புதிய ஓய்வூதிய விதிகளின்படி, பெண் ஊழியர்கள் தனது கணவருக்கு பதிலாக மகன் அல்லது மகளை குடும்ப ஓய்வூதியத்திற்கு பரிந்துரை செய்யலாம்.
வேலைக்குச் செல்லும் பெண்களின் நலனைக் கருத்தில் கொண்டு, பெண் ஊழியர்கள் தங்கள் கணவருக்கு பதிலாக மகன் அல்லது மகள் பெயரை குடும்ப ஓய்வூதியத்திற்கு பரிந்துரை செய்ய மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.
பெண் அரசு ஊழியர்கள் அல்லது ஓய்வூதியம் பெறுவோர் தகுதியுடையோருக்கு குடும்ப ஓய்வூதியம் வழங்க அனுமதிக்கும் வகையில், 2021ஆம் ஆண்டு மத்திய சிவில் சேவைகள் (ஓய்வூதிய) விதிகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, பெண் ஊழியர்கள் தனது கணவருக்கு பதிலாக மகன் அல்லது மகளை குடும்ப ஓய்வூதியத்திற்கு பரிந்துரை செய்யலாம்.
விவாகரத்து, குடும்ப வன்முறை தடுப்புச் சட்டம், வரதட்சணைத் தடைச் சட்டம், இந்திய தண்டனைச் சட்டம் போன்ற சட்டங்களின் கீழ் பதிவான வழக்குகளில் இதன் மூலம் திருத்தம் தீர்வு காண முடியும் என்று மத்திய பணியாளர் நலத்துறை இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் கூறியுள்ளார்.
சமூக பொருளாதாரத்தில் பெண்களுக்கு சமமான உரிமைகளை வழங்கு உறுதி கொண்டிருக்கும் பிரதமர் மோடி தலைமையிலான அரசின் கொள்கைக்கு இணங்க, நீண்டகாலமாக இருந்துவரும் விதியை மத்திய அரசு திருத்தியுள்ளது என்றும் அமைச்சர் ஜிதேந்திர சிங் குறிப்பிட்டுள்ளார்.
இதுவரை குடும்ப ஓய்வூதிய பலனை கணவருக்கு வழங்கும் முறை மட்டுமே இருந்த நிலையில், இனி கணவருக்குப் பதிலாக மகன் அல்லது மகள் குடும்ப ஓய்வூதியத்தைப் பெற தகுதி பெற வாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், புதிய விதிகளின்படி, மகன் மகள் தவிர மற்றொரு வாய்ப்பும் இருக்கிறது. ஒரு பெண் அரசு ஊழியரின் வீட்டில் குழந்தையுடன் ஒரு விதவைப் பெண் வேலைக்குச் செல்ல முடியாத நிலையில் இருந்தால் அவருக்கும் ஓய்வூதியப் பலன்களை வழங்க முடியும்.