petrol diesel price: மோடியின் ஆட்சியில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு குறைவுதான்; ஹர்திப் பூரி சப்பைக்கட்டு

Published : Apr 30, 2022, 10:11 AM IST
petrol diesel price: மோடியின் ஆட்சியில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு குறைவுதான்; ஹர்திப் பூரி சப்பைக்கட்டு

சுருக்கம்

petrol diesel price : ஜிஎஸ்டி வரிக்குள் பெட்ரோல், டீசலைக் கொண்டுவந்தால் மத்திய அரசு மகிழ்ச்சி அடையும், ஆனால் மாநில அரசுகளுக்கு விருப்பமில்லை என்று மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் ஹர்திப் சிங் பூரி தெரிவித்துள்ளார்.

ஜிஎஸ்டி வரிக்குள் பெட்ரோல், டீசலைக் கொண்டுவந்தால் மத்திய அரசு மகிழ்ச்சி அடையும், ஆனால் மாநில அரசுகளுக்கு விருப்பமில்லை என்று மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் ஹர்திப் சிங் பூரி தெரிவித்துள்ளார்.

வரி உயர்வு

பெட்ரோல், டீசலுக்கு மாநிலங்கள் வாட் வரியும்,மத்திய அரசு உற்பத்தி வரியும் விதிப்பதால் பெட்ரோல், டீசலின் உற்பத்திவிலையைவிட, வரி அதிகமாக இருக்கிறது. மக்களும் உண்மையான விலையைவிட ஒரு மடங்கு அதிகமாக வரியாகச் செலுத்துகிறார்கள். 

ஆனால், பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டிக்குள் கொண்டுவந்தால் ஒரு வரியோடு முடிந்துவிடும், விலையும் குறையும். ஆனால், பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டிக்குள் கொண்டுவருவற்கு எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்கள் மட்டுமல்லாது பாஜக ஆளும் மாநிலங்கள்கூட எதிர்ப்புத் தெரிவிக்கின்றன. பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டி வரிவிதிப்புக்குள் கொண்டு மாநிலங்களி்ன் வரிவருவாய் கடுமையாகப் பாதிக்கும் என்பதால், கொண்டுவருவதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கின்றன. 

இந்நிலையில் மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் ஹர்திப் சிங் பூரி நேற்று செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

ஜிஎஸ்டி

நான் புரிந்துகொண்டவரையில் பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டி வரி விதிப்புக்குள் கொண்டு வந்தால், மத்திய அரசு மகிழ்ச்சி அடையும். ஆனால்,பிரச்சினை என்னவென்றால், ஜிஎஸ்டிக்குள் எரிபொருட்களைக் கொண்டுவருவதற்கு மாநில அரசுகளுக்கு விருப்பமில்லை. மது, பெட்ரோல், டீசல் மூலம் கிடைக்கும் வருவாயை இழக்க விரும்பவில்லை. ஆனால் கடன் சுமை அதிகரி்க்கும்போது மற்றவர்களை குற்றம் கூறுவார்கள். இதற்கு பஞ்சாப் உதாரணம்.

பொறுப்பு உணர்தல்

ஒரு மாநில அரசு அதன் பொறுப்பை உணர வேண்டும். பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியைக் குறைத்து மக்களின் சுமையைக் குறைக்க வேண்டும்.  பிரதமர் மோடி இதில் நிலையாக இருக்கிறார், மக்களின் வாழ்வாதாரத்தில் கூட்டாட்சி தத்துவம் சிறப்பாக செயல்பட வேண்டும் என்று பிரதமர் மோடிவிரும்புகிறார். சுமையை சுமப்பது மத்திய அரசுக்கும், மாநில அரசுகளுக்கும் ஒரேமாதிரியாக இல்லை. அதேநேரம் மத்திய அரசு அதன் பொறுப்பை உணர்ந்து செயல்படுகிறது, ஆனால் மாநிலங்கள் அரசுகளும் பொறுப்பை உணர்ந்து பெட்ரோல், டீசல்விவகாரத்தில் செயல்படுவது அவசியம்.

மோடி ஆட்சியில் விலை குறைவு

இன்னும்நாம் பெருந்தொற்றிலிருந்து விடுபடவில்லை. 80 கோடி மக்களுக்கு இன்னும்நாம் உணவு வழங்கி வருகிறோம், தடுப்பூசி வழங்கி வருகிறோம். உக்ரைனில் ராணுவ நடவடிக்கையால், கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 19.56 டாலர் அதிகரித்து, 130 டாலராக அதிகரித்துவிட்டது. பெட்ரோல், டீசல் மீது மத்திய அரசு ரூ.32 உற்பத்தி வரியாக விதித்தது ஆனால் தற்போது அதைக் குறைத்துவிட்டது. 

மோடியின் ஆட்சியில் பெட்ரோல், டீசல்விலை உயர்வு குறைவு. வெறும் 30 சதவீதம்தான், 80 சதவீதம் இல்லை. கடந்த10 ஆண்டுகளில் மக்களின் அடிப்படை வருமானம் அதிகரித்துள்ளது. பல்வேறு திட்டங்களில் பரிவுகளிலும் அரசு இலவசத் திட்டங்களை அறிவித்துள்ளது.

விலை வேறுபாடு

பாஜக ஆளும் மாநிலங்களில் விதிக்கப்படும் வாட் வரி என்பது, பாஜக ஆளாக மாநிலங்களில் விதிக்கப்படும் வாட்வரியில் பாதியளவுதான். சில்லரை விலையில் லிட்டருக்கு ரூ.15 முதல் ரூ.20வரை பாஜக ஆளும் மாநிலங்களிலும், எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களிலும் வேறுபாடு இருக்கும்.

இவ்வாறு ஹர்திப் பூரி தெரிவித்தார்

PREV

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

Read more Articles on
click me!

Recommended Stories

அரசு ஊழியர்கள் வயிற்றில் பாலை வார்த்த மத்திய அரசு.. 1 கோடி குடும்பங்கள் நிம்மதி.!
அனில் அம்பானிக்கு அதிர்ச்சி.! அமலாக்கத்துறை எடுத்த அஸ்திரம்.. இடியாப்ப சிக்கலில் ரிலையன்ஸ் பவர்