gold rate today: தங்கம் விலை தொடர்ந்து உயர்வு! கவலையில் நடுத்தர மக்கள்: இன்றைய நிலவரம் என்ன?

By Pothy RajFirst Published Jul 9, 2022, 10:24 AM IST
Highlights

ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து 2-வது நாளாக இன்றும் உயர்ந்துள்ளது.. சென்னையில் இன்று காலை தங்கம் விலை கிராம் ஒன்றுக்கு 13ரூபாயும், சவரனுக்கு 104 ரூபாயும் அதிகரித்துள்ளது. 

ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து 2-வது நாளாக இன்றும் உயர்ந்துள்ளது.. சென்னையில் இன்று காலை தங்கம் விலை கிராம் ஒன்றுக்கு 13ரூபாயும், சவரனுக்கு 104 ரூபாயும் அதிகரித்துள்ளது. 

சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று மாலை நிலவரப்படி கிராம் ரூ.4,676க்கும், சவரண் ரூ.37,408க்கும் விற்கப்பட்டது. இன்று காலை நிலவரப்படி சென்னையில் 22காரட் ஆபரணத் தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ.13உயர்ந்து, ரூ4,689 ஆகவும், சவரனுக்கு ரூ.104 ஏற்றம் கண்டு ரூ.37,512க்கும் விற்கப்படுகிறது.

தங்கத்தின் விலை தொடர்ந்து 2-வது நாளாக உயர்ந்திருக்கிறது. கடந்த 6,7 தேதிகளில் மட்டும் தங்கம் சவரனுக்கு ரூ.1064 குறைந்தது. சவரன் ரூ.38ஆயிரத்தில் இருந்த தங்கம் விலை திடீரென ரூ37ஆயிரத்துக்கு குறைந்தது. 

ஆனால், கடந்த இரு நாட்களாக மீண்டும் தங்கம் விலை உயரத் தொடங்கினாலும், இன்னும் சவரன் ரூ.38ஆயிரத்தை எட்டவில்லை. 

அமெரிக்க பெடரல் வங்கி வட்டி வீதத்தை உயர்த்தும் என்ற எதிர்பார்ப்பு காரணமாக, முதலீட்டாளர்கள் தங்கத்தில் முதலீடு செய்வதைவிட டாலரில் முதலீடு செய்வது பாதுகாப்பானது, அதிகமான வட்டி கிடைக்கும் என நம்புகிறார்கல். இதனால், சர்வதேச அளவில் தங்கத்துக்கான தேவை, முதலீடு குறைந்துள்ளது. 

 டாலர் மதிப்புதான் வலுப்பெறும், தங்கத்தின் மதிப்பு குறைவதற்கு வாய்ப்புள்ளது. ஆதலால், பெடரல் வங்கியின் வட்டி குறித்த அறிவிப்பு தங்கத்தின் விலையில் மாற்றத்தைக் கொண்டுவரும். 
இதன் காரணமாகவே கடந்த 2 நாட்களாக தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.ஆயிரத்துக்கு மேல் குறைந்திருந்தது.  

தங்கம்  இறக்குமதியைக் கட்டுப்படுத்த மத்திய அரசு தங்கத்துக்கான இறக்குமதி வரியை 7.5 சதவீதத்திலிருந்து 15 சதவீதமாக உயர்த்தியுள்ளது. இந்தக் காரணியும் தங்கத்தின் விலையில் தாக்கத்தை ஏற்படுத்தலாம்.

வெள்ளி விலை இன்று சிறிது உயர்ந்துள்ளது. வெள்ளி கிராம் ஒன்றுக்கு 30 காசு  அதிகரித்து ரூ.62.80க்கு விற்பனையாகிறது. வெள்ளி ஒரு கிலோ ரூ.300 அதிகரித்து, ரூ.62,800க்கு விற்கப்படுகிறது. கடந்த 2 நாட்களில் மட்டும் வெள்ளி விலை 400 அதிகரித்துள்ளது.

click me!