rbi annual report 2021: ரிசர்வ் வங்கியின் 2021-22 ஆண்டு அறிக்கை: 6 முக்கிய அம்சங்கள் என்ன?

By Pothy RajFirst Published May 27, 2022, 2:36 PM IST
Highlights

rbi annual report 2021  : கொரோனா 2-வது அலை, 3-வது அலை என பல்வேறு தடைகள் வந்தபோதிலும் இந்தியப் பொருளாதாரத்தில் தொடர்ந்து மீட்சி இருந்து வருகிறது. கட்டமைப்புரீதியான சீர்த்திருத்தங்கள் அவசியம் ஏற்படுத்த வேண்டும் என்று 2021-22ம் ஆண்டுக்கான ஆண்டறிக்கையில் ரிசர்வ் வங்கி குறிப்பிட்டுள்ளது.

கொரோனா 2-வது அலை, 3-வது அலை என பல்வேறு தடைகள் வந்தபோதிலும் இந்தியப் பொருளாதாரத்தில் தொடர்ந்து மீட்சி இருந்து வருகிறது. கட்டமைப்புரீதியான சீர்த்திருத்தங்கள் அவசியம் ஏற்படுத்த வேண்டும் என்று 2021-22ம் ஆண்டுக்கான ஆண்டறிக்கையில் ரிசர்வ் வங்கி குறிப்பிட்டுள்ளது.

2021-22ம் ஆண்டுக்கான ஆண்டறிக்கையை ரிசர்வ் வங்கி இன்று வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ள முக்கிய அம்சமாக, “ இந்தியாவில் நிலைத்தன்மையுடன் கூடி, சமநிலையான,முழுமையான பொருளாதார வளர்ச்சி ஏற்பட கட்டமைப்பு ரீதியான சீர்திருத்தங்கள் அவசியம். குறிப்பாக பெருந்தொற்றால் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு உதவவும், அவர்களுக்கு புதிய தொழில்நுட்பங்களை கற்றுக்கொடுத்து உற்பத்தியை பெருக்க வேண்டும். பல்வேறு தடைகள் வந்தபோதிலும் இந்தியா பொருளாதார மீட்சி அடைந்து வருகிறது”எ னத் தெரிவித்துள்ளது.

ரிசர்வ் வங்கியின் ஆண்டறிக்கையில் 6 முக்கிய அம்சங்கள்

எதிர்கால வளர்ச்சிக்கான வழி

மதிப்பீடு மற்றும் வாய்ப்புகள் என்ற தலைப்பில் “ நாட்டின் எதிர்கால வளர்ச்சிக்கான முக்கிய வழி என்பது, சப்ளை பகுதியில் இருக்கும் தடைகளை நீக்க வேண்டும், நிதிக்கொள்கையை திறம்படப் பயன்படுத்தி பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த வேண்டும், முதலீட்டுக்கான செலவை அதிகரிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது. இந்தியாவில் நிலைத்தன்மையுடன் கூடி, சமநிலையான,முழுமையான பொருளாதார வளர்ச்சி ஏற்பட கட்டமைப்பு ரீதியான சீர்திருத்தங்கள் அவசியம். குறிப்பாக பெருந்தொற்றால் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு உதவவும், அவர்களுக்கு புதிய தொழில்நுட்பங்களை கற்றுக்கொடுத்து உற்பத்தியை பெருக்க வேண்டும்”

ரஷ்யா-உக்ரைன் போர் தாக்கம்

2022ம் ஆண்டு பிப்ரவரி மாதம்பிற்பகுதியில் உக்ரைன் ரஷ்யா இடையே தொடங்கிய போரால் புவிஅரசியல் பதற்றம் ஏற்பட்டு, உலகப் பொருளாதாரத்துக்கு மோசமான சேதத்தை ஏற்படுத்தியது.

