
கிரிப்டோ கரன்ஸி துலிப் மலர் மதிப்புகூட வராது. அதை சொத்தாகக் கருதமுடியாது. தனியார் கிரிப்டோகரன்சிக்கள் நாட்டின் பொருளாதாரம், நிதி நிலைத்தன்மைக்கே அச்சுறுத்தலாகும் என்று ரிசர்வ் வங்கியின் கவர்னர் சக்தி காந்ததாஸ் எச்சரித்தார்.
வரும் 2022-23ம் நிதியாண்டுமுதல் கிரிப்டோகரன்சி மீதான முதலீடுகள், வருமானத்துக்கு 30சதவீதம் வரிவிதிக்கப்படும் என்று பட்ஜெட்டில் நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.
இந்தியாவில் நாளுக்கு நாள் கிரிப்டோகரன்சி மீதாந முதலீடுகள் அதிகரித்துவருவதால், அதை ஒழுங்குபடுத்தும் முயற்சியாக, கட்டுப்பாடுகளைஅறிவித்துள்ளது. அதுமட்டுமல்லாமல் ரிசர்வ் வங்கி சார்பில் டிஜிட்டல் ருபியும் உருவாக்கப்படும் என்று நிதி அமைச்சர் அறிவித்தார். ஆனால், இதற்கான முழுமையான விவரங்கள் இன்னும் வரவில்லை.
இந்நிலையில் ரிசர்வ் வங்கியின் நிதிக்கொள்கைக் குழுக் கூட்டம் முடிந்தபின் கவர்னர் சக்தி காந்ததாஸ் நிருபர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது அவரிடம் தனியார் கிரிப்டோ கரன்சிகளான பிட்காயின், எத்திரியம் உள்ளிட்டவற்றில் முதலீடு செய்யப்படுவதுகுறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் அளித்த பதலில் கூறியதாவது:
தனியார் கிரிப்டோ கரன்சிகள் நாட்டின் நிதி நிலைத்தன்மைக்கும், பொருளாதாரத்துக்கும் பெரும் அச்சுறுத்தலாகும். குறிப்பாக மிகைப்பொருளாதாரம் எனச் சொல்லக்கூடிய வேலைவாய்ப்பு, வளர்ச்சி, உள்நாட்டு உற்பத்தி, பணவீக்கம் உள்ளிட்ட அனைத்தையும் பாதிக்கும்.
முதலீட்டாளர்களுக்கு நான் விடுக்கும் எச்சரிக்கை என்பது கிரிப்டோகரன்சியின் மதிப்பு நிலையற்றது, அதை சொத்தாகக் கருத முடியாது. இன்று இருப்பது நாளை இருக்காது எப்படி வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளலாம். துலிப் மலர் மதிப்புக்கூட கிரிப்டோகரன்சி வராது. என்னுடைய வேலை எச்சரிப்பதுதான். கிரிப்டோவில் முதலீட்டாளர்கள் முதலீடு செய்வது ஆபத்தானது, அவர்களின் சொந்த ரிஸ்கில் முதலீடு செய்யலாம் என்பதை மனதில் கொள்ள வேண்டும்.
இவ்வாரு சக்தி காந்த தாஸ் தெரிவித்தார்
ஆனால், பட்ஜெட்டில் கிரிப்டோகரன்சி முதலீட்டுக்கு 30 சதவீதம் வரிவிதித்து அதை சட்டப்பூர்வமாக்கியதற்கு அதன் முதலீட்டாளர்கள் வரவேற்றுள்ளனர்.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.