RBI bank: கார்டுஇல்லாமல்,கட்டணமில்லாமல் ஏடிஎம்களில் பணம்: வங்கிகளுக்கு ஆர்பிஐ உத்தரவு

By Pothy RajFirst Published May 20, 2022, 3:54 PM IST
Highlights

rbi bank :கார்டு குளோனிங், ஸ்கிம்மிங், எந்திரத்தை சேதப்படுத்துதல் ஆகியவற்றைத் தவிர்க்கும் பொருட்டு வாடிக்கையாளர்களுக்கு டெபிட்கார்டு இல்லாமல், கூடுதல் கட்டணம் இல்லாமல் யுபிஐ மூலம் பணம் எடுக்கும் வசதிகளை ஏடிஎம்களில் செய்ய வேண்டும் என்று வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.

கார்டு குளோனிங், ஸ்கிம்மிங், எந்திரத்தை சேதப்படுத்துதல் ஆகியவற்றைத் தவிர்க்கும் பொருட்டு வாடிக்கையாளர்களுக்கு டெபிட்கார்டு இல்லாமல், கூடுதல் கட்டணம் இல்லாமல் யுபிஐ மூலம் பணம் எடுக்கும் வசதிகளை ஏடிஎம்களில் செய்ய வேண்டும் என்று வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.

தற்போது ஒரு சில வங்கிகள் மட்டுமே, தங்கள் வாடிக்கையாளர்களுக்கு மட்டும் கார்டுலெஸ் கேஷ் வித்ட்ரால் அதாவது கார்டு இல்லாமல் பணம் எடுக்கும் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளன. மற்ற வங்கி வாடிக்கையாளர்களுக்கு வழங்கவில்லை.
இதனிடையே ரிசர்வ் வங்கி நேற்று வெளியிட்ட சுற்றறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

அனைத்து வங்கிகளும், ஏடிஎம் நெட்வொர்க்களும், ஒயிட் லேபிள் ஏடிஎம்களும் ஏடிஎம் மையங்களில் தங்கள் வாடிக்கையாளர்களுக்காக கார்டுஇல்லாமல்பணம் எடுக்கும் வசதியை உருவாக்கித் தரவேண்டும்.

அனைத்து வங்கி ஏடிஎம் மையங்களுக்கும், வங்கிகளுக்கும் யுபிஐ(upi) வசதியை இந்திய தேசிய பேமெண்ட் கழகம் உருவாக்கித் தரவேண்டும். யுபிஐ மூலம் வாடிக்கையாளர் ஒருவர் ஏடிஎம்களில் பணம் எடுக்கும்போது அதற்கான செட்டில்மென்ட் தேசிய பைனான்ஸியல் ஸ்விட்ச் மூலம் செல்லவேண்டும். ஆதலால் வாடிக்கையாளர் யுபிஐ மூலம் பணத்தை ஏடிஎம்களில் எடுக்கும்போது அந்த பணத்துக்கு கட்டணம் ஏதும் வங்கிகள் வசூலிக்கக்கூடாது” எனத் தெரிவித்துள்ளது.

கார்டு இல்லாமல் QRகோட் மூலம் எவ்வாறு பணம் எடுப்பது… 

1.    உங்கள் வீட்டுக்கோ அல்லது கடைக்கோ அல்லது வேலைபார்க்கும் இடத்துக்கு அருகில் இருக்கும் ஏடிஎம் மையத்துக்குச் சென்று வித்ட்ரா கேஷ் ஆப்ஷன் பட்டனை அழுத்தங்கள்
2.    அதில் யுபிஐ என்று வருவதை தேர்வு செய்யுங்கள்
3.    ஏடிஎம் திரையில் க்யுஆர்(QR) கோட் தெரியும்.


4.    நீங்கள் வைத்திருக்கும் செல்போனில் பதிவேற்றி வைத்துள்ள  கூகுள்பே, போன்பே உள்ளிட்ட பேமெண்ட் செயலி மூலம் ஏடிஎம் திரையில் தெரியும் QR கோடை ஸ்கேன் செய்ய வேண்டும்.
5.    செல்போனில் ஸ்கேன் செய்தவுடன் எவ்வளவு பணம் தேவை என்பதை குறிப்பிட வேண்டும்
6.    அதன்பின் யுபிஐ பாஸ்வேர்டை டைப் செய்ய வேண்டும். இதை சரியாகச் செய்துவிட்டால் உங்கள் வங்கிக்கணக்கிலிருந்து ஏடிஎம் மூலம் பணம் எடுக்கலாம்.

click me!