2021ம் ஆண்டுவரை கொரோனாவில் பல அலைகள், சப்ளையில் ஏற்பட்ட பிரச்சினைகள், போக்குவரத்தில் சிக்கல், பணவீக்கம் உயர்வு, நிதிச்சந்தையில் இடையூறுகள் ஏற்பட்டு, நிதிக்கொள்கையின் பாதையை மாற்றிவிட்டன. புவிஅரசியல் தாக்கத்தின் முதல்விளைவு பணவீக்கம் அதிகரித்தது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்தது, உலோகம், உரங்கள் விலை உயர்ந்தன வர்த்தகப் பற்றாக்குறை அதிகரித்து , நடப்புக் கணக்குப்பற்றாக்குறையும் விரிவடைந்தது

 குறைந்த வேகத்தில் மீட்சி

நாட்டின் பொருளாதாரம் கொரோனா தாக்கத்திலிருந்து மீண்டு வருகிறது என்பதை மறுக்க முடியாது. ஆனால், எதிர்பார்த்த வேகத்தில் இல்லாமல் குறைவாக மீள்கிறது. அடுத்தடுத்து வந்த கொரோனா அலைகள்தான் இந்த மந்தநிலைக்கு காரணம். 2021-22ம் நிதியாண்டின் 2-வது காலாண்டிலிருந்துமீட்சி மந்தமானது. இப்போது கொரோனாவிலிருந்து விடுபட்டு நாட்டில் 86.5 சதவீத வயதுவந்தோர் பிரிவினர் தடுப்பூசி முழுமையாகச் செலுத்திவிட்டனர், 3.5 சதவீதம் பேர் பூஸ்டர் டோஸ் செலுத்தியுள்ளனர்.

பணவீக்கம் குறித்த கவலை

நாட்டில் அதிகரித்து வரும் பணவீக்கம் நிலையற்ற தன்மைக்கு உட்பட்டது. சர்வதேச சூழல், புவிஅரசியல் சூழல் மாற்றம் அடைந்து, இயல்பான சூழலுக்கு திரும்பும்போது பணவீக்கமும் குறைந்துவிடும். ஆதலால் பணவீக்கம் என்பது, புவிஅரசியல் சூழலையும் சார்ந்துள்ளது.

உற்பத்தி வரிக் குறைப்பு, ஏற்றுமதியில் கட்டுப்பாடு

சப்ளை பகுதியில் எந்தவிதமான பாதிப்பும் ஏற்படாமல் இருக்க மத்திய அரசு சில நடவடிக்கைகளை எடுத்திருக்கிறது. குறிப்பாக இறக்குமதி செய்யப்படும் கச்சா பருத்திக்கு சுங்கவரி நீக்கப்பட்டுள்ளது, கோதுமை ஏற்றுமதிக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது, பெட்ரோலில் லிட்டருக்கு ரூ.8, டீசலில் ரூ.6 என்ற அளவில் சாலை மற்றும் கட்டமைப்பு செஸ் வரி குறைக்கப்பட்டுள்ளது. ஸ்டீல் பொருட்களில் சிலவற்றுக்கு ஏற்றுமதி வரி அதிகரிக்கப்பட்டுள்ளது.

கச்சா உருக்கு பொருட்கள் சிலவற்றுக்கும், பிளாஸ்டிக் மூலப் பொருட்களுக்கும் இறக்குமதி வரி குறைக்கப்பட்டுள்ளது, சர்க்கரை ஏற்றுமதியில் கட்டுப்பாடு கொண்டுவரப்பட்டுள்ளது. கச்சா சூரியகாந்தி எண்ணெய், சோயா எண்ணெய 20 லட்சம் டன் இறக்குமதி செய்வதில் வேளாண் கட்டமைப்பு மற்றும் சுங்கவரி நீக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கைகள் பொருளாதாரம் இயல்புக்கு திரும்ப வழிவகுக்கும். புவிஅரசியல் சூழலில் இயல்புநிலை, கொரோனோ அலை மீண்டும் வராது இருந்தால் பணவீக்கத்தை விரைந்து கட்டுப்படுத்தி பொருளாதாரம் விரைவாக மீளும்

ஜிடிபி கணிப்பு

புவிஅரசியல் சூழலைக் கணித்து ரிசர்வ் வங்கியின் நிதிக்கொள்கைக் குழு நாட்டின் பொருளாதார வளர்ச்சி 2022-23 நிதியாண்டில் 7.2 சதவீதமாகக் குறையும் என மதிப்பிட்டது. உக்ரைன் ரஷ்யா போருக்கு முன்பிருந்த கணிப்பிலிருந்து 60 புள்ளிகளைக் குறைத்தது. குறிப்பாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பு, இறக்குமதி அதிகரிப்பு போன்றவற்றால் வளர்ச்சி குறைக்கப்பட்டது.

click me!