Oilprices: கச்சா எண்ணெய் விலை உயர்வால் இந்தியாவுக்கு என்ன பாதிப்பு? வட்டிவீதம் உயருமா ஆர்பிஐக்கு நெருக்கடி?

By Pothy RajFirst Published Mar 7, 2022, 12:01 PM IST
Highlights

crude Oil price today: சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை பேரல் 139 டாலரை எட்டியதால் இந்தியாவுக்கு என்னவிதமான பாதிப்பு ஏற்படும், ரிசர்வ் வங்கிக்கு எந்தமாதிரியான அழுத்தம் ஏற்படும், கடனுக்கான வட்டீவிதத்தை உயர்த்தி பணவீக்கத்தைக்கட்டுப்படுத்துமா போன்ற கேள்விகள் எழுந்துள்ளன.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை பேரல் 139 டாலரை எட்டியதால் இந்தியாவுக்கு என்னவிதமான பாதிப்பு ஏற்படும், ரிசர்வ் வங்கிக்கு எந்தமாதிரியான அழுத்தம் ஏற்படும், கடனுக்கான வட்டிவிதத்தை உயர்த்தி பணவீக்கத்தைக்கட்டுப்படுத்துமா போன்ற கேள்விகள் எழுந்துள்ளன.

பொருளாதாரத் தடை

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்ததையடுத்து, அந்த நாட்டின் மீது அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன் நாடுகள் பொருளாதாரத் தடை விதித்துள்ளன. ரஷ்யாவிலிருந்து பொருட்கள் இறக்குமதி செய்யத் தடைவிதிக்கப்பட்டுள்ளது. ஆனால், ஐரோப்பிய நாடுகளுக்கு 60 சதவீதம் ரஷ்யாவிலிருந்துதான் கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு இறக்குமதியாகிறது. அமெரிக்காவும் ரஷ்யாவின் கச்சா எண்ணெயை நம்பித்தான் இருக்கிறது.

கச்சா எண்ணெய் விலை

இந்நிலையில் ரஷ்யாவிலிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி தடையால், ஐரோப்பாவிலும், அமெரிக்காவிலும் தட்டுப்பாடு ஏற்படும் என அஞ்சி கச்சா எண்ணெய்க்கான தேவை சர்வதேச சந்தையில்அதிகரித்ததால் இன்று ஒரு பேரல் 140 டாலர் வரை உயர்ந்தது. இதனால், உலக நாடுகள் அதிர்ச்சியி்ல் உறைந்துள்ளன.கடந்த 14 ஆண்டுகளுக்குப்பின் கச்சா எண்ணெய் விலை இந்த அளவு உயர்ந்ள்ளது

இந்தியாவுக்கு பாதிப்பு என்ன

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர, உயர, இந்திய ரிசர்வ் வங்கிக்கும் கடும் நெருக்கடி ஏற்பட்டு வருகிறது. கச்சா எண்ணெய் விலை உயரும்போது எண்ணெய் நிறுவனங்கள் வேறுவழியின்றி பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தும். பெட்ரோல், டீசல் விலை உயர்ந்தால், போக்குவரத்துக்கட்டணம் உயர்ந்து, பல்வேறு பொருட்கள், அத்தியாவசியப் பொருட்கள் விலை உயர்ந்து  நாட்டில் சில்லரை பணவீக்கம் அதிகரிக்கும். 

பணவீக்கம் அதிகரிக்கும்

பணவீக்கம் அதிகரிப்பால்  பொருளாதார வளர்ச்சியும் பாதிக்கும் என்பதால் அதைக் கட்டுப்படுத்த வேண்டிய பொறுப்பு ரிசர்வ் வங்கிக்கு இருக்கிறது. கடந்த 2020ம்ஆண்டு மார்ச் மாதத்திலிருந்து  நிதிக்கொள்கைக் கூட்டத்தில்கடனுக்கான வட்டி வீதத்தை மாற்றாமல் 4.5% என்ற வீதத்திலேயே ரிசர்வ் வங்கி வைத்திருக்கிறது. பணவீக்கமும் ரிசர்வ் வங்கி நிர்ணயித்த 6% க்குள் இருப்பதால் வட்டி உயர்த்தப்படவில்லை.

ஆனால், கச்சா எண்ணெய் விலை உயர்வால் நிச்சயம் சராசரி ப ணவீக்கம் 6% அளவு அதிரிக்கும், இப்போது சராசரி பணவீக்கம் 4.5% அளவு இருக்கும்போது, 6% சராசரி பணவீக்கம் உயரும்போது ரிசர்வ் வங்கிக்கு நெருக்கடியும், அழுத்தமும் அதிகரிக்கும். ஆதலால், கடனுக்கான வட்டி வீதத்தை உயர்த்த வேண்டிய சூழல் உருவாகும்.

