டெல்லி, இந்தியாவின் தலைநகரம், பல கோடீஸ்வரர்களின் தாயகமாகும். அவர்களின் செல்வம் மற்றும் ஆடம்பரத்தை பிரதிபலிக்கும் வகையில், டெல்லியில் உள்ள சில விலையுயர்ந்த வீடுகளைப் பற்றி இந்தக் கட்டுரை விவரிக்கிறது.
இந்தியாவின் அரசியல் மற்றும் கலாச்சார மையமாக இருக்கும் டெல்லி, நாட்டின் சில செல்வந்தர்களுக்கும் சொந்தமானது. 2024 ஆம் ஆண்டு நிலவரப்படி, டெல்லியில் 57 கோடீஸ்வரர்கள் உள்ளனர். ஃபோர்ப்ஸ் மற்றும் ஹுருன் உலகளாவிய பணக்காரர்களின் பட்டியலில் டெல்லியும் சேர்க்கப்பட்டுள்ளது. தலைநகர் டெல்லி 1 டிரில்லியன் டாலர்களை நெருங்கும் ஒரு கூட்டுச் செல்வத்தைக் கொண்டுள்ளது,
இப்படி செல்வ செழிப்புடன் இருக்கும் டெல்லியில் பல ஆடம்பர வீடுகள் இருப்பதில் எந்த ஆச்சர்யமும் இல்லை. ஆம். இங்குள்ள ஆடம்பரமான வீடுகள் இந்தியாவில் மிகவும் விலை உயர்ந்தவை, அவற்றின் உரிமையாளர்களின் ஆடம்பரத்தையும் செல்வத்தையும் பிரதிபலிக்கிறது. தலைநகரில் உள்ள 7 மிக விலையுயர்ந்த வீடுகள் குறித்து விரிவாக பார்க்கலாம்.
ரேணுகா தல்வாரின் பங்களா:
ரேணுகா தல்வார் ஒரு செல்வாக்கு மிக்க தொழிலதிபர் ஆவார். அவர் டிஎல்எஃப் லிமிடெட் சொகுசுப் பிரிவின் தலைமை நிர்வாக அதிகாரியாக இருக்கிறார். அவர், டெல்லியில் மிகவும் விலையுயர்ந்த வீடுகளில் ஒன்றை வைத்திருக்கிறார். அவர் 2016-ம் ஆண்டு டிடிஐ இன்ஃப்ராகார்ப் நிறுவனத்தின் எம்டியான கமல் தனேஜாவிடமிருந்து இந்த பிரமாண்டமான பங்களாவை ரூ.435 கோடிக்கு வாங்கினார். கிட்டத்தட்ட 5,000 சதுர மீட்டர் பரப்பளவைக் கொண்ட இந்த பங்களா ஒரு சதுர மீட்டருக்கு 8.8 லட்ச ரூபாய்க்கு சொத்து விற்கப்பட்டது. பிருத்விராஜ் சாலையில் பரந்து விரிந்து கிடக்கும் எஸ்டேட், சொகுசு ரியல் எஸ்டேட் துறையில் ரேணுகா தல்வாரின் அந்தஸ்தையும் செல்வாக்கையும் பிரதிபலிக்கிறது.
undefined
சரசரவென சவரனுக்கு ரூ.2400 வரை குறையப்போகுது தங்கம்.! வெளியான முக்கிய தகவல்!!
ஹரிஷ் அஹுஜாவின் பங்களா
இந்தியாவின் ஆடைத் துறையில் முக்கிய பங்கு வகிக்கும் ஷாஹி எக்ஸ்போர்ட்ஸ் பிரைவேட் லிமிடெட்டின் நிர்வாக இயக்குநரான ஹரிஷ் அஹுஜா டெல்லில் ஒரு பிரம்மாண்ட வீட்டை வைத்திருக்கிறார். பிருத்விராஜ் சாலையில் அமைந்துள்ள இந்த வீட்டின் மதிப்பு ரூ.173 கோடி ஆகும். இந்த ஆம்பர 8 மாடி பங்களாவில் அவர் வசித்து வருகிறார். லண்டனின் ஆடம்பரமான நாட்டிங் ஹில்லில் உள்ள வீடு உட்பட பல ஆடம்பர வீடுகளை ஹரிஷ் அஹுஜா வைத்திருக்கிறார். டெல்லியில் இருக்கும் அவரின் ஆடம்பர வீடு அவரின் செல்வத்தின் சிறந்த அடையாளமாகும்,
நவீன் ஜிண்டாலின் சொகுசு பங்களா
ஜிண்டால் ஸ்டீல் அண்ட் பவர் லிமிடெட்டின் பின்னால் உள்ள தொழிலதிபர் நவீன் ஜிண்டால், டெல்லியின் பிரத்தியேகமான லுட்யென்ஸ் பங்களா மண்டலத்தில் (LBZ) ஒரு அரண்மனை போன்ற வீட்டை வைத்திருக்கிறார். 125-150 கோடி ரூபாய் மதிப்புள்ள இந்த ஆடம்பர பங்களா, அவரின் வணிக வெற்றி மற்றும் அரசியல் செல்வாக்கு இரண்டையும் வெளிப்படுத்துகிறது. LBZ பகுதி, அதன் முக்கிய இடம் மற்றும் வரலாற்று முக்கியத்துவத்திற்குப் பெயர் பெற்றது, இந்தியாவின் பல கோடீஸ்வரர்களின் இருப்பிடமாக உள்ளது, மேலும் ஜிண்டாலின் சொத்து அப்பகுதியில் உள்ள தனித்துவமான வீடுகளில் ஒன்றாகும்.
