sri lanka economic crisis: எதுக்கும் உதவாது! இலங்கையில் தந்தை மகிந்தா ராஜகபக்சேவைக் கண்டித்த மகன் நமல்

By Pothy Raj  |  First Published Apr 3, 2022, 4:56 PM IST

sri lanka economic crisis: இலங்கையில் சமூக ஊடகங்கள் சேவையை முடக்கி அரசு எடுத்த நடவடிக்கையை பிரதமர் மகிந்தா ராஜபக்சேவின் மகனும் அமைச்சருமான நமல் ராஜபக்சே கடுமையாக விமர்சித்துள்ளார்.


இலங்கையில் சமூக ஊடகங்கள் சேவையை முடக்கி அரசு எடுத்த நடவடிக்கையை பிரதமர் மகிந்தா ராஜபக்சேவின் மகனும் அமைச்சருமான நமல் ராஜபக்சே கடுமையாக விமர்சித்துள்ளார்.

பொருளாதார நெருக்கடி

Latest Videos

undefined

இலங்கை அரசு கடும் பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டு வருகிறது. ஆனால், இறக்குமதிக்கு அரசிடம் அன்னியச்செலவாணி கையிருப்பு இல்லாததால், உணவுப் பொருட்களின் விலை விண்ணை முட்டும் அளவு உயர்ந்துவிட்டது. பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு இந்தியாவிடமும், சர்வதேச நிதியத்திடமும் கடனுதவி கோரியுள்ளது இலங்கை அரசு. 

பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு ஏற்பட்டதால் போக்குவரத்து இலங்கையில் பெரும்பகுதி முடங்கிவிட்டது. இந்தியாவிலிருந்து கப்பல் மூலம் 40ஆயிரம் லிட்டர் டீசல் நேற்று அனுப்பப்பட்டபின் மீண்டும் மின்நிலையங்கள் செயல்படத் தொடங்கியுள்ளன. 13 மணிநேரமாக இருந்த மின்வெட்டு 2 மணிநேரமாகக் குறைக்கப்பட்டுள்ளது

அவசரநிலை

இலங்கையின்  பொருளாதார நெருக்கடியைக் கண்டித்து அதிபர் கோத்தபய ராஜபக்ச இல்லத்தின் முன் போராட்டம் நடந்ததால் அதிபர்  நாட்டில் அவசரநிலையை அறிவித்தார்

 இந்நிலையில் மக்கள் சமூக ஊடகங்கள் வாயிலாகத்தான் கருத்துக்களைப் பரப்பி ஒன்று சேர்கிறார்கள் என்று நினைத்த இலங்கை அரசு நேற்று நள்ளிரவு முதல்  ட்விட்டர், ஃபேஸ்புக், வாட்ஸ்அப், யூடியூப், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட 12 சமூக ஊடகங்களை முடக்கியது.

சமூகஊடகங்கள் முடக்கம்

இலங்கையில் போராட்டத்தைக் கட்டுப்படுத்தவும், மக்களை கூடவிடாமலும் செய்ய சமூக ஊடகங்களை முடக்க அரசு எடுத்த நடவடிக்கைகைய அமைச்சரும், அதிபர் மகிந்தா ராஜபக்சேவின் மகனுமான நமல் ராஜபக்சே கண்டித்து, விமர்சித்துள்ளார்.

எதற்கும்உதவாது

இலங்கை சுற்றுலா மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சரான நமல் ராஜபக்சே ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில் “ விபிஎன் சேவை இருக்கும்போது இதுபோன்ற உங்களின் தடை எதற்கும் உதவாது. சமூக ஊடகங்களை முடக்குவதை நான் ஒருபோதும் ஆதரிக்கமாட்டேன். விபிஎன் சேவையை நான்கூட பயன்படுத்தி சமூக வலைத்தளங்கை பயன்படுத்திவரும்போது இதுபோன்ற தடைகள் எதற்கும் உதவாது. ஆதலால், ஆட்சி அதிகாரத்தில் இருப்போர், அதிகாரிகள் முற்போக்காகச் சிந்தித்து, முடிவை திரும்பப் பெற வேண்டும்” எனத் தெரிவித்தார்.

பசில் ராஜபக்ச ட்விடட்ரில் ஆளும் அரசைச் சாடியதைத் தொடர்ந்து, பிற்பகலில் சமூக ஊடகங்களுக்கானத் தடை விலக்கப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன
 


 

click me!