வட்டிவீதம் அதிகரிக்கும், பொருளாதார வளர்ச்சி குறையும்

ஏற்கெனவே நாட்டின் பொருளதார வளர்ச்சி மந்தமாக இருக்கிறது, கொரோனா பாதிப்பிலிருந்து சிறு,குறு,நடுத்தர நிறுவனங்கள் முழுமையாக மீளவில்லை என்பதால்தான் வட்டிவீதம் உயர்த்தப்படாமல் இருக்கிறது. 

ஆனால், சர்வதேச சூழல் காரணமாக கடனுக்கான வட்டி வீதத்தை ரிசர்வ் வங்கி உயர்த்தினால், தற்போது கடன்பெற்று தொழில்செய்யும் நிறுவனங்கள் அனைத்தும் வட்டியை அதிகமாகச்செலுத்த வேண்டியதிருக்கும். பொருளாதார வளர்ச்சிக்கும் அழுத்தம் ஏற்படும், குறையத்தொடங்கும்.

வட்டி வீதத்தை உயர்த்தினால் மட்டுமே பணவீக்கத்தை கட்டுப்படுத்த முடியும் என்பதால்,ரிசர்வ் வங்கிக்கு வட்டிவீதத்தை உயர்த்தும் ஆயுதத்தை மட்டுமே கையில் எடுக்கும். இப்படியான இக்கட்டான நிலைில் ரிசர்வ்வங்கி சிக்கியுள்ளது

மத்திய அரசுக்கு நெருக்கடி 

அப்சர்வேட்டரி குரூப்பின் பொருளதார ஆய்வாளர் ஆனந்த் நாராயன் கூறுகையில் “ பணவீக்கம் உயர்வு, எதிர்பார்த்த பொருளாதார வளர்ச்சி இல்லாதது போன்றவை ஆளும் அரசின் கனவுகளை கலைக்கும். கச்சா எண்ணெய் விலை உயர்வால், அடுத்த நிதியாண்டு நாட்டில் பணவீக்க சராசரி 6%மாக  இருக்கும். தற்போது சராசரி பணவீக்கம் 4.5சதவீதமாக குறைந்துள்ளது. இதனால் வேறுவழியி்ல்லாமல் வட்டிவீதத்தை ரிசர்வ் வங்கி உயர்த்தலாம்” எனத் தெரிவித்தார்.

வட்டிவீதம் உயரலாம்

எஸ்பிஐ வங்கியின் பொருளாதார வல்லுநர் சவுமியா காந்தி கோஷ் கூறுகையில் “ கச்சா எண்ணெயும் பணவீக்கமும் ஒன்றோடு ஒன்று தொடர்புடையது. கச்சா எண்ணெய் விலை உயர்ந்தால், பணவீக்கமும் உயரும். ஆனால், இதைக் தடுக்கும் வழி அரசிடம்தான் இருக்கிறது. அல்லது பாதிப்பை பாதியளவாகக்கூட அரசால் குறைக்க முடியும். பெட்ரோல், டீசலில் 10% உயர்வு, பணவீக்கத்தில் 50 முதல் 55 புள்ளிகள் உயர்த்திவிடும் என்பதால், ரிசர்வ் வங்கி கவனமாகக் கையாளும்” எனத் தெரிவித்தார்.

விலைவாசி உயர்வு

கச்சா எண்ணெய் மட்டுமல்லாமல் சமையல் எண்ணெய், சூர்யகாந்தி எண்ணெய் விலையும் அதிகரித்து வருகிறது. சூர்யகாந்தி எண்ணெய் லிட்டர் 25 ரூபாய் உயர்ந்துவிட்டது. இது தவிர வர்த்தகரீதியான சமையல் சிலிண்டர்விலை 105 ரூபய் அதிகரி்துள்ளது, அமுல், மதர்டெய்ரி நிறுவனங்கள் பால் விலையை லிட்டருக்கு 2ரூபாய் உயர்த்திவிட்டன.இவைஅனைத்தும் பணவீ்க்கத்தை உயர்த்தும். இதனால் பணவீக்கத்தை கட்டுப்படுத்த ரிசர்வ் வங்கி அடுத்த நிதிக்கொள்கையில் கடனுக்கான வட்டிவீதத்தை உயர்த்த வேண்டியஅழுதத்துக்கு தள்ளியுள்ளது
 

click me!