lic plan: ரூ.100 ப்ரீமியத்தில் ரூ.75,000 காப்பீடு: ஏழைகளுக்கான எல்ஐசியின் அற்புதமான காப்பீடு தெரியுமா?

By Pothy Raj  |  First Published May 20, 2022, 12:19 PM IST

lic plan: lic share price:  வெறும் 100 ரூபாய் ப்ரீமியம் செலுத்தி, ரூ.75ஆயிரத்துக்கான விபத்துக் காப்பீடு எடுக்கும் திட்டம் எல்ஐசி நிறுவனத்தில் இருக்கிறது. இதுபோன்ற எளிமையான திட்டங்கள் பலருக்கும் தெரவதில்லை அதைத் தெரிந்து கொள்ளலாம்.


வெறும் 100 ரூபாய் ப்ரீமியம் செலுத்தி, ரூ.75ஆயிரத்துக்கான விபத்துக் காப்பீடு எடுக்கும் திட்டம் எல்ஐசி நிறுவனத்தில் இருக்கிறது. இதுபோன்ற எளிமையான திட்டங்கள் பலருக்கும் தெரவதில்லை அதைத் தெரிந்து கொள்ளலாம்.

கொரோனா பெருந்தொற்று பலருக்கும் பல்வேறு பாடங்களைக் கற்றுக்கொடுத்திருக்கிறது. இதில் நிதிப் பாதுகாப்பு அனைவருக்கும் முக்கியம் என்பது முக்கியமான பாடமாகும்.  மக்கள் தங்கள் உடல்நிலைக்கான காப்பீடு மற்றும் சுகாதாரத்துக்கான மருத்துவக் காப்பீடு விஷயத்தில் மிகுந்த கவனத்துடன் உள்ளனர். 

Latest Videos

சாமானிய மக்கள் முதல் பெரிய தொழிலதிபர்கள்வரை பல்வேறுவகையான விபத்துக்காப்பீடுகள், மருத்துவக் காப்பீடுகள் வந்துவிட்டன. இதில் எல்ஐசி நிறுவனம் அறிமுகம் செய்துள்ள காப்பீடு ஆம் ஆத்மி பிமா யோஜனா காப்பீடாகும்.
நாட்டின் மிகப்பெரிய காப்பீடு நிறுவனமான எல்ஐசி, இந்த பிமா யோஜனா காப்பீடு மூலம் காப்பீடு எடுப்பவருக்கு வாழ்நாள் காப்பீடு, விபத்துக் காப்பீடு ஆகியவற்றை வழங்குகிறது. 

இயற்கை மரணம்

இந்த காப்பீட்டில் அளிக்கப்பட்ட விவரங்கள்படி, காப்பீடுதாரர் காப்பீடு எடுத்தபின் காப்பீடு காலத்தில் இயற்கையான முறையில் உயிரிழந்தால், அவரின் வாரிசு தாரர்களுக்கு ரூ.30ஆயிரம் வழங்கப்படும். 

விபத்துக்காப்பீடு பலன்

விபத்துக் காப்பீடு பலன்களின்படி, காப்பீடுதாரர் பாலிசிகாலத்தில் ஏதேனும் விபத்தில் சிக்க நேர்ந்தால், அவருக்கு ரூ.37,500 காப்பீடுத் தொகையாகவழங்கப்படும்.

விபத்தில் உயிரிழந்தால்

ஒருவேளை பாலிசிதாரர், காப்பீடு காலத்தில் இயற்கையான மரணத்தை அடையாமல் விபத்தில் உயிரிழந்தால், அவரின் வாரிசு தாரருக்கு ரூ.75ஆயிரம் காப்பீடு தொகையாக வழங்கப்படும்.  அதாவது காப்பீடு எடுத்தவர் இயற்கையாக மரணமடைந்தால் ரூ.30ஆயிரம், அவரே விபத்தில் உயிரழந்தால் வாரிசுதாரருக்கு ரூ.75ஆயிரம் வழங்கப்படுகிறது

வயது வரம்பு

இந்த காப்பீடு எடுப்பதற்கு 18 வயது முதல் 59 வயதுள்ளவர்கள் அனைவரும் தகுதியுள்ளவர்கள்.

ப்ரீமியம் ரூ.100

இந்தக் காப்பீட்டுக்கான ப்ரீமியம் தொகை ஆண்டுக்கு ரூ.200. இதில் 50 சதவீதத்தை அந்தந்த மாநிலங்கள் அல்லது யூனியன் பிரதேசங்கள் வழங்கிவிடும் என்பதால், காப்பீடு எடுப்பவர்கள் ரூ.100 மட்டும் ஆண்டுக்கு ப்ரீமியமாகச் செலுத்தினால் போதுமானது. அதாவது ரூ.75ஆயிரம் காப்பீடு பெறுவதற்கு பாலிசிதாரர் ரூ.100 மட்டும் ப்ரீமியமாகச் செலுத்தினால் போதுமானது.

click me!