RBI Monetary Policy: படிக்க மறக்காதிங்க! இந்த 5 முக்கிய அம்சங்களைத் தவிர ரிசர்வ் வங்கி வேறு ஏதும் இல்லை

Published : Jun 08, 2022, 03:16 PM IST
RBI Monetary Policy: படிக்க மறக்காதிங்க! இந்த 5 முக்கிய அம்சங்களைத் தவிர ரிசர்வ் வங்கி வேறு ஏதும் இல்லை

சுருக்கம்

RBI MPC Meet Updates: ரிசர்வ் வங்கியின் நிதிக்கொள்கைக் கூட்டத்தில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட கடனுக்கான வட்டிவீதம் உயர்ந்து இருந்தது. இவை தவிர்த்து 5 முக்கிய அம்சங்கள் உள்ளன. அவற்றைக் காணலாம்.

ரிசர்வ் வங்கியின் நிதிக்கொள்கைக் கூட்டத்தில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட கடனுக்கான வட்டிவீதம் உயர்ந்து இருந்தது. இவை தவிர்த்து 5 முக்கிய அம்சங்கள் உள்ளன. அவற்றைக் காணலாம்.

ரிசர்வ் வங்கியின் நிதிக்கொள்கைக் கூட்டம்கடந்த 3 நாட்களாக நடந்தது. இந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை ஆர்பிஐ கவர்னர் சக்திகாந்த தாஸ் மும்பையில் இன்று நிருபர்களிடம் அறிவித்தார். அதில் முக்கியமான 5 அம்சங்கள் இடம் பெற்றுள்ளன.

ரெப்போ ரேட் உயர்வு

குறுகியகாலக் கடனுக்கான வட்டிவீதம் அல்லது ரெப்போ ரேட் வீதத்தை 50 புள்ளிகள் வரை ரிசர்வ் வங்கி உயர்த்தி நிதிக்கொள்கைக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது. இந்த வட்டிவீத உயர்வு உடனடியாக அமலுக்கு வந்துள்ளது. கடந்த மாதம் வட்டிவீதம் 40 புள்ளிகள் உயர்த்தப்பட்ட நிலையில் இப்போது 50 புள்ளிகள் என 90 புள்ளிகள் அதிகரித்துள்ளது. இதன் மூலம்வட்டிவீதம் 4.90 சதவீதமாக உயர்ந்துள்ளது.

கவலை தரும் பணவீக்கம்

நாட்டில் பணவீக்கம் கவலைத்தரக்கூடியதாக இருந்து வருகிறது, இனிமேலும் இருக்கும். அடுத்த 3 கலாண்டுக்கும் பணவீக்கம் கவலைக்குரியவகையில்தான் இருக்கும் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. அதாவது விலைவாசி குறைவதற்கு வாய்ப்பி்ல்லை, தற்போதுள்ள நிலை தொடரலாம் அல்லது மோசமாகலாம். 

நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் பணவீக்கம் 7.5 சதவீதமாகவும், 2-வது காலாண்டில் 7.4 சதவீதமாகவும், 3-வது காலாண்டில் 6.2 சதவீதமாகவும், 4-வது காலாண்டில் 5.8 சதவீதமாகவும் இருக்கும். ரிசர்வ் வங்கியின் கட்டுப்படுத்தப்பட்ட இலக்கைவிட பணவீக்கம் அதிகமாகவே இருக்கும். பணவீக்கத்தில் 75 சதவீதம் கணிப்பு உணவுப் பொருட்கள் அடிப்படையாக இருக்கும்

ஜிடிபி வளர்ச்சி மாறாது

நாட்டின் பொருளாதார வளர்ச்சி நடப்பு நிதியாண்டில் 7.2 சதவீதம் என்று கணித்துள்ளதில் எந்த மாற்றமும் இல்லை. நடப்பு நிதியாண்டின் முதல் காலண்டான ஏப்ரல் முதல் ஜூன் வரை ஜிடிபி வளர்ச்சி16.2 சதவீதமாகவும், 2-வது காலாண்டில் 6.2 சதவீதமாகவும், 3-வது காலாண்டில்  4.1 சதவீதமாகவும், 4வது காலாண்டில் 4.0 சதவீதமாகவும் இருக்கும்.

இ-பேமெண்ட் அளவு அதிகரிப்பு

இ-பேமெண்ட் மூலம் கட்டணம் செலுத்தும் அளவு ரூ.5 ஆயிரத்திலிருந்து ரூ.15 ஆயிரமாக ரிசர்வ் வங்கி உயர்த்தியுள்ளது. இதன் மூலம் ரூ.15ஆயிரம் வரை இ-பேமெண்ட் மூலம் கட்டணம் செலுத்தும்போது, அதற்கு ஓடிபி தேவையில்லை. சந்தா செலுத்துதல், காப்பீடு ப்ரீமியம் செலுத்துதல், கல்விக்கட்டணம், ஆகியவற்றுக்கு பணம் செலுத்தும் போது சிரமங்களைச்சந்திப்பதாக எழுந்தபுகாரைத் தொடர்ந்த இந்தத் தளர்வு தரப்பட்டுள்ளது.

யுபிஐ-கிரெடிட் கார்டு இணைப்பு

யுபிஐ மூலம் டெபிட் கார்டுகளை இணைத்துதான் பணம் செலுத்து பொருட்கள், சேவைகளை வாங்கி வந்தோம். இனிமேல் யுபிஐ பேமெண்ட் செயலியில் கிரெடிட் கார்டுகளையும் இணைக்கும் வசதி விரைவில் கொண்டுவரப்படும் என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. முதல்கட்டமாக ரூபேகிரெடிட் கார்டுகள் யுபிஐ பேமெண்ட் மூலம் இணைக்கப்பட்டு, அதன்பின் விசா, மாஸ்டர் கார்டு இணைக்கப்படும்.

PREV

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

Read more Articles on
click me!

Recommended Stories

SBI to Hire: ஸ்டேட் பேங்கில் செம்ம வேலை வாய்ப்பு... ஒவ்வொரு காலாண்டுக்கும் 16000 பேருக்கு வேலை..! 300 புதிய கிளை திறக்கப்படும்.!
AI City Rising: பாலைவனத்தில் உருவாகும் பிரமாண்ட "ஏஐ" தொழில் நகரம்.! அரபு நாடுகளில் உருவாகிறதா "போட்டி" சிலிகன் வேலி?!