CrudeOil Prices:சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை இன்று 6 சதவீதம் உயர்ந்து 14 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு விலை உயர்ந்துள்ளது.உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்ததையடுத்ு, அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன் நாடுகள் பொருளாதாரத் தடைவிதித்தன. இதனால் ரஷ்யாவிலிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி தடைபட்டதையடுத்து, இந்த விலை உயர்வு ஏற்பட்டுள்ளது
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை இன்று 6 சதவீதம் உயர்ந்து 14 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு விலை உயர்ந்துள்ளது.
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்ததையடுத்து, அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன் நாடுகள் பொருளாதாரத் தடைவிதித்தன. இதனால் ரஷ்யாவிலிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி தடைபட்டதையடுத்து, இந்த விலை உயர்வு ஏற்பட்டுள்ளது
2008க்குப் பின்
அதுமட்டுமல்லாமல் ஈரான் நாட்டிலிருந்து கச்சா எண்ணெய் உற்பத்தி அதிக அளவு இல்லை என்பதாலும், போதுமான சப்ளை குறைவால் விலை உயர்ந்தது
பிரன்ட் கச்சா எண்ணெய் பேரலுக்கு 8.46 டாலர் உயர்ந்து, 126 டாலராக உயர்ந்தது. அமெரிக்க வெஸ்ட் டெக்சாஸ் இன்டர்மீடியேட் கச்சா எண்ணெய் 7.65 டாலர் அதிகரித்து, 123.33 டாலராக உயர்ந்தது.
சர்வதேச சந்தையில் வர்த்தகம் தொடங்கிய சில மணிநேரத்தில் பேரலுக்கு 10 டாலர் விலை அதிகரித்தது. கடந்த 2008ம் ