apple water bottle: 4,600 ரூபாய்க்கு வாட்டர் பாட்டிலா! ஆப்பிள் நிறுவனம் அறிமுகத்தில் அப்படி என்ன சிறப்பம்சம்?

By Pothy RajFirst Published Apr 29, 2022, 4:23 PM IST
Highlights

apple water bottle: ஆப்பிள் நிறுவனம் ரூ.4600க்கு புதிதாக அறிமுகம் செய்த ஸ்மார்ட் வாட்டர் பாட்டிலை அறிமுகம் செய்துள்ளது. விலைக்கு ஏற்றார்போல் இந்த பாட்டிலிலும் பல்வேறு சிறப்புஅம்சங்கள் உள்ளன.

ஆப்பிள் நிறுவனம் ரூ.4600க்கு புதிதாக அறிமுகம் செய்த ஸ்மார்ட் வாட்டர் பாட்டிலை அறிமுகம் செய்துள்ளது. விலைக்கு ஏற்றார்போல் இந்த பாட்டிலிலும் பல்வேறு சிறப்புஅம்சங்கள் உள்ளன.

ஆப்பிள் நிறுவனம் என்றாலே புத்தாக்கம், புதிய கண்டுபிடிப்பு என்று எதையாவது சேர்த்து பொருளை அறிமுகம் செய்துகொண்டே இருக்கும். உதாரணமாக 1000 டாலரில் முதனமுதலில் மெயின்ஸ்ட்ரீம் டிஜிட்டல் கேமிராவான ஆப்பிள் குயிக்டேக் என்ற பெயரில் ஆப்பிள் அறிமுகம் செய்தது. 1990களில் கியூபர்டினே அடிப்படையிலான கணினியை, லேப்டாப், டேப்ளட் என தொடர்ந்து அறிமுகம் செய்தது.

கடந்த ஆண்டு வித்தியாசமாக பாலிசிங் துணியை அறிமுகம் செய்து பிரபலமாகிவரும் நிலையில், தற்போது ஆப்பிள் ஸ்மார்ட் வாட்டர் பாட்டிலை அறிமுகம் செய்துள்ளது. நிச்சயமாக ஆப்பிள் நிறுவனத்தின் இந்த வாட்டர் பாட்டில் மக்கள் மத்தியில் புழக்கத்துக்குவரும்போது மக்களின் நீர் அருந்தும்பழக்கத்தில் மாற்றம் ஏற்படும். 

அப்படி என்ன விஷேசம் இருக்கு

ஆப்பிள் ஸ்மார்ட் வாட்டர் பாட்டில் விலை 59.95 டாலர் அதாவது இந்திய மதிப்பில் ரூ.4600. ஒருவாட்டர் பாட்டிலுக்கு இந்த விலையா என்று வியப்படையாதீர்கள். ஆப்பிள் பாலிசிங் கிளாத் விலை ரூ.1900. ஆனால் ஆப்பிள் வாட்டர் பாட்டிலுக்காக ரூ.5ஆயிரம் செலவிட்டாலும் அதில் உள்ள அம்சங்கள்நம்மை மெய்சிலிர்க்கவைத்துவிடும். வழக்கமான வாட்டர்பாட்டில், குடிநீர் வழங்காததை ஆப்பிள் வாட்டர்பாட்டிலும், அதில் நிரப்பப்படும் நீரும் வழங்கும்.

ஆப்பிள் வாட்டர் பாட்டல் ஹைட்ரேட்ஸ்பார்க் ப்ரோ மற்றும் ஹைட்ரேட் ஸ்பார்க் ப்ரோ ஸ்டீல் ஆகிய விதங்களில் விற்பனைக்கு வந்துள்ளது. சிவப்பு,  பச்சை, நீலம் ஆகிய 3 நிறங்களில் விற்பனைக்கு அமெரி்க்காவி்ல் வந்துள்ளது.

இந்த ஆப்பிள் வாட்டர்பாட்டல் ஒருவர் தினசரி எவ்வளவு குடிநீர் குடிக்கிறார் என்பதை கண்காணிக்கும். எவ்வளவு குடிநீர் ஒருவர் குடிக்கிறார், எத்தனை முறை குடிக்கிறார், போதுமானதாக இருக்கிறதா என்பதை அறிந்து ஆப்பிள் ஹெல்த் செயலிக்கு தகவல்களை அனுப்பிவிடும்.

ஒருவேளை ஒருநாளுக்குத் தேவையான குடிநீரை ஒருவர் குடிக்கவில்லையென்றால் அதுகுறித்து ஆப்பிள் ஹெல்த் செயலி மூலம் எச்சரிக்கும். இந்த பாட்டலின் அடிப்பகுதியில் இருக்கும் சென்சார் மூலம் ஒருவர் குடிக்கும் குடிநீர் அளவு அளக்கப்பட்டு தகவல் ஆப்பிள் ஹெல்த் செயலிக்கு பரிமாறப்படும்.  அதுமட்டுமல்லாமல் ஆப்பிள் வாட்டர் பாட்டிலில் ஊற்றி வைக்கப்படும் குளிர்ந்த நீர் 24 மணிநேரம் வரை அதே குளிர்ச்சியுடன் இருக்கும்.

click me!