வெறும் ரூ. 59-ல் டெங்கு, மலேரியாவுக்கு PhonePe காப்பீட்டுத் திட்டம் அறிமுகம்; சேர்வது எப்படி?

By Asianet Tamil  |  First Published Dec 9, 2024, 4:06 PM IST

PhonePe வெறும் ரூ.59-ல் டெங்கு, மலேரியா போன்ற கொசுக்களால் பரவும் நோய்களுக்கான காப்பீட்டுத் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. 


பொதுவாக மழைக் காலங்களில் டெங்கு, மலேரியா போன்ற நோய்கள் அதிகமாக பரவி வருகிறது. சாதாரணமாக மருத்துவமனைக்கு சென்றால் செலவும் அதிகமாகும். காய்ச்சல் என்றாலே அனைத்து வகையான மருத்துவ பரிசோதனைகளும் செய்ய வேண்டியது இருக்கும். இது அனைவருக்கும் சாத்தியமா? என்றால் இல்லைதான். 

மருத்துவ செலவு நாம் எதிர்பார்ப்பது போல் இல்லை. அரசு மருத்துவமனைகளில் மட்டும்தான் இலவச சிகிச்சை பெற முடிகிறது. தனியார் மருத்துவமனை சென்றால் நாம்தான் அனைத்து செலவுகளையும் ஏற்க வேண்டும். இதற்காகவே தற்போது பல்வேறு நிறுவனங்கள் காப்பீட்டுத் திட்டங்களை கொண்டு வந்துள்ளன. இந்த திட்டங்கள் குறித்த விழிப்புணர்வும் பலருக்கும் இருப்பதில்லை. 

Tap to resize

Latest Videos

மருத்துவ காப்பீட்டுத் திட்டம்:
எந்த காப்பீட்டுத் திட்டத்தில் சேர்ந்தால் என்ன பலன் என்பது பலருக்கும் தெரிவதில்லை. புரிதலும் இருப்பதில்லை. ஆண்டுக்கு ஒருமுறை காப்பீடு செலுத்த வேண்டும் என்று பலரும் இந்த திட்டத்தில் சேருவதில்லை. ஆனால், இந்த திட்டம் குறைந்த காப்பீட்டு பிரிமியத்திலும் வந்துவிட்டன. உதாரணத்திற்கு பல காப்பீட்டுத் திட்டங்களில் காய்ச்சல், டெங்கு, மலேரியா போன்றவற்றுக்கு மருத்துவ காப்பீடு கிடைப்பதில்லை. மருத்துவமனையில் அட்மிட் ஆகி சிகிச்சை பெற்றால்தான் காப்பீடு கிடைக்கும் என்ற நிலையும் உள்ளது.

போன்பே (PhonePe) காப்பீட்டுத் திட்டம்:
இதற்காக வந்திருப்பது தான் போன்பே (PhonePe)-வின் காப்பீட்டுத் திட்டம். அதாவது ஆண்டுக்கு வெறும் 59 ரூபாயில் PhonePe காப்பீட்டுத் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. PhonePe காப்பீட்டுத் திட்டம் மலேரியா, டெங்கு காயச்சலுக்கு என்றே கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த காப்பீட்டுத் திட்டத்தில் ஒரு லட்சம் ரூபாய் வரை காப்பீடு பெறலாம். இதுதவிர கொசு சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களுக்கும் இந்த காப்பீடு பொருந்தும். இது டயர் -2, டயர் 3 நகரங்களில் வசிப்பவர்களுக்கு மிகவும் பொருத்தமாக இருக்கும்.

undefined

எத்தனை நாட்களுக்கு போன்பே காப்பீடு பொருந்தும்:
இந்த PhonePe காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் மலேரியா, டெங்கு, சிக்குன்குனியா, ஜப்பான் என்செபாலிடிஸ், ஸ்வைன் ஃப்ளூ, போர்டு ஃப்ளூ, டைபாய்டு, காசநோய் ஆகியவை அடங்கும். மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெறுவது, மருத்துவ பரிசோதனை மேற்கொள்வது, ஐசியு சோதனை ஆகியவை அடங்கும். இது மழைக்காலத்தில் மட்டும் கிடைக்கும் காப்பீட்டுத் திட்டம் இல்லை என்பதை போன்பே உறுதி செய்துள்ளது. போன்பே வைத்திருப்பவர்கள் எப்போது வேண்டுமானாலும் இந்த காப்பீட்டுத் திட்டத்தில் சேரலாம். 

ஏற்கனவே கார்ப்பரேட் ஹெல்த் இன்ஷூரன்ஸ் எடுத்திருக்கும் பயனர்கள் கூட கொசுக்களால் பரவும் நோய்களுக்கு எதிராக கூடுதல் பாதுகாப்புக்காக இந்தத் திட்டத்தைத் தேர்வு செய்யலாம். 

எப்படி இந்த திட்டத்தில் சேருவது:
PhonePe காப்பீடுத் திட்டம்: 
உங்கள் ஸ்மார்ட்போனில் PhonePe பயன்பாட்டைத் தொடங்கவும்.

காப்பீடு' பிரிவுக்கு செல்லவும்:
முகப்புத் திரையில் இருந்து, மெனுவில் அமைந்துள்ள "காப்பீடு" பகுதிக்கு செல்லவும்.

டெங்கு மற்றும் மலேரியா தேர்வு செய்யவும்:
"டெங்கு மற்றும் மலேரியா" இன்சூரன்ஸ் விருப்பத்தை கண்டுபிடித்து கிளிக் செய்யவும்.

திட்ட விவரங்கள் மதிப்பாய்வு:
கவரேஜ் விவரங்கள், காப்பீட்டுத் தொகை மற்றும் பிரீமியம் விவரங்களை செக் செய்யவும் 

பாலிசிதாரர் தகவல்:
பாலிசிதாரரின் பெயர், தொடர்புத் தகவல்களை நிரப்பவும்.

கட்டணம் செலுத்தவும்: 
உங்கள் காப்பீட்டைச் செயல்படுத்த, உங்களுக்கு விருப்பமான கட்டணத்தை தேர்வு செய்யவும். 

உறுதிப்படுத்தல்:
பணம் செலுத்தியதும், உடனடியாக உறுதிப்படுத்தல் பெறுவீர்கள். 

click me!