
வரும் 2022-23ம் நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி நடப்பு நிதியாண்டைவிட குறைந்து 7.8% மட்டுமே இருக்கும் என்று ரிசர்வ் வங்கி கணித்துள்ளது.
ஆனால், நடப்பு நிதியாண்டில் பொருளாதார வளர்ச்சி 9.2% வரை இருக்கும் என்று ரிசர்வ் வங்கி கவர்னர் சக்தி காந்ததாஸ் தெரிவித்துள்ளார்.
சந்தையில் நிலையற்ற சூழல், கொரோனா பெருந்தொற்று, உலகளாவிய அளவில் பொருட்கள் விலை உயர்வு போன்றவற்றால் பொருளாதார வளர்ச்சியை குறைத்து மதிப்பிடப்பட்டுள்ளது.
ஆனால், மத்திய நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த மாதம் 31ம் தேதி தாக்கல் செய்த பொருளாதார ஆய்வறிக்கையில் அடுத்த நிதியாண்டில் ஜிடிபி 8 முதல் 8.5%வரை வளர்ச்சி பெறும் என்று தெரிவி்த்திருந்தார். அவர் கணித்தமதிப்பைவிட, ரிசர்வ் வங்கி இன்றி நிதிக்கொள்கைக் குழுவில் குறைத்திருக்கிறது.
ரிசர்வ் வங்கியின் நிதிக்கொள்கைக் குழுக் கூட்டம் முடிந்து அதன் அறிக்கையை கவர்னர் சக்தி காந்ததாஸ் இன்று வெளியிட்டார். அதில், “ வரும் 2022-23ம் நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 7.8 சதவீதம் இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இன்னும் உள்நாட்டு பொருளாதார நடவடிக்கைகள் பரந்த அளவில் செயல்படவில்லை. கொரோனா பெருந்தொற்றுக்கு முந்தைய காலத்தின் அளவைவிட குறைவாகவே தனியார் நுகர்வு இருக்கிறது. அதனால்தான் பட்ஜெட்டில் முதலீட்டுச் செலவுக்கு அதிகமான முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச நிதிச்சூழலில் ஊசலாட்டம், சர்வதேசஅளவில் பண்டங்கள் விலை உயர்வு குறிப்பாக கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பு போன்றவற்றால் பொருளாதார வளர்ச்சி குறையும் எனக் கணிக்கப்பட்டுள்ளது
உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி படிப்படியாக வளர்ந்து வருகிறது.அனைத்துக் காரணிகளையும் கணித்துப் பார்த்தால் உண்மையான ஜிடிவி 7.8% 2022-23 நிதியாண்டில் இருக்கும். முதல் காலாண்டில் 7.2%, 2-வது காலாண்டில் 7%, 3-வது காலாண்டில் 4.3%, 4-வது காலாண்டில் 4.5% வளர்ச்சி இருக்கும் எனக் கணித்துள்ளோம்.
தேசிய புள்ளியியல் அலுவலகம் கடந்த ஜனவரி 7ம் தேதி வெளியிட்ட கணிப்பில் நாட்டின் ஜிடிபி 9.2% வரை இருக்கும், கொரோனாவுக்கு முந்தைய அளவைவிட அதிகரிக்கும் எனக் கணித்தது. ஆனால், ஜனவரி 31ம் தேதி திருத்தப்பட்ட அறிக்கையில் 2020-21ம் ஆன்டு ஜிடிபி மைனஸ் 7.3 லிருந்து மைனஸ்6.6 என்று வெளியிட்டது. நாட்டில் பரவிவரும் ஒமைக்ரான் வைரஸால் தேவையின் வேகத்தை குறைத்துவிட்டது, இதனால் பல்வேறு இடங்களில் பொருளாதார நடவடிக்கையில் மந்தநிலை ஏற்பட்டுள்ளது.
கிராமப்புறங்களில் இருசக்கர வாகனங்கள், டிராக்டர் விற்பனை டிசம்பர்-ஜனவரி மாதத்தில் குறைந்துள்ளது.ஒமைக்ரான் பரவால் விமானப் போக்குவரத்தும் சுணக்கம் அடைந்துள்ளது. நவம்பர் டிசம்பரில் நுகர்வோர் பொருட்கள், பயணிகள் வாகன விற்பனையும் குறைந்திருக்கிறது.
முதலீட்டைப் பொறுத்தவரை டிசம்பரில் முதலீட்டுப் பொருட்கள் இறக்குமதி அதிகரித்துள்ளது, முதலீட்டுப் பொருட்கள் உற்பத்தி நவம்பரில் குறைந்திருக்கிறது. எந்திரப் பொருட்கள்,எந்திரங்கள் ஏற்றுமதி குறைந்துள்ளது. தங்கம் அல்லாத, எண்ணெய் சாராத பொருட்கள் இறக்குமதி அதிகரித்துள்ளது. இந்தக் காரணங்களால் அடுத்த நிதியாண்டில் பொருளாதார வளர்ச்சி குறையும் எனக் கணித்துள்ளோம்
இவ்வாறுசக்தி காந்ததாஸ் தெரிவித்தார்
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.