ரூயா மாளிகை
எஸ்ஸார் குழும நிறுவனர்களான ஷஷி மற்றும் ரவி ரூயா ஆகியோருக்குச் சொந்தமான ரூயா மேன்ஷன், நவீன ஆடம்பரத்துடன் இணைந்த காலனித்துவ கட்டிடக்கலைக்கு ஒரு அற்புதமான எடுத்துக்காட்டாக திகழ்கிறது. ரூ.. 92 கோடி ரூபாய் மதிப்புள்ள இந்த பரந்த சொத்து, பரந்த 2.2 ஏக்கர் நிலத்தில் அமைந்துள்ளது. மிகப்பெரிய புல்வெளிகள், ஒரு நீச்சல் குளம் மற்றும் ஆடம்பரமான வாழ்க்கை இடத்தைக் கொண்டுள்ளது. எஸ்ஸார் குழுமத்தை உலகளாவிய நிறுவனமாக மாற்றிய ரூயாவின் வெற்றி மற்றும் பிரமாண்டத்தை பற்றி பேசும் ஒரு மாளிகையை கட்டியுள்ளனர்.
லக்ஷ்மி மிட்டலின் பங்களா
உலக அளவில் பணக்காரர்களில் ஒருவரும், ஆர்சிலர் மிட்டலின் தலைவருமான லக்ஷ்மி மிட்டல், டெல்லியின் லுட்யன்ஸ் மண்டலத்தில் ஒரு ஆடம்பர வீட்டை வைத்திருக்கிறார். தனது குடும்பத்தின் சிறு எஃகுத் தொழிலை உலகளவில் முக்கிய தொழிலாக மாற்றியதற்காக அறியப்பட்ட மிட்டலின் டெல்லி இல்லம் அவரது மிகப்பெரிய வணிக சாதனைகளைப் பிரதிபலிக்கிறது. டெல்லியில் இருக்கும் இந்த பங்களாவை அவர். 31 கோடிக்கு வாங்கியதாக கூறப்படுகிறது.
ரூ.40,000 கோடி சொத்தை உதறி துறவியாக வாழும் மலேசிய இளம் கோடீஸ்வரர்! யார் இவர்?
விஜய் சேகர் சர்மாவின் பங்களா
Paytm இன் நிறுவனரும், இந்தியாவின் இளம் வயது கோடீஸ்வரருமான விஜய் சேகர் சர்மா, பிரத்யேக கோல்ஃப் லிங்க்ஸ் பகுதியில் ரூ. 82 கோடி பங்களாவை வாங்கி உள்ளார். இதன் மூலம் டெல்லியின் ஆடம்பர பங்களா வைத்திருக்கும் கோடீஸ்வரர்கள் பட்டியலில் அவர் சேர்ந்துள்ளார். லுட்யென்ஸ் பங்களா மண்டலத்தில் அமைந்துள்ள இந்த பிரதான ரியல் எஸ்டேட், அதன் மைய இடம், வரலாற்று முக்கியத்துவம் மற்றும் முக்கிய அரசாங்க அலுவலகங்களுக்கு அருகாமையில் இருப்பதால் மிகவும் விரும்பப்படுகிறது. ஷர்மாவின் கையகப்படுத்தல் டெல்லியின் செல்வந்தர்கள் மற்றும் மிகவும் செல்வாக்கு மிக்க நபர்களில் அவரது நிலையை உறுதிபடுத்தி உள்ளது..