rbi annual report: வங்கி மோசடிகள்: குறைஞ்சிருக்கு ஆனாலும் கூடியிருக்கு! ஆர்பிஐ 2022 ஆண்டறிக்கை கூறுவதென்ன?

Published : May 27, 2022, 04:16 PM IST
rbi annual report: வங்கி மோசடிகள்: குறைஞ்சிருக்கு ஆனாலும் கூடியிருக்கு! ஆர்பிஐ 2022 ஆண்டறிக்கை கூறுவதென்ன?

சுருக்கம்

rbi annual report :நாட்டில் வங்கிகள் மற்றும் வங்கி அல்லாத பிற நிதிநிறுவனங்களஇல் 2021-22ம் ஆண்டில் மோசடிகள் எண்ணி்க்கை அதிகரித்துள்ளது. ஆனால், அந்த மோசடிகளின் மதிப்பு முந்தைய ஆண்டோடு ஒப்பிடுகையில் பாதியாகக் குறைந்துள்ளது என்று ரிசர்வ் வங்கி தனது 2021-22 ஆண்டறிக்கையில் தெரிவித்துள்ளது.

நாட்டில் வங்கிகள் மற்றும் வங்கி அல்லாத பிற நிதிநிறுவனங்களஇல் 2021-22ம் ஆண்டில் மோசடிகள் எண்ணி்க்கை அதிகரித்துள்ளது. ஆனால், அந்த மோசடிகளின் மதிப்பு முந்தைய ஆண்டோடு ஒப்பிடுகையில் பாதியாகக் குறைந்துள்ளது என்று ரிசர்வ் வங்கி தனது 2021-22 ஆண்டறிக்கையில் தெரிவித்துள்ளது.

2021-22ம் ஆண்டுக்கான ஆண்டறிக்கையை ரிசர்வ் வங்கி இன்று வெளியிட்டது. அதில் கடந்த 2021-22ம் ஆண்டில் நடந்த வங்கி மோசடிகள், வங்கி அல்லாத நிறுவனங்களில் நடந்த மோசடிகள் குறித்து சுட்டிக்காட்டியுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது
2021-22ஆம் ஆண்டில், வங்கி மோசடிகள் ரூ.60ஆயிரத்து 414 கோடிக்கு நடந்துள்ளன. இது 2020-21ம் ஆண்டோடு ஒப்பிடுகையில் 56.28சதவீதம் குறைந்த. அந்த ஆண்டில் ரூ.1.38லட்சம் கோடிக்கு மோசடி நடந்திருந்தது.

ஆனால் வங்கி மோசடிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கடந்த 2021-22ஆம் ஆண்டில் 9ஆயிரத்து103 மோசடிகள் நடந்துள்ளன, இது கடந்த 2020-21ம் ஆண்டில் நடந்த மோசடிகளைவிட 23.69சதவீதம் அதிகமாகும். அந்த ஆண்டில் 7ஆயிரத்து 359 மோசடிகள் மட்டுமே நடந்திருந்தன. 

கடந்த 3 ஆண்டுகளில் மோசடிகளின் எண்ணிக்கையில் தனியார் வங்கிகளில் மோசடி எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ஆனால், மோசடிகளின் மதிப்பைப் பொறுத்தவரை பொதுத்துறை வங்கிகளில் அதிகரித்துள்ளது. தனியார் வங்கிகளைப் பொறுத்தவரை கிரெடிட் கார்டு, டெபிட் கார்டுகளில் மோசடி என்று குறைந்த மதிப்பில்தான் மோசடிகள் நடந்துள்ளன. 

ஆனால், பொதுத்துறை வங்கிகளில் கடன் வாங்கிவிட்டு திருப்பிச் செலுத்தாமல் தப்பி ஓடியது, திருப்பிச் செலுத்தாமல் இருப்பது என்ற வகையில் மோசடிகளின் மதிப்பு அதிகரித்துள்ளது.  

லோன்வாங்கி மோசடி செய்தவகையில் எண்ணிக்கையில் 42 சதவீதமும், மதிப்பின் அடிப்படையில் 97 சதவீதமும் அடங்கியுள்ளது, மதிப்பின் அடிப்படையில் ரூ.58,328 கோடி மோசடி நடந்துள்ளது.” எனத் தெரிவித்துள்ளது.
ரிசர்வ் வங்கி மோசடி என்ற கணக்கீட்டில் ரூ.ஒருலட்சம் மற்றும் அதற்கு மேல் உள்ள தொகையை மட்டுமே கணக்கில் எடுத்துக்கொள்கின்றன.
 

PREV

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

Read more Articles on
click me!

Recommended Stories

அமெரிக்கா, சீனாவுக்கு இணையாக இந்தியா வளர 30 ஆண்டுகள் ஆகலாம்: ரகுராம் ராஜன்
IndiGo: 10,000 கார்கள், 9,500 ஹோட்டல் அறைகள், ரூ.827 கோடி ரீஃபண்ட்... மீண்டும் மீண்டு வந்த இண்டிகோ!