
ஆபரணத் தங்கத்தின் விலை இன்று அதிகரித்துள்ளது. தங்கம் கிராம் ஒன்றுக்கு 10 ரூபாயும், சரணுக்கு 80 ரூபாயும் உயர்ந்துள்ளது.
சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்றுவரை கிராம் ரூ.4,760க்கும், சவரண் ரூ.38,080க்கு விற்பனையானது. இன்று காலை நிலவரப்படி சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.10 குறைந்து ரூ.4,770 ஆகவும், சவரணுக்கு, ரூ. 80 உயர்ந்து, ரூ.38 ஆயிரத்து160க்கும் விற்பனையாகிறது.
தங்கத்தின் விலை கடந்த மே 30ம் தேதி முதல் இன்றுவரை கிராமுக்கு ரூ.10 முதல் ரூ30 வரை மட்டுமே ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது. ரொக்கமாக மாற்றக்கூடிய வகையில் தங்கத்தில் முதலீடு செய்வது சிறந்ததாகும்.
அமெரிக்கச் சந்தையில் கடன் பத்திரங்களுக்கு எதிராக டாலர் மதிப்பு உயரவில்லை என்பதாலும், இந்திய ரூபாயின் மதிப்பு கடந்த சில நாட்களாக பெரிதாக சரிவைச் சந்திக்கவில்லை என்பதாலும் தங்கத்தின் விலையில் பெரிதாக மாற்றம் ஏதும் இல்லை. கச்சா எண்ணெய் விலை சர்வதேச சந்தையில் மேலும் அதிகரி்த்தால் தங்கத்தின் விலையில் வரும் நாட்களில் மாற்றம் வரலாம்.
வெள்ளி விலையும் அதிகரித்துள்ளது. வெள்ளி கிராம் ஒன்றுக்கு 30காசுகள் உயர்ந்துள்ளது. வெள்ளி கிராம் ரூ.68 க்கு விற்பனையாகிறது. வெள்ளி ஒரு கிலோ ரூ.68000க்கு விற்பனையாகிறது. வெள்ளி கிலோவுக்கு ரூ.1,000 அதிகரித்துள்ளது.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.