விருந்தினர்களுக்கு கண்டிப்பாக செல்போன் பயன்படுத்த அனுமதி இல்லையாம். கொண்டாட்ட நிகழ்வுகளை ரகசியமாக வைத்திருப்பதற்காக இந்த கண்டிஷன் போட்டிருக்கிறார்களாம்.
ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சன்ட்டின் திருமணத்திற்கு முந்தைய இரண்டாவது கொண்டாட்டம் சொகுசு கப்பலில் உல்லாசமாக நடைபெற உள்ளது.
இந்த ‘க்ரூஸ் டிரிப்’ நிகழ்ச்சியில் உலகம் முழுவதும் இருந்து பல பிரபலங்கள் கலந்துகொள்கின்றனர். இந்த சொகுசு கப்பல் பயணம் இத்தாலியில் மே 30ஆம் தேதி தொடங்கி பிரான்ஸில் ஜூன் 1ஆம் தேதி முடிகிறது.
வாழ்க்கை ஒரு பயணம் என்ற வாசகத்துடன் இந்த க்ரூஸ் டிரிப் கொண்டாட்டத்துக்கான அழைப்பிதழும் அச்சிடப்பட்டுள்ளது. உலகெங்கும் உள்ள சுமார் 300 விஐபிக்கள் விருந்தினர்களாகக் கலந்துகொள்ள அழைப்பிதழ் அனுப்பப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங், கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி மற்றும் அவரது மனைவி சாக்ஷி, நடிகர் ரன்பீர் கபூர், நடிகை ஆலியா பட் ஆகியோர் மும்பையில் இருந்து விமானம் மூலம் இத்தாலி செல்கின்றனர்.
இந்த சொகுசு கப்பல் பயணித்தில் கலந்துகொள்ளும் விருந்தனர்களுக்கு கண்டிப்பாக செல்போன் பயன்படுத்த அனுமதி இல்லையாம். கொண்டாட்ட நிகழ்வுகளை ரகசியமாக வைத்திருப்பதற்காக இந்த கண்டிஷன் போட்டிருக்கிறார்களாம்.
ரிலையன்ஸ் நிறுவன அதிபரும் இந்தியாவின் மிகப்பெரிய கோடீஸ்வரருமான ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சன்ட் திருமணம் ஜூலை 12ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இதனை முன்னிட்டு திருமணத்துக்கு முந்தைய முதல் கொண்டாட்டம் குஜராத் மாநிலத்தின் ஜாம்நகரில் மூன்று நாட்கள் தடபுடலாக நடத்தப்பட்டது.