bharat pay : bbps: பாரத் பில் பேமெண்ட் அமைக்க வங்கி அல்லாத நிறுவனங்களுக்கு சலுகை: ஆர்பிஐ அறிவிப்பு

By Pothy RajFirst Published May 27, 2022, 11:46 AM IST
Highlights

bharat pay : bbps: வங்கி அல்லாத நிறுவனங்கள் பாரத் பில் பேமெண்ட் ஆப்ரேட்டிங் யூனிட் அமைக்க தேவையா சொத்துமதிப்பை ரூ.25 கோடியாகக் குறைத்து ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

வங்கி அல்லாத நிறுவனங்கள் பாரத் பில் பேமெண்ட் ஆப்ரேட்டிங் யூனிட் அமைக்க தேவையா சொத்துமதிப்பை ரூ.25 கோடியாகக் குறைத்து ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

டிஜிட்டல் பேமெண்ட் துறையில் அதிகமான முதலீட்டாளர்கள், நிறுவனங்களை வரவேற்கவும், ஊக்கப்படுத்தவும் சொத்து மதிப்பை ரிசர்வ் வங்கி குறைத்துள்ளது

தற்போது வங்கிஅல்லாத நிறுவனங்கள் பாரத் பில் பேமெண்ட் அமைக்க வேண்டுமென்றால், நிகர சொத்து மதிப்பு ரூ.100 இருக்க வேண்டும் என்ற விதி இருக்கிறது. இது தற்போது ரூ.25 கோடியாகக் குறைக்கப்பட்டுள்ளது. அதாவது ரூ.25 கோடி சொத்து இருக்கும் நிறுவனங்கள் பில் பேமெண்ட் அமைப்பு இயக்க விண்ணப்பகலாம்.

பாரத் பில் பேமெண்ட் சிஸ்டம் என்பது ஒருங்கிணைந்த கட்டணம் செலுத்து அமைப்பு முறையாகும். டிஜிட்டல் ரீதியாக வாடிக்கையாளர்கள் பணம் அனுப்பும் போது, அதை உறுதி செய்து கொள்ளும் பேமெண்ட் கேட்வே அமைப்பாகும். இந்திய தேசிய பேமெண்ட் கழகத்தால் பாரத் பில் பேமெண்ட் சிஸ்டம் நிர்வகிக்கப்படுகிறது. 

ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிவிப்பில் “ வங்கி  அல்லாத நிறுவனங்கள் பாரத் பில் பேமெண்ட் ஆப்ரேட்டிங் யூனிட் அமைக்க ரூ.25 கோடி நிகர சொத்து மதிப்பு இருந்தாலே போதுமானது” எனத் தெரிவித்துள்ளது.

பிபிபிஎஸ் பயன்பாட்டாளர்கள் தரமான பில் பேமெண்ட் அனுபவம், ஒருங்கிணைக்கப்பட்ட வாடிக்கையாளர்குறைதீர்ப்பு முறை, வாடிக்கையாளர்களுக்கு ஏற்ற கட்டணம் ஆகிய பலன்கள் கிடைக்கும். நிகர சொத்து மதிப்பு குறைத்தது தொடர்பாக கடந்த ஏப்ரல் மாதம் மத்திய அரசு ஓர் அறிவிப்பு வெளியிட்ட நிலையில் ரிசர்வ் வங்கி தற்போது வெளியிட்டுள்ளது.

நிகர சொத்து மதிப்பு குறைக்கப்பட்டிருப்பதால் பிபிபிஎஸ் சேவைக்குள் இனிமேல் வங்கி அல்லாத பல்வேறு நிறுவனங்கள், முதலீட்டாளர்கள் ஆர்வத்துடன் முதலீடு செய்வார்கள், பங்கேற்பார்கள். இந்த அறிவிப்பு அவர்களுக்கு உற்சாகத்தை அளிக்கும் என்று தெரிவித்துள்ளது.

click me!