பொது வருங்கால வைப்பு நிதி திட்டம் குறித்தும் அதன் பலன்கள் குறித்தும் இந்த பதிவில் பார்க்கலாம்.
எதிர்காலத்திற்கு பணத்தை சேமிக்க வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமாக குறிப்பாக நடுத்தர வர்க்க மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. எனவே உத்தரவாத வருமானம் மற்றும், பாதுகாப்பான முதலீடு தேவை என்று நினைபப்வர்களுக்கு தபால் நிலைய சேமிப்பு திட்டங்கள் உதவியாக இருக்கும். மத்திய அரசு தபால் நிலையங்கள் பல்வேறு சிறு சேமிப்பு மற்றும் முதலீட்டு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதில் முக்கியமான திட்டம் பொது வருங்கால வைப்பு நிதி திட்டம் (PPF). இந்த பிபிஎஃப் திட்டம் குறித்தும் அதன் பலன்கள் குறித்தும் இந்த பதிவில் பார்க்கலாம்.
யாரெல்லாம் பிபிஎஃப் கணக்கை திறக்கலாம்?
18 வயதுக்கு மேற்பட்ட இந்திய குடியுரிமை பெற்ற எவரும் தபால் நிலையத்தில் பிபிஎஃப் கணக்கை திறக்கலாம். தங்கள் பிள்ளைகள் சார்பாக பெற்றோர் அல்லது பாதுகாவல் இந்த கணக்கதை திறக்கலாம். 2023-24 நிதியாண்டில் இந்த திட்டத்திற்கான தற்போதைய வட்டி விகிதம் 7.1% ஆகும். பல சேமிப்பு திட்டங்கள் மற்றும் வங்கி நிலையான வைப்பு திட்டங்களை விட ஒப்பீட்டளவில் PPF திட்டத்தின் வட்டி விகிதம் அதிகம் என்பது கவனிக்கத்தக்கது.. இது அரசாங்கத்தால் ஆதரிக்கப்படும் சேமிப்புத் திட்டமாக இருப்பதால், முதலீட்டாளர்கள் பாதுகாப்பு பற்றி கவலைப்பட தேவையில்லை.
ஓய்வூதிய விதிகளில் திருத்தம்! பெண் அரசு ஊழியர்களுக்கு கிடைக்கும் புதிய வாய்ப்பு!
இந்த பிபிஎஃப் திட்டத்தில் ஒரு ஆண்டில் குறைந்தபட்சம் ரூ. 500, அதிகபட்சம் ரூ.1.50 லட்சம் வரை முதலீடு செய்யலாம். இந்த கணக்கின் முதிர்வு காலம் 15 ஆண்டுகள் ஆகும். ஆனாலும் முதிர்வு காலத்திற்கு பிறகு 5 ஆண்டுகளுக்கு, இந்த திட்டத்தை நீட்டிக்க முடியும். மேலும் இந்த திட்டத்தில் முன்கூட்டிய திரும்பப் பெறும் வசதியும் உள்ளது. அதே போல் இந்த திட்டத்தில் கடன் பெறும் வசதியும் உள்ளது. எனினும் 5 ஆண்டுகள் தொடர்ச்சியான முதலீட்டை முடித்த பின்னரே முதலீட்டாளர்கள் 3வது நிதியாண்டிலிருந்து கடன் வசதியையும் பெறலாம்.
ரூ.68 லட்சம் எப்படி கிடைக்கும்?
இந்த பிபிஎஃப் திட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் ரூ1.5 லட்சம் அதாவது மாதத்திற்கு ரூ.12,500 முதலீடு செய்ய வேண்டும். இப்படி 15 ஆண்டுகள் முதலீடு செய்தால், முதிர்வு காலத்தில் உங்களின் மொத்த முதலீடு ரூ.22.50,000 ஆக இருக்கும். இதனுடன் 7.1% வட்டியை சேர்த்தால் மொத்த பணம் ரூ.40,68,209 ஆக உயரும்..எனவே இந்த திட்டத்தின் முடிவில் இந்த பணம் உங்களுக்கு கிடைக்கும்.
ஆனால் உங்கள் முதலீட்டை அடுத்த 5 ஆண்டுகளுக்கு அதே முதலீட்டைத் தொடர்ந்தால், உங்கள் மொத்த முதலீடு ரூ.30,00,000 ஆக இருக்கும். 7.1 சதவீத வட்டி விகிதத்தில், நீங்கள் ரூ. 36,58,288 வட்டியாக கிடைக்கும். எனவே முதிர்வு காலத்தில் மொத்தம் ரூ.66,58,288 பணத்தை நீங்கள் பெறலாம். இந்தத் தொகையைக் கொண்டு குழந்தைகளின் மேற்படிப்பு, திருமணம், வீட்டுத் தேவைகளை எந்த சிரமங்களும் இன்றி நிறைவேற்றலாம். நீங்கள் 25 வயதில் கூட பிபிஎஃப் திட்டத்தில் முதலீடு செய்யத் தொடங்கினால், 15 ஆண்டுகளில் நல்ல அளவிலான பணத்தை சேமிக்க முடியும்.
PPF நீட்டிப்பு விதிகள்
இந்தியாவில் வசிக்கும் குடிமக்கள் மட்டுமே பிபிஎஃப் திட்டத்தை நீட்டிக்க முடியும். வேறு எந்த நாட்டின் குடியுரிமை பெற்ற இந்திய குடிமக்கள் இந்த கணக்கை திறக்கலாம். அல்லது ஏற்கனவே கணக்கு வைத்திருந்தால், அதை நீட்டிக்க அனுமதிக்கப்பட மாட்டார்கள். PPF நீட்டிப்புக்கு, நீங்கள் கணக்கு வைத்திருக்கும் வங்கி அல்லது அஞ்சல் அலுவலகத்திற்கு விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும்.
12 லட்சம் சம்பாதிச்சாலும் வருமான வரியே கட்ட வேண்டாம்! இந்த ஐடியாவைத் தெரிஞ்சுக்கோங்க!
முதிர்வு தேதியிலிருந்து 1 வருடம் முடிவதற்குள் இந்த விண்ணப்பத்தை நீங்கள் கொடுக்க வேண்டும். உங்கள் விண்ணப்பத்தில் பிபிஎஃப் கணக்கின் காலம் 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டால், நீங்கள் ஒவ்வொரு வருடமும் குறைந்தபட்சம் 500 ரூபாய் டெபாசிட் செய்ய வேண்டும். இந்த குறைந்தபட்ச தொகையை நீங்கள் டெபாசிட் செய்யவில்லை என்றால், உங்கள் கணக்கு மூடப்படும். அதை மறுதொடக்கம் செய்ய, நீங்கள் ஆண்டுக்கு 50 ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.