ஒரே முதலீடு.. உங்கள் பணம் இரட்டிப்பாகும்.. கியாரண்டியான அஞ்சல் அலுவலக சிறப்புத் திட்டம்

By Raghupati R  |  First Published Oct 2, 2023, 10:23 PM IST

அஞ்சல் அலுவலக சிறப்புத் திட்டம் மூலம் மொத்த முதலீட்டில் பணம் இரட்டிப்பாகும். இதன் முழு விவரங்களை இங்கே பார்க்கலாம்.


பணத்தைப் பாதுகாப்பாக வைத்திருக்க தபால் அலுவலகம் பல சேமிப்புத் திட்டங்களைக் கொண்டுள்ளது. தற்போது, இவை அனைத்தும் முதலீட்டிற்கான சிறந்த விருப்பங்களாக உள்ளன. ஆனால் இன்று நாம் உங்களுக்கு போஸ்ட் ஆபீஸின் ஒரு அற்புதமான திட்டத்தைப் பற்றி சொல்லப் போகிறோம்.

இந்தத் திட்டத்தில், முதலீட்டாளர்கள் எஸ்பிஐயின் எஃப்டியை விட அதிக வட்டியைப் பெறுகிறார்கள். இந்தத் திட்டத்தில் நீங்கள் 1, 2, 3 மற்றும் 5 ஆண்டுகளுக்குப் பணத்தை டெபாசிட் செய்யலாம். தற்போது, எஸ்பிஐயில் 5 ஆண்டு எஃப்டி எடுப்பதற்கு, 6.50 சதவீத வட்டி கிடைக்கும்.

Tap to resize

Latest Videos

அதேசமயம், போஸ்ட் ஆபிஸ் டைம் டெபாசிட் திட்டத்தில் 5 ஆண்டுகள் முதலீடு செய்தால், 7.5 சதவீத வட்டி கிடைக்கும். இந்த திட்டத்தை நீங்களும் பயன்படுத்திக் கொள்ளலாம். 1 முதல் 3 ஆண்டுகள் வரை டிடி திட்டத்தை எடுத்துக் கொண்டால், 6.90 சதவீதம் வட்டி கிடைக்கும். இது தவிர, 5 ஆண்டுகள் வரையிலான டெபாசிட்டுகளுக்கு 7.5 சதவீத வட்டி கிடைக்கும்.

எத்தனை நாட்களில் பணம் இரட்டிப்பாகும்?

நீங்கள் TD திட்டத்தில் பணத்தை முதலீடு செய்யப் போகிறீர்கள் என்றால், உங்களுக்கு 7.5 சதவிகிதம் வட்டி கிடைத்தால், உங்கள் பணம் இரட்டிப்பாகும். இதில் நீங்கள் சுமார் 9 ஆண்டுகள் 6 மாதங்கள் அதாவது 114 மாதங்கள் வரை பணத்தை முதலீடு செய்யலாம்.

யார் கணக்கைத் திறக்கலாம்

இந்தத் திட்டத்தில் எந்தவொரு தனி நபர் கணக்கையும் தொடங்கலாம். இது தவிர, 3 பெரியவர்களும் கூட்டுக் கணக்கைத் திறக்கலாம். அதேசமயம் 10 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளின் பெயரில் பெற்றோர்கள் கணக்கு தொடங்கலாம்.

தபால் அலுவலக நேர வைப்புத்தொகையின் நன்மைகள்

நேர வைப்புத்தொகையின் நன்மைகளைப் பற்றி பேசுகையில், இது வருமான வரிச் சட்டம் 1961 இன் பிரிவு 80C இன் கீழ் வரி விலக்கு அளிக்கிறது. கணக்கைத் திறக்கும் போது பரிந்துரைக்கும் முக்கிய வசதி உள்ளது. இதில், முன்கூட்டியே பணம் எடுத்தால் அபராதம் செலுத்த வேண்டும்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

எலக்ட்ரிக் ஸ்கூட்டர் வாங்க பிளான் இருக்கா.. இந்தியாவின் டாப் 5 எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் - முழு விபரம் இதோ !!

click me!