gds post: எழுத்துத் தேர்வு இல்லை! 10 வகுப்பு தேர்ச்சியானால் அஞ்சல்துறையில் பணி: தமிழகத்தில் 4 ஆயிரம் காலியிடம்

By Pothy RajFirst Published May 20, 2022, 2:27 PM IST
Highlights

gds post : india post gds: 10 வகுப்பு மதிப்பெண் அடிப்படையில், எழுத்துத் தேர்வுதேர்வு ஏதும் இல்லாமல்  அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு காத்திருக்கிறது. தமிழகத்தில் மட்டும் 4 ஆயிரம் காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

gds post : india post gds:10 வகுப்பு மதிப்பெண் அடிப்படையில், எழுத்துத் தேர்வுதேர்வு ஏதும் இல்லாமல்  அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு காத்திருக்கிறது. தமிழகத்தில் மட்டும் 4 ஆயிரம் காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இந்திய அஞ்சல் துறை சார்பில் , கிராமங்களில் செயல்படும் கிராம் தக் சேவக்ஸ் என்ற கிராம தபால் ஊழியர், மற்றும் உதவி தபால் ஊழியர் பணிக்கு அஞ்சல் துறை விண்ணப்பங்களைக் கோரியுள்ளது. நாடுமுழுவதும் 38ஆயிரத்து 926 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதில் தமிழகத்தில் மட்டும் 4 ஆயிரத்து 310 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

இந்த பணியிடங்களுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசித் தேர்வு ஜூன் 5ம் தேதியாகும். 
கல்வித் தகுதி: கிராம அஞ்சலக ஊழியர் பணிக்கு விண்ணப்பிப்போர் அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியத்தின் கீழ் அல்லது அரசுப்பள்ளியில் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருத்தல் அவசியம். 

வயது தகுதி:

இந்தப் பணிக்கு 18வயதுமுதல் 40 வயதுள்ளவர்கள் விண்ணப்பிபவர்கலாம். இதில் பட்டியலினத்தவர்களுக்கும், பழங்குடியினருக்கும் 5 ஆண்டுகள் தளர்வும், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகள் தளர்வும் அளிக்கப்படுகிறது.
ஊதியம்: கிராம அஞ்சலக ஊழியருக்கு அடிப்படை ஊதியமாக ரூ12 ஆயிரம் நிர்ணயிக்ககப்பட்டுள்ளது. உதவி அஞ்சலக ஊழியருக்கு ரூ.10ஆயிரம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தேர்வு முறை:

கிராம அஞ்சலக ஊழியர் பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுவோருக்கு எழுத்துத் தேர்வு இல்லை. 10ம் வகுப்பில் எடுத்த மதிப்பெண் அடிப்படையில் பணி வாய்ப்பு வழங்கப்படும். இந்தப் பணிக்கான கட்-ஆஃப் மதிப்பெண் ஏதும் நிர்ணயிக்கப்படவில்லை. பெரும்பாலும் 95 சதவீத மதிப்பெண்கள் எடுத்தவர்களுக்கு பணிவாய்ப்பு கிடைத்துள்ளது. இந்த ஆண்டு எந்த அளவு மதிப்பெண் நிர்ணயிக்கிறார்கள் என்பது தெரியவில்லை. 

விண்ணப்பிக்கும் முறை:

கிராம அஞ்சல் ஊழியர், உதவி அஞ்சல் ஊழியர் பணிக்கு ஆன்லைனில்,  https://indiapostgdsonline.gov.in/ என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.விண்ணப்பங்களை தபால் மூலம் அனுப்பினால் ஏற்கப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கட்டணம்:

இந்த இரு பணிக்கும் விண்ணப்பிக்கும் பொதுபிரிவினர் ரூ.100 கட்டணம் செலுத்த வேண்டும். பட்டியலினத்தவர்கள், பழங்குடியினர், பெண்கள், மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகளுக்கு கட்டணம் ஏதும் இல்லை.

தேர்வு செய்யப்படும் முறை:

இந்த இரு பணிக்கும் நாடுமுழுவதும் விண்ணப்பங்கள் கோரப்பட்டாலும், அந்தந்த மாவட்ட தலைமை அஞ்சலகங்களுக்கு உட்பட்டுதான் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். உதாரணமாக மாவட்ட அஞ்சல் நிலையத்துக்கு உட்பட்டு, விண்ணப்பித்தவர்களில் அதிகமான மதிப்பெண் எடுத்தவர்களுக்கு பணிவாய்ப்பு கிடைக்கும். இந்த இரு பணிகளுக்கும் உள்ளூரைச் சேர்ந்தவர்களுக்கே அதிகமான முன்னுரிமை வழங்கப்பட உள்ளது. ஆதலால், உள்ளூரில் அஞ்சல்துறையில் பணியாற்ற விரும்புவோர் இதற்கு விண்ணப்பிக்கலாம்.

click me!