ramadan 2022: 2 ஆண்டுகளுக்குப்பின் மும்பையில் களைகட்டும் ரம்ஜான் பஜார்: உணவுப் பிரியர்களின் சொர்க்கம்

Published : Apr 03, 2022, 06:02 PM IST
ramadan 2022:  2 ஆண்டுகளுக்குப்பின் மும்பையில் களைகட்டும் ரம்ஜான் பஜார்: உணவுப் பிரியர்களின் சொர்க்கம்

சுருக்கம்

ramadan 2022:கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக மும்பையில் ரம்ஜான் பஜார் நோன்பு நேரத்தில் களையிழந்து காணப்பட்ட நிலையில், இந்த ஆண்டு புனித ரமலான் நோன்பின் முதல்நாளான இன்று களைகட்டியுள்ளது. 

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக மும்பையில் ரம்ஜான் பஜார் நோன்பு நேரத்தில் களையிழந்து காணப்பட்ட நிலையில், இந்த ஆண்டு புனித ரமலான் நோன்பின் முதல்நாளான இன்று களைகட்டியுள்ளது. 

உணவுப் பிரியர்கள்

உணவுப்பிரியர்களை மதம், இன வேறுபாடின்றி இங்குள்ள கடைக்கார்கள் சிவப்பு கம்பளம்விரித்து வரேவேற்கிறார்கள். இந்த கடைக்குப் பெயர்தான் ரம்ஜான் பஜார், ஆனால், 25 சதவீதம் பேர் மட்டுமே முஸ்லிம்கள் வருகை தருகிறார்கள். மற்றவர்கள் எல்லாம் முஸ்லிம் அல்லாதவர்களும், வெளிநாட்டினரும்தான் அதிகமாக வருகின்றனர்

மும்பையில் உள்ள முகமது அலி ரோடு, மினரா மஸ்ஜித், பெஹந்தி பஜார் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை அடக்கியதுதான் ரம்ஜான் பஜார். இங்குள்ள ஹோட்டல்கள், பாரம்பரியம் மிகுந்த கடைகள், உணவுக்கடைகளில் பெரும்பாலும் 90 சதவீதம் அசைவ உணவுகள்தான் கிடைக்கும்.

2 ஆண்டுகளுக்குப்பின்

இங்குள்ள கடைகளை நடத்தி வருபவர்களில் பலர் பாரம்பரியமாக ஹோட்டல்களை நடத்தி வருபவர்கள். மும்பையில் கொரோனா கட்டுப்பாடுகளை முற்றிலுமாக நீக்கி, முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையிலான மகாவிகாஸ் அகாதி அரசு உத்தரவிட்டுள்ளது. ஆதலால், இந்த ஆண்டு ராம்ஜான் பஜார் களைகட்டும் எனத் தெரிகிறது.

மாலை 6 மணிக்கு மேல், தொழுகையை முடித்துவிட்டு நோன்பு திறக்கப்பட்டுவுடன் வாடிக்கையாளர்களை வரவேற்க கடைக்காரர்கள் காத்திருக்கிறார்கள். 

சிவப்புக் கம்பள வரவேற்பு

கடந்த20 ஆண்டுகளுக்கு மேலாக மாஷா அல்லாஹ் எனும் ஹோட்டல் நடத்தும் அப்துல்லா ரஹ்மான் கான் கூறுகையில் “ உணவுப்பிரியர்களுக்கும், எங்கள் அன்பு வாடிக்கையாளர்களுக்கும் சிவப்புக் கம்பளம்விரித்து வரவேற்க காத்திருக்கிறோம். கடந்த 2 ஆண்டுகளாக இந்த திருவிழாவை இழந்துவிட்டோம். அசைவத்திலும், சைவத்திலும் இதுவரை கேட்டிறாத புதிய வகை உணவுகள், சுவையாக அறிமுகப்படுத்தியுள்ளோம். இனிப்புகள், ஸ்நாக்ஸ் போன்றவற்றிலும் புதிய ரகங்கள், அதிக சுவையுடன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன” எனத் தெரிவித்தார்

லட்சக்கணக்கான குடும்பங்கள்

100 ஆண்டுகளாக மினரா பான் கடையை நடத்திவரும் மோசின் ஷேக் கூறுகையில் “ ரம்ஜான் உணவு மார்கெட் திறக்கப்பட்டாலே அந்த ஆண்டு லட்சக்கணக்கான குடும்பங்களுக்கு நல்ல வாழ்வு கிடைத்துவிடும் என்று அர்த்தம்.400 வகையான அசைவ உணவுகள், 100 வகையான இனிப்பு வகைகள் இங்கு கிடைக்கும். தினந்தோறும் 5ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்புக் கிடைக்கும். மறைமுகமாக ஏராளமானோர் பயன்பெறுவார்கள். விலைவாசி உயர்ந்துவிட்டதால், இந்த முறை உணவுப் பொருட்களின் விலை 50 முதல் 60 சதவீதம் உயர்ந்துள்ளது

இந்த உணவுத் திருவிழாவில் பங்கேற்பதற்காக டெல்லி,பெங்களூரு, கோவா, ஹைதராபாத், ஜெய்பூர், கொல்கத்தா உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் இருந்தும் வெளிநாட்டினரும் இங்கு வருவார்கள்” எனத் தெரிவித்தார்.

PREV

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

click me!

Recommended Stories

Free Training: லட்சங்களில் வருமானம் தரும் தேன்.! 7 நாள் இலவச பயிற்சி! மிஸ்பண்ணாதிங்க.!
ரூ.1 லட்சம் கோடி இருக்கு! உங்கள் பணம்.. மீட்டுக்கொள்ளுங்கள் என பிரதமர் மோடி அறிவிப்பு.. அடேங்கப்பா!