UPI ID: ATM: Debit card வேண்டாம்! Upi முறையில் ஏடிம் மையங்களில் பணம் எடுப்பது எப்படி?

By Pothy RajFirst Published May 20, 2022, 11:24 AM IST
Highlights

UPI ID: ATM :டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு இல்லாமல் ஏடிஎம் மையங்களுக்கு சென்று உங்கள் வங்கிக்கணக்கிலிருந்து பணம் எடுக்க முடியும். யுபிஐ மூலம் எளிதாக பணம் எடுக்கும் வழியைப் பார்க்கலாம்.

டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு இல்லாமல் ஏடிஎம் மையங்களுக்கு சென்று உங்கள் வங்கிக்கணக்கிலிருந்து பணம் எடுக்க முடியும். யுபிஐ மூலம் எளிதாக பணம் எடுக்கும் வழியைப் பார்க்கலாம்.

அதுஎப்படி டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு இல்லாமல் ஏடிஎம் மையத்துக்குச் சென்று வங்கிக்கணக்கிலிருந்து பணம் எடுக்க முடியும் என்று கேட்பது புரிகிறது. இது யுபிஐ முறையில் கூகுள்பே, போன்பே போன்ற செயலிகளைப் பயன்படுத்தி ஏடிஎம் மையத்திலிருந்து பணம் எடுக்கும் வழிமுறையாகும்.

கொரோனா பரவலுக்குப்பின் உலகம் டிஜிட்டல் மயத்தை நோக்கி வேகமாக நகர்ந்து வருகிறது.அதிலும் பணம் எடுத்தல், செலுத்துதலில் யுபிஐ முறைதான் அதிவேகமாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது

2016ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட யுபிஐ(UPI) முறை மூலம் பல்வேறு வங்கிக்கணக்குளை ஒரே கணக்கில் இணைத்துக்கொள்ளலாம். இதன் மூலம் ஆன்-லைனில் பணம் அனுப்பவும், பெறவும் முடியும். இந்திய தேசிய பேமெண்ட் கழகத்தின் கீழ் யுபிஐ செயல்படுகிறது

இந்த என்சிஆர் கழகம் சமீபத்தில் புதிய வழிமுறையை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்படி, ஒருவர் ஏடிஎம் மையத்துக்குச் சென்று டெபிட்கார்டு இல்லாமல் அவரின் வங்கிக்கணக்கிலிருந்து பணம் எடுக்கலாம். இதற்கு அவர் பயன்படுத்தும் யுபிஐ முறையிலிருந்து பணம் எடுக்க முடியும். இதற்கு இன்டர்ஓபேரில் கார்ட்லெஸ் கேஷ் வித்ட்ரால்(ஐசிசிடபிள்யு) என்று பெயராகும். இதாவது கூகுள்பே, போன்பே, பேடிஎம் செயலிகளைப் பயன்படுத்தி பணம் எடுக்கலாம்.

இந்த முறையில் பணம் எடுக்க செல்போனில் இன்டர்நெட் இணைப்பு இருப்பது அவசியம், அதிகபட்சமாக ரூ.5 ஆயிரம் வரை பணம் எடுக்கலாம்.

எவ்வாறு பணம் எடுப்பது… 

1.    உங்கள் வீட்டுக்கோ அல்லது கடைக்கோ அல்லது வேலைபார்க்கும் இடத்துக்கு அருகில் இருக்கும் ஏடிஎம் மையத்துக்குச் சென்று வித்ட்ரா கேஷ் ஆப்ஷன் பட்டனை அழுத்தங்கள்

2.    அதில் யுபிஐ என்று வருவதை தேர்வு செய்யுங்கள்

3.    ஏடிஎம் திரையில் க்யுஆர்(QR) கோட் தெரியும்.

4.    நீங்கள் வைத்திருக்கும் செல்போனில் பதிவேற்றி வைத்துள்ள  கூகுள்பே, போன்பே உள்ளிட்ட பேமெண்ட் செயலி மூலம் ஏடிஎம் திரையில் தெரியும் QR கோடை ஸ்கேன் செய்ய வேண்டும்.

5.    செல்போனில் ஸ்கேன் செய்தவுடன் எவ்வளவு பணம் தேவை என்பதை குறிப்பிட வேண்டும்

6.    அதன்பின் யுபிஐ பாஸ்வேர்டை டைப் செய்ய வேண்டும். இதை சரியாகச் செய்துவிட்டால் உங்கள் வங்கிக்கணக்கிலிருந்து ஏடிஎம் மூலம் பணம் எடுக்கலாம்.


 

click me!