edible oil price: இல்லத்தரசிகளுக்கு இனிய செய்தி! சமையல் எண்ணெய் விலை லிட்டருக்கு ரூ.15 குறைக்க அரசு உத்தரவு

By Pothy RajFirst Published Jul 9, 2022, 11:19 AM IST
Highlights

சர்வதேச சந்தையில் சமையல் எண்ணெய் விலை கடுமையாகச் சரிந்துவிட்டதால்,இந்தியாவில் உள்ள எண்ணெய் உற்பத்தியாளர்கள் சமையல் எண்ணெயை லிட்டருக்கு ரூ.15 வரை குறைக்க மத்திய உணவுத்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

சர்வதேச சந்தையில் சமையல் எண்ணெய் விலை கடுமையாகச் சரிந்துவிட்டதால்,இந்தியாவில் உள்ள எண்ணெய் உற்பத்தியாளர்கள் சமையல் எண்ணெயை லிட்டருக்கு ரூ.15 வரை குறைக்க மத்திய உணவுத்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

Latest Videos

இதையடுத்து, மதர் டெய்ரி நிறுவனம் தன்னுடைய தயாரிப்பான சோயாபீன் மற்றும் ரைஸ் பிரான் எண்ணெய் விலையை லிட்டருக்கு ரூ.15 வரை குறைத்துள்ளது. டெல்லி மற்றும் என்சிஆர் பகுதிகளில் பால் சப்ளையில் முக்கிய பங்கு வகிக்கும் மதர் டெய்ரி நிறுவனம் சமையல் எண்ணெயும் விற்பனை செய்து வருகிறது குறிப்பிடத்தக்கது.

மத்திய உணவுத்துறை மற்றும் உணவு வழங்கல் பிரிவு அமைச்சகத்துக்கு மத்திய அரசு பிறப்பித்த உத்தரவில் “ சர்வதேச சந்தையில் சமையல் விலை கடுமையாகச் சரிந்துள்ளது. ஆனால், இந்தியாவில் சில்லரை விற்பனையில் சமையல் எண்ணெய் விலை எதிர்பார்த்த அளவு குறையவில்லை. ஆதலால், சமையல் எண்ணெய் விலையை லிட்டருக்கு ரூ.15 வரை உடனடியாக குறைக்க உத்தரவிடுங்கள்” எனத் தெரிவித்துள்ளது.

அதேநேரம், “ சமையல் எண்ணெய் உற்பத்தியாளர்கள், சுத்திகரிப்பாளர்கள், சர்வதேச அளவில் சமையல் எண்ணெய் விலை குறைந்ததைக் கருத்தில் கொண்டு உள்நாட்டில் எண்ணெய் விலையை உடனடியாகக் குறைக்க வேண்டும்” என்று மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

கடந்த இரு நாட்களுக்கு முன் சமையல் எண்ணெய் உற்பத்தியாளர்களுடன் மத்திய உணவுத்துறை அமைச்சக அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர். அந்தக் கூட்டத்தின் முடிவில் உணவுத்துறை செயலாளர் சுதான்ஷு பாண்டே அளித்த பேட்டியில் “ விரிபான அறிக்கையை எண்ணெய் உற்பத்தியாளர்களிடம் அளித்தோம். சர்வதேச அளவில் சமையல் எண்ணெய் விலை 10 சதவீதம் குறைந்துள்ளது. இந்த விலைக் குறைப்பின் பலன் நுகர்வோர்களுக்கு கிடைக்க வேண்டும். ஆதலால் சில்லரை விலையை குறைக்கக் கேட்டுள்ளோம்” எனத் தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து, மதர் டெய்ரி நிறுவனம் சார்பில் சோயா பீன் எண்ணெய் மற்றும் ரைஸ் பிரான் சமையல் எண்ணெய் விலையை லிட்டருக்கு ரூ.15 குறைத்துவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சூரியகாந்தி எண்மெய் அடுத்த 15 நாட்களில் லிட்டருக்கு ரூ.15 குறைக்கப்படும் எனவும் மதர் டெய்ரி நிறுவனம் தெரிவித்துள்ளது.

click me!