usd to inr: RBI: ரூபாய் மதிப்பு சரிவு:களத்தில் இறங்கிய ரிசர்வ் வங்கி: டாலர் முதலீட்டை ஈர்க்க சலுகைகள்

By Pothy Raj  |  First Published Jul 7, 2022, 4:49 PM IST

அமெரிக்க டாலருக்கு எதிராக இந்திய ரூபாய் மதிப்பு தொடர்ந்து சரிந்து வருவதைத் தடுக்கும் பொருட்டு ரிசர்வ் வங்கி களத்தில் இறங்கி நேற்று பல சலுகைகளை அறிவித்தது.


அமெரிக்க டாலருக்கு எதிராக இந்திய ரூபாய் மதிப்பு தொடர்ந்து சரிந்து வருவதைத் தடுக்கும் பொருட்டு ரிசர்வ் வங்கி களத்தில் இறங்கி நேற்று பல சலுகைகளை அறிவித்தது.

Tap to resize

Latest Videos

குறிப்பாக கடன் பத்திரங்களில் அந்நிய முதலீடு தளர்வு, வர்த்தகரீதியாக வெளிநாடுகளில் கடன் பெறுதல், என்ஆர்ஐ டெபாசிட்களுக்கு சலுகை என பல அறிவிப்புகளை ரிசர்வ் வங்கி வெளியிட்டது.

மோட்டார் வாகனக் காப்பீட்டில் புரட்சி: 3 வித புதிய பாலிசி: விதிகளில் புதிய மாற்றம்

டாலருக்கு எதிராக இந்திய ரூபாய் மதிப்பு தொடர்ந்து சரிந்து வருகிறது. அமெரிக்காவில் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கில் அந்நாட்டு பெடரல் வங்கி வட்டியை உயர்த்தியதிலிருந்து இந்தியாவிலிருந்து அந்நிய முதலீட்டாளர்கள் முதலீட்டை திரும்பப் பெற்றுவருவதுஅதிகரித்து வருகிறது.

இதனால் டாலருக்கு எதிராக ரூபாய் மதிப்பு கடும் நெருக்கடிக்கு ஆளாகி சரிந்து வருகிறது. கடந்த 5ம் தேதிவரை ரூபாய் மதிப்பு 4.1 சதவீதம் சரி்ந்து ரூ.79.30 காசுகளாக உள்ளது. 

எப்பிஐ எனப்படும் அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் மட்டும் கடந்த 6 மாதங்களில் ரூ.2.32 லட்சம் கோடி முதலீட்டை சந்தையிலிருந்து திரும்பப் பெற்றுள்ளனர். கடந்த 9 மாதங்களில் இந்தியாவின் அந்நியச் செலாவணி, 5000 கோடி டாலர்  குறைந்துள்ளது.  இந்தியாவிடம் அந்நியச் செலாவணி கையிருப்பு கடந்த ஜூன் 24ம் தேதிவரை 5933 கோடி டாலர் இருக்கிறது. 

டாலருக்கு எதிராக ரூபாய் மதிப்பு வரும் மாதங்களில் மேலும் வீழ்ச்சி அடையும் அதிகபட்சமாக ரூ.83 வரை வீழ்ச்சி அடையலாம் என நோமுரா நிறுவனம் கணித்துள்ளது. ரூபாய் மதிப்புச் சரிவு ஏற்றுமதியாளர்களுக்கும், வெளிநாடு இந்தியர்களுக்கும் வேண்டுமானால் நல்லதாக அமையும். இந்தியப் பொருளாதாரத்தின் ஆனிவேரை ஆட்டிப்பார்க்கும் செயலாகும். 

இலங்கையில் 60 லட்சம் மக்களுக்கு உணவுப் பாதுகாப்பில்லை: ஐ.நா. எச்சரிக்கை

இந்தியப் பொருளாதாரம் படிப்படியாக சர்வதேச அளவில் மதிப்பை இழக்கத் தொடங்கும், இறக்குமதிக்காக இந்திய அரசு அந்நியச் செலாவணியை அதிகமாகச் செலவிட வேண்டியதிருக்கும். இதனால் காலப்போக்கில் அந்நியச் செலாவணி கையிருப்பு குறைந்து இலங்கையின் நிலைக்கு கூட செல்லலாம். 

பொதுவாக ரூபாய் மதிப்பு சரியும் போது, அந்த சரிவு மோசமாகாமல் இருக்க , சந்தையில் உடனடியாக ரிசர்வ் வங்கி தலையிடும். தன்னிடம் கைவசம் இருக்கும் டாலர்களை சந்தையில் செலுத்தி, ரூபாய் மதிப்பு சரிவைத் தடுக்கும். இதுதான் இயல்பான நடவடிக்கை. 

அந்த வகையில் ரூபாய் சரிவைத் தடுக்கவும், அந்நியச் செலாவணி வரவை அதிகப்படுத்தவும்  தற்போது ரிசர்வ் வங்கி நடவடிக்கை எடுத்துள்ளது. 

சமையல் எண்ணெய் விலை லிட்டருக்கு ரூ.15 வரை குறைகிறது: விவரம் என்ன?

1.    வெளிநாடுகளில் இருக்கும் வங்கிகளிடம் இருந்தும், இந்தியாவில் வசிக்காத வெளிநாடு இந்தியர்களிடம் இருந்தும் எந்தவிதமான வட்டிக்கட்டுப்பாடு இன்றி முதலீடு, டெபாசிட்களை இந்திய வங்கிகள் தற்காலிகமாகப் பெறுவதற்கு அனுமதி. இந்த நடவடிக்கை அக்டோபர் 31ம் தேதிவரை மட்டுமே அனுமதிக்கப்படுகிறது. 

2.    வெளிநாடு வாழ் இந்தியர்கள், எப்என்சிஆர் டெபாசிட்களைப் பெறும்போது, கடைபிடிக்க வேண்டிய ரொக்கக் கையிருப்பு விகிதத்திலிருந்து வங்கிகளுக்கு நவம்பர் 4ம் தேதிவரை விலக்கு அளிக்கப்படுகிறது.

3.    அந்நிய நிறுவன முதலீட்டாளர்களின் முதலீட்டை ஈர்க்கும் வகையில் அரசின் கடன் பத்திரங்களை எளிதாக வாங்கும் வகையில் கட்டுப்பாடுகள்(FAR) தளர்த்தப்பட்டுள்ளன. 

வருகிறது கார், வேன், லாரிகளுக்கான புதிய தரவரிசை: 2023 ஏப்ரலில் அறிமுகம்: விவரம் என்ன?

4.    7 ஆண்டுகள் மற்றும் 14 ஆண்டுகள் வரையிலான கடன் பத்திரங்கள் விற்கவும் அனுமதி அளிக்கப்படுகிறது. 7ஆண்டுகள் வரையிலான கடன் பத்திரத்துக்கு 7.10 சதவீதம் வட்டியும், 14 ஆண்டு கடன் பத்திரத்துக்கு 7.54% வட்டியும் நிர்ணயிக்கலாம்

5.    அரசின் பங்குப்பத்திரங்கள், கார்ப்பரேட் கடன் பத்திரங்களில் அக்டோபர் 31ம் தேதிவரை குறுகிய கால முதலீடு செய்ய விலக்கு அளிக்கப்படுகிறது. 

6.    வெளிப்புற வர்த்தகக் கடன்கள் பெறுவதை 75 கோடி டாலரிலிருந்து, 150 கோடி டாலராக அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த தளர்வுகள் டிசம்பர் 31ம் தேதிவரை இருக்கும்

click me!