நன்கொடை மட்டும் 123 கோடி வழங்கிய பெண்.. அப்போ இவரின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

By Asianet TamilFirst Published Apr 15, 2024, 4:07 PM IST
Highlights

பாகிஸ்தானின் பணக்காரர் ஷாகித் கானின் மகள் ஷன்னா கான் சுமார் 123 கோடி நன்கொடை வழங்கி உள்ளார்.

ரூ. 969627 கோடி சொத்து மதிப்புள்ள முகேஷ் அம்பானி இந்தியா மட்டுமின்றி ஆசியாவிலும் மிகப் பெரிய பணக்காரர் ஆவார். ன் இந்தியாவின் மிக மதிப்புமிக்க நிறுவனமான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் தலைவராகவும் இருக்கிறார். இந்தியாவின் பெரும் பணக்காரரான முகேஷ் அம்பானியைப் போலவே, பாகிஸ்தானின் பணக்காரர் ஷாஹித் கானும் அவ்வப்போது தலைப்பு செய்திகளில் இடம்பிடிப்பவர்.

தனது வணிக முதலீடுகள், ஆடம்பரமான வாழ்க்கை முறை மற்றும் நன்கொடை ஆகியவற்றுக்காக அவர் பிரபலமாக இருக்கிறார். பாகிஸ்தானிய தொழிலதிபர் ஷாஹித் கான் பல்வேறு தொழில்களை நடத்தி வருகிறார். மேலும் தனது செல்வத்தின் பெரும்பகுதியை விளையாட்டு தொடர்பான முயற்சிகளில் முதலீடு செய்துள்ளார்.. ஷாஹித் கானின் நிகர மதிப்பு ரூ.99598 கோடிக்கு மேல் உள்ளது என்று மதிப்பிடப்பட்டுள்ளது..

ரூ.15000 கோடி மதிப்புள்ள அம்பானி வீட்டையே மிஞ்சிய.. வீட்டை வைத்திருக்கும் இந்த பெண்ணை தெரியுமா?

மேலும் அவர் தேசிய கால்பந்து லீக்கின் (NFL) ஜாக்சன்வில்லே ஜாகுவார்ஸ் அணியின் உரிமையாளர் ஆவார். அவர் தனது மகன் டோனி கானுடன் சேர்ந்து ஆல் எலைட் மல்யுத்தத்தின் (AEW) இணை உரிமையாளராகவும் உள்ளார், அவர் தனது தந்தையின் பல வணிக முயற்சிகளையும் கவனித்துக்கொள்கிறார். ஷாஹித் கான் மற்றும் அவரது மகன் டோனி கான் சமூக ஊடகங்களில் மிகவும் பிரபலமானவர்கள். ஆனால் ஷாஹித் கானின் மகள் ஷன்னா கான் பற்றி மக்களுக்கு அதிகம் தெரியாது.

ஷன்னா கான் ஒரு நன்கொடையாளர், தொழிலதிபர் மற்றும் காங்கிரஸ் பிரதிநிதி ஆவர். ஷன்னாவின் பிறப்பின் அடிப்படையில் பாகிஸ்தானியராக அவர் தனது சகோதரர் டோனி கானைப் போலவே அமெரிக்காவின் இல்லினாய்ஸில் பிறந்து வளர்ந்தார். ஷன்னா அவர் யுனைடெட் மார்க்கெட்டிங் கம்பெனியின் இணை உரிமையாளராகவும் உள்ளார், இது சிறப்பு பேக்கேஜிங் வடிவமைப்பு அமைப்பாகும்.

ஷாஹித் கானின் மகள் ஷன்னா கான் ஜாகுவார்ஸ் அறக்கட்டளை மூலம் தனது தொண்டு முயற்சிகளுக்கு பெயர் பெற்றவர். பாதிக்கப்படக்கூடிய இளைஞர்களுக்கும் அவர்களது குடும்பங்களுக்கும் உதவுவதில் ஆர்வம் காட்டி வருகிறார்.. Wolf Point Advisors இன் நிர்வாக இயக்குநர் ஜஸ்டின் மெக்கேபை மணந்த ஷன்னா கான்,  $20 மில்லியனுக்கும் அதிகமான சொத்து மதிப்பைக் கொண்டிருப்பதாக நம்பப்படுகிறது.

பல்கலைக்கழகத்தில் ஒருங்கிணைந்த புற்றுநோயியல் திட்டத்தை மேம்படுத்தும் நோக்கத்துடன், ஷன்னா கானும் அவரது குடும்பத்தினரும் கடந்த ஆண்டு இல்லினாய்ஸ் பல்கலைக்கழக கால்நடை போதனா மருத்துவமனைக்கு ரூ.123 கோடி நன்கொடை அளித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

click me!