
SBI வாங்கிய ஒர்க் அக்கௌன்ட் என்று அழைக்கப்படும் சம்பள கணக்கை துவங்குவதான் மூலம் என்னென்ன சலுகைகள் நமக்கு கிடைக்கும் என்பதை இந்த பதிவில் தெளிவாக காணலாம். கார்பொரேட் சம்பள கணக்கை பொறுத்தவை ரேடியம், பிளாட்டினம், டைமென்ட், கோல்ட் மற்றும் சில்வர் என்று நான்கு வகை கணக்குகளை கொண்டுள்ளது SBI வாங்கி.
அதாவது உங்களுடைய மாத சம்பளம் 2 லட்சம் ரூபாய்க்கு மேல் இருந்தால் உங்களுக்கு ரேடியம் வகை கணக்கு அளிக்கப்படும். 1 முதல் 2 லட்சத்திற்கு சம்பளம் பெறுபவர்களுக்கு பிளாட்டினம், 1 முதல் 50 ஆயிரம் வரை சம்பளம் பெறுபவர்களுக்கு டைமென்ட், 25 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரை சம்பளம் பெறுபவர்களுக்கு கோல்ட் மற்றும் 10 ஆயிரம் முதல் 25 ஆயிரம் வரை பெறுபவர்களுக்கு சில்வர் கணக்கு வழங்கப்படுகிறது.
Tickets Offers : விமான பயணிகளுக்கு டிக்கெட் சலுகை.. இவ்வளவு குறைந்த விலைக்கா.? முழு விபரம் இதோ !!
சரி இந்த கணக்குகளால் வாடிக்கையாளர்களுக்கு என்ன நன்மை?
முதலில் வருவது ஸிரோ பேலன்ஸ், நீங்கள் பொதுவாக ஒரு வாங்கிக்கணக்கை திறக்கும்போது நம்மால் அதில் ஸிரோ பேலன்ஸ் வைப்பது இயலாது. அப்டியே வைத்தாலும் நிச்சயம் அதற்கான பெனால்டி விதிக்கப்படும். ஆனால் SBIயில் சம்பள கணக்கு வைப்பவர்களுக்கு Zero Balance வசதி அளிக்கப்படுகிறது.
மேலும் விமான விபத்து காப்பீடு, தனி நபர் விபத்து காப்பீடு உள்ளிட்ட சில சேவைகளையும் SBIயில் சம்பள கணக்கை துவங்குவதான் மூலம் வாடிக்கையாளர்கள் பெற முடியும். மேலும் தனி நபர் கடன், கல்வி கடன் உள்ளிட்டவை பெற வாய்ப்புகளை அளிக்கிறது SBIயின் சம்பள கணக்கு.
ஓவர் ட்ராப்ட் என்று அழைக்கப்படும் முறையில் சில குறிப்பிட்ட வாடிக்கையாளர்கள் மட்டும் தங்கள் இரண்டு மாத சமபலத்தை முன்கூட்டியே எடுத்துக்கொள்ளும் வசதியும் SBIயில் துவங்கப்படும் சம்பள கணக்கில் ஒரு சேவையாக பெறமுடியும். இதுபோன்ற பல சிறப்பான சலுகைகளை நீங்கள் SBIயில் உங்கள் சம்பள கணக்கை திறக்கும்போது உங்கள் பெறமுடியும். கூடுதல் தகவல்கள் பெற SBI வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தை நீங்கள் அணுகலாம்.
வங்கிக்கடன் வாங்கியவர்களுக்கு குட்நியூஸ்.. வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி போட்ட அதிரடி உத்தரவு
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.