பட்ஜெட் 2024: மிடில் கிளாஸ் மக்களின் எதிர்பார்ப்பு என்ன? நிறைவேற்றுவாரா நிர்மலா சீதாராமன்?

By SG Balan  |  First Published Jan 30, 2024, 3:43 PM IST

வரி செலுத்தும் நடுத்தர வர்க்க மக்கள் அரசாங்கம் வரிகளை நிலையானதாகவும், தெளிவாக பிரிக்கப்பட்டதாகவும் வைத்திருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள்.


நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பிப்ரவரி 1ஆம் தேதி நாடாளுமன்றத்தில் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்ய இருக்கிறார். புதிய நாடாளுமன்ற கட்டடத்தில் தாக்கல் செய்யப்படும் முதல் பட்ஜெட்டாக அமைய உள்ளது. தேர்தல் ஆண்டாக இருப்பதால், இது இடைக்கால பட்ஜெட்டாக இருக்கும்.

இடைக்கால பட்ஜெட் என்பது தேர்தலுக்குப் பிறகு புதிய அரசாங்கம் பொறுப்பேற்கும் வரை அரசாங்கத்தின் செலவுகளை உள்ளடக்கிய குறுகிய கால நிதித் திட்டமாகும். மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு புதிய அரசு முழு பட்ஜெட்டை தாக்கல் செய்யும்.

Tap to resize

Latest Videos

undefined

இந்நிலையில், வரி செலுத்தும் நடுத்தர வர்க்க மக்கள் அரசாங்கம் வரிகளை நிலையானதாகவும், தெளிவாக பிரிக்கப்பட்டதாகவும் வைத்திருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள்.

நிர்மலா சீதாராமனின் முதல் இடைக்கால பட்ஜெட்டில் எப்படி இருக்கும்? இப்பவே தெரிஞ்சு வச்சுக்கோங்க!

"கடந்த சில ஆண்டுகளாக அரசாங்கம் பின்பற்றி வரும் கொள்கை கட்டமைப்பை இந்த பட்ஜெட் தொடரும்" என் பொருளாதார வல்லுநர் வினய் ரகுநாத் நம்பிக்கை தெரிவித்துள்ளார். வாகன உதிரிபாகங்களுக்கான ஜிஎஸ்டி வரி விகிதத்தைக் குறைப்பது, குறைந்த கார்ப்பரேட் வரியைப் பெறுவது ஆகியவை குறித்த எதிர்பார்ப்புகள் உள்ளன எனக் கூறியுள்ளார்.

அரசு பொதுத்துறையுடன் தனியார் துறையையும் ஊக்கப்படுத்த வேண்டும் என்று பொருளாதார நிபுணர் சஞ்சிதா முகர்ஜி கூறுகிறார். "அரசாங்கம் உள்கட்டமைப்பு மேம்பாடு, பொருளாதாரம் மற்றும் வேலைவாய்ப்பு உருவாக்கம் ஆகியவற்றில் சிறப்பாகச் செயல்படும் வகையில் நிறைய செலவுகளைச் செய்து பொதுத்துறையினரை ஊக்கப்படுத்தியுள்ளது. இதைத் தொடர வேண்டும்" என்றும் சஞ்சிதா முகர்ஜி கூறியுள்ளார்.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் புதன்கிழமை தொடங்குகிறது. வியாழக்கிழமை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்வார். ஜனவரி 31 முதல் பிப்ரவரி 9 வரை இந்த பட்ஜெட் கூட்டத்தொடர் நடக்க உள்ளது.

5 ட்ரில்லியன் ஜிடிபிக்கு இன்னும் 3 வருஷந்தான்... இந்திய பொருளாதாரம் 3வது இடம் பிடிக்கும்: நிதி அமைச்சகம்

click me!