ரிசர்வ் வங்கி ரெப்போ ரேட் வீதத்தை 50 புள்ளிகள் உயர்த்தியதையடுத்து, வங்கிகள் கடனுக்கான வட்டிவீதம், டெபாசிட்களுக்கு வட்டியை எவ்வளவு உயர்த்தும் என்ற எதிர்பார்ப்பு நிலவியுள்ளது.
வட்டி உயர்வு
நாட்டில் ப ணவீக்கம் அதிகரித்து வருவதைக் கட்டுப்படுத்த ரிசர்வ் வங்கி வட்டிவீதத்தை உயர்த்தும் ஆயுதத்தை கையில் எடுத்துள்ளது. கடந்த மே மாதம் கடனுக்கான வட்டியை 40 புள்ளிகளும், நேற்று முடிந்த நிதிக்கொள்கை ஆய்வுக் குழுக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி வட்டிவீதம் மேலும் 50 புள்ளிகளை ரிசர்வ் வங்கிஉயர்த்தியது. இதன்படி கடனுக்கான வட்டிவீதம் தற்போது 4.90சதவீதமாக உயர்ந்துள்ளது.
நாட்டில் பணவீக்கம் அடுத்த 3 காலாண்டுகளுக்கும் இருக்கும், ஏறுமுகமாகவே இருக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்திருந்தது. அந்த அடிப்படையில் பார்த்தால் இனி வரும் நிதிக்கொள்கைக் கூட்டத்திலும் வட்டிவீதம் உயர்த்தப்படலாம் எனத் தெரிகிறது
எவ்வளவு உயரும்
இந்நிலையில், ரிசர்வ் வங்கி நேற்று வட்டியை 50 புள்ளிகள் உயர்த்தியுள்ளதால் இதை அடிப்படையாக வைத்து வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கு கடனுக்கான வட்டியை எவ்வளவு உயர்த்துவார்கள் என்பது பெரும் எதிர்பார்ப்பாக இருக்கிறது.
அந்த வகையில், வங்கிகள் கடனுக்கான வட்டியை 20 முதல் 25 புள்ளிகள் வரை உயர்த்த வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஈசாப் சிறுநிதி வங்கியின் தலைமை நிர்வாக அதிகாரி கே.பால் தாமஸ் கூறுகையில் “ ரிசசர்வ் வங்கி வட்யை 50 புள்ளிகள் உயர்த்தியுள்ளது. அந்த அடிப்படையில் பார்த்தால், வாடிக்கையாளர்களின் டெபாசிட்களுக்கு 20 முதல் 25 புள்ளிகள் வட்டி உயரும். இனிவரும் நிதிக்கொள்கைக் கூட்டத்திலும் ரிசர்வ் வங்கி வட்டியை உயர்த்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பணவீக்கத்தின் நகர்வு, உயர்வு ஆகியவற்றை அடிப்படையாக வைத்து ரிசர்வ் வங்கி இனிமேல் வட்டியை உயர்த்தும்” எனத் தெரிவித்தார்
ஹெச்டிஎப்சி வங்கியின் மேலாளர் இயக்குநர் ரேனு சூத் கர்நாட் கூறுகையில் “ ரிசர்வ் வங்கி50 புள்ளிகளை வட்டியில் உயர்த்தியுள்ளது. இதனால் வங்கிகளில் வாடிககையாளர்களின் டெபாசிட்களுக்கான வட்டியும் அதிகரிகக்கும். வைப்புத்தொகை செலுத்தியவர்களுக்கு இது நல்லகாலம். வீட்டுக்கடன் வாங்கியிருப்பவர்கள் அதிகமான இஎம்ஐ செலுத்த வேண்டும், வட்டியும் கூடுதலாகச் செலுத்த வேண்டும். இனிவரும் நாட்களில் பணவீக்கத்தின் நகர்வைப் பொறுத்து ரிசர்வ் வங்கி வட்டிவீதத்தை நி்ர்ணயிக்கும். ஒருவேளை பணவீக்கம் உயர்வாகவே சென்றால், இனிவரும் நிதிக்கொள்கைக் கூட்டத்திலும் வட்டிவீதம் அதிகரிக்கும்” எனத் தெரிவித்தார்
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.