் செயலி மூலம்கடன் வழங்கும்நிறுவனங்களைப் பற்றி வருகின்றன. அந்த நபர்களிடம், பதிவு செய்யாத நிறுவனங்களுக்கு எதிராக ரிசர்வ் வங்கி நடவடிக்கை எடுக்க முடியாது, ஆதலால், உள்ளூர் போலீஸ் நிலையத்தை அணுகி,புகார் அளியுங்கள். அவர்கள் விசாரணை நடத்தி தகுந்த நடவடிக்கை எடுப்பார்கள் எனத் தெரிவிக்கிறோம்.

அது மட்டும்லாமல் ரிசர்வ் வங்கியின் இணையதளத்தில் எத்தனை நிதி நிறுவனங்கள், ஆப்ஸ்கள் பதிவு செய்துள்ளன, அதன் பெயர்கள், பட்டியல்கள் குறிப்பிடப்ட்டுள்ளன. அவற்றைப் படித்து கடன் பெறுவோர் நம்பகத்தன்மை வாய்ந்த நிறுவனங்களை அணுகலாம்.

மக்களிடம் ரிசர்வ் வங்கி தாழ்மையுடன் கேட்கும் கோரிக்கை என்பது, முதலில் செயலிகள் மூலம் கடன் பெறப் போகிறீர்கள் என்றால், அந்த செயலி ரிசர்வ் வங்கியில் பதிவு செய்யப்பட்டதா என்பதை ஆய்வு செய்யுங்கள். அவ்வாறு பதிவு செய்திருந்தால், வாடிக்கையாளர்புகார் அளித்த உடனே ரிசர்வ் வங்கி நடவடிக்கை எடுக்கும். இதற்கு நான் உறுதியளிக்கிறேன்.

இவ்வாறு சக்திகாந்த தாஸ் தெரிவித்தார்.


 

click me!