பிரிட்டனில் இருந்து இந்தியாவிற்கு 100 டன் தங்கத்தை மாற்றியது இந்திய ரிசர்வ் வங்கி!!

By Asianet Tamil  |  First Published May 31, 2024, 1:40 PM IST

இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) பிரிட்டனில் இருந்து 100 டன் தங்கத்தை இந்தியாவிற்கு மாற்றியுள்ளது. 


இந்தியாவில் 1991 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து, இந்த அளவில் தங்கத்தை உள்நாட்டில் உள்ள கையிருப்பில் சேர்க்கப்படுவது இதுவே முதல் முறையாகும் என்று டைம்ஸ் ஆஃப் இந்தியாவில் வெளியாகி இருக்கும் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

இந்திய ரிசர்வ் வங்கி வரும் மாதங்களில் இதே அளவு தங்கத்தை நாட்டிற்கு கொண்டு வரும் என்று அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளது. பன்முகப்படுத்தப்பட்ட சேமிப்பிற்காகவும் இந்தியாவிற்கு தங்கம் கொண்டு வரப்படுகிறது என்ற காரணமும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

Tap to resize

Latest Videos

இந்திய ரிசர்வ் வங்கி 822.10 டன் தங்கத்தை மார்ச் 2024 இறுதியில் வைத்திருந்தது, அதில் 408.31 டன் உள்நாட்டில் இருந்தது. உலகளவில் மத்திய வங்கிகள் தங்கத்தின் மீதான இருப்புகளை அதிகரித்து வருகின்றன. உலகளவில் பல்வேறு நாடுகளின் நாணயங்களின் மதிப்புகள் ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது. வெளிநாடுகளில் தங்கத்தின் இருப்பு அதிகரித்து வருவதால், இந்தியாவிற்கு தங்கத்தை கொண்டு வருவதற்கு இந்திய ரிசர்வ் வங்கி முடிவு எடுத்து இருப்பதாக டைம்ஸ் ஆப் இந்தியா செய்தியில் கூறப்பட்டுள்ளது. 

உலக தங்க கவுன்சிலின் சமீபத்திய குறிப்பின்படி, நடப்பு 2024ஆம் ஆண்டின் முதல் காலாண்டின்படி  இந்திய ரிசர்வ் வங்கி 19 டன் தங்கத்தை வாங்கி இருப்பது தெரிய வந்துள்ளது. இதுவே, 2023 ஆம் ஆண்டு 16 டன் தங்கத்தை இந்திய ரிசர்வ் வங்கி வாங்கியுள்ளது.  

இந்திய ரிசர்வ் வங்கி 2018ஆம் ஆண்டில் தங்கத்தை வாங்கத் தொடங்கியது. அதற்கு முன்பு, 2009 ஆம் ஆண்டில் உலகளாவிய நிதி நெருக்கடி ஏற்பட்டபோது 200 டன்களை இந்திய ரிசர்வ் வங்கி வாங்கி இருந்தது. தற்போது இந்திய ரிசர்வ் வங்கியில் 57.195 டாலர் பில்லியன் மதிப்பிலான தங்கத்தை இருப்பாக வைத்துள்ளது. 

இத்துடன் தொடர்ந்து மூன்றாவது வாரமாக அந்நிய செலவாணி இருப்பையும் இந்தியா அதிகரித்துக் கொண்டு வந்துள்ளது. தற்போது மே 17ஆம் தேதியுடன் முடிவடைந்த கால கட்டத்தில் இந்தியாவின் அந்நிய செலாவணி இருப்பு 648.7 பில்லியன் டாலரில் இருந்து 4.549 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது. 

click me!