bank strike 2022: வரும் 30,31ம் தேதிகள் வங்கிகள் வேலை நிறுத்தமா? காரணம் என்ன?

By Pothy RajFirst Published May 20, 2022, 2:55 PM IST
Highlights

bank strike 2022:சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா ஊழியர்கள் வரும் 30 மற்றும் 31ம் தேதிகளில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்தம் செய்யப்போவதாக அறிவித்துள்ளநிலையில் பல்வேறு வங்கி ஊழியர்கள், வங்கி அதிகாரிகள் சங்கங்களும் வேலை நிறுத்தம் செய்யப்போவதாக எச்சரிக்கை விடுத்துள்ளன.

சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா ஊழியர்கள் வரும் 30 மற்றும் 31ம் தேதிகளில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்தம் செய்யப்போவதாக அறிவித்துள்ளநிலையில் பல்வேறு வங்கி ஊழியர்கள், வங்கி அதிகாரிகள் சங்கங்களும் வேலை நிறுத்தம் செய்யப்போவதாக எச்சரிக்கை விடுத்துள்ளன.

இதனால், வரும் 30,31ம் தேதி வங்கிகள் செயல்படுமா, எத்தனை வங்கிகள் செயல்படும் என்பது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
வங்கிக் கிளைகளை மூடுதல், முக்கிய முடிவுகள் மூலம் ஊழியர்களைக் குறைத்தல், மிகப்பெரிய அளவில் ஊழியர்களை பணிமாற்றம் செய்தல், வெளிப்பணி ஒப்படைப்பு போன்ற பிரச்சினைகளை வலியுறுத்தி வேலைநிறுத்தம் நடக்கிறது. இந்த வேலை நிறுத்தத்தில் பேங்க் ஆஃப் பரோடா, பஞ்சாப் சிந்த் வங்கி ஊழியர்களும் பங்கேற்பார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


கத்தோலிக் சிரியன் வங்கி, பேங்க் ஆஃப் இந்தியா, பேங்க் ஆஃப் மகாராஷ்டிரா, தி பெடரல் வங்கி, யுசிஓ வங்கி ஆகிய வங்கிகளின் ஊழியர்கள் கடந்த சில மாதங்களாக தொடர்ந்து வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த வேலை நிறுத்தத்தில் எத்தனை வங்கி ஊழியர்கள் சங்கங்கள் பங்கேற்கப் போகின்றன என்பது அடுத்துவரும் நாட்களில் தெரியவரும்.

மகாராஷ்டிரா வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பு பொதுச்செயலாளர் தேவிதாஸ் துல்ஜாபுர்கர் கூறுகையில் “ ஒட்டுமொத்த வங்கித்துறையையும் கடுமையான அழுத்தம் சூழ்ந்துள்ளது. ஒவ்வொரு வங்கியும் போராடுகிறது. கடந்த 6 ஆண்டுகளாக வங்கிகள் வெளிப்பணி மூலம் ஆட்களை எடுத்து, வேலை செய்கிறார்கள். புதிதாக வேலைக்கு எடுக்கும் முறை நிறது்தப்பட்டுள்ளது”எ னத் தெரிவித்தார்

மகாராஷ்டிரா வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பு தலைவர் நந்தகுமார் சவான் கூறுகையில் “ பெடரல் வங்கி ஊழியர்கள் நிர்வாகத்தை எதிர்த்து பேசினால்கூட அவர்கள் அடக்கப்படுகிறார்கள். வங்கி ஊழியர்கள் சங்க நிர்வாகிகளும் தாக்கப்படுகிறார்கள். வங்கித்துறையில் ஏராளமான காலியிடம் இருக்கிறது. ஆனால், நிரப்பாமல் காலம் தாழ்த்தப்படுவாதல், வேலைப்பளு இருக்கும் ஊழியர்களுக்கு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

மத்திய அரசும், மாநில அரசுகளும் அனைத்து சமூக நிதித்திட்டங்களையும் வங்கி மூலமே செயல்படுத்துவதால் கடும் பணிச்சுமை நிலவுகிறது. வங்கிகளில் ஒவ்வொரு ஆண்டும் ஏராளமானோர் ஓய்வு பெறுகிறார்கள். ஓய்வு பெறும் எண்ணிக்கைக்கு ஏற்பகூட பணிக்கு புதிதாக ஆட்கள் தேர்ந்தெடுக்கப்படுவதில்லை” எனத் தெரிவித்தார்.

இதனால் மே30 மற்றும் 31ம் தேதிகளில் வங்கிகள் வேலைநிறுத்தம் நாடுமுழுவதும் நடக்குமா அல்லது சில வங்கிகள் மட்டும் வேலைநிறுத்தத்தில் பங்கேற்குமா என்பது அடுத்துவரும் நாட்களில் தெரியும்

click me!