rbi mpc: ஆர்பிஐ எம்பிசி கூட்டம்: கனரா வங்கி, KVB வங்கி எம்சிஎல்ஆர் ரேட்டை உயர்த்தின

Published : Jun 07, 2022, 03:35 PM IST
rbi mpc: ஆர்பிஐ எம்பிசி கூட்டம்: கனரா வங்கி, KVB வங்கி எம்சிஎல்ஆர் ரேட்டை உயர்த்தின

சுருக்கம்

rbi mpc:: ரிசர்வ் வங்கியின் நிதிக்கொள்கைக் கூட்டம் நாளை நடக்க இருக்கும் நிலையில் கனரா வங்கி , கரூர் வைஷ்யா வங்கிகள் கடனுக்கான எம்சிஎல்ஆர் ரேட்டை உயர்த்தியுள்ளன.

ரிசர்வ் வங்கியின் நிதிக்கொள்கைக் கூட்டம் நாளை நடக்க இருக்கும் நிலையில் கனரா வங்கி , கரூர் வைஷ்யா வங்கிகள் கடனுக்கான எம்சிஎல்ஆர் ரேட்டை உயர்த்தியுள்ளன.

கனரா வங்கி தனது கடனுக்கான எம்சிஎல்ஆர் ரேட்டை 5 புள்ளிகள் உயர்த்தி, 7.40 சதவீதமாக ஓர் ஆண்டுக்கு அதிகரித்துள்ளது. 6 மாத காலத்துக்கான எம்சிஎல்ஆர் ரேட் 7.35 சதவீதமாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.இது இன்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.

தனியார் வங்கியான கரூர் வைஸ்யா வங்கி, பெஞ்ச்மார்க்கோடு தொடர்புடைய கடன் வட்டிவீதத்தை 40 புள்ளிகள் உயர்த்தி, 8.75 சதவீதமாக உயர்த்தியுள்ளது. 

ரிசர்வ் வங்கியின் நிதிக்கொள்கைக் கூட்டம் நாளை நடக்க இருக்கும் நிலையில் அதற்கு முன்பாகவே எம்சிஎல்ஆர் வீதத்தை வங்கிகள் உயர்த்தி வருகின்றன.  நிதிக்கொள்கைக் கூட்டத்தில் கடனுக்கான வட்டிவீதம் உயர்வது உறுதியாகிவிட்டநிலையில் முன்கூட்டியே உயர்த்திவிட்டது. 

பெரும்பாலான பொருளாதார வல்லுநர்கள் கருத்துப்படி, ரெப்போ ரேட்டை ரிசர்வ் வங்கி நாளை நடக்கும் நிதிக்கொள்கைக் கூட்டத்தில் 50 புள்ளிகள் வரை உயர்த்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

ஹெச்டிஎப்சி வங்கி இறுதிநிலை கடனுக்கான செலவான எம்சிஎல்ஆர் வீதத்தை 35 புள்ளிகள் உயர்த்தி அறிவித்துள்ளது. ஏற்கெனவே கடந்த மாதம் எம்சிஎல்ஆர் வீதத்தை 25புள்ளிகளை ஹெச்டிஎப்சி வங்கி உயர்த்தி இருந்தது. இப்போது மேலும் 35 புள்ளிகள் உயர்த்தப்பட்டதையடுத்து, கடந்த ஒரு மாதத்துக்குள் 60 புள்ளிகள் உயர்தத்தியுள்ளது. 

ஹெச்டிஎப்சி வங்கி எல்எல்சிஆர் புள்ளிகளை உயர்த்தியுள்ளதையடுத்து, வீ்ட்டுக்கடன், வாகனக் கடன் வட்டி உயரும். கடன் பெற்றவர்கள் மாதந்தோறும் செலுத்தும் இஎம்ஐ கட்டணமும் மேலும் அதிகரி்க்கும்
 

PREV

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

click me!

Recommended Stories

IndiGo: 10,000 கார்கள், 9,500 ஹோட்டல் அறைகள், ரூ.827 கோடி ரீஃபண்ட்... மீண்டும் மீண்டு வந்த இண்டிகோ!
Economy: இனி பெட்ரோல் மட்டுமல்ல, காய்கறி விலையும் உச்சம் போகும்.! இந்திய ரூபாய் மதிப்பு சரிவால் ஏற்படப்போகும் தலைகீழ்மாற்றம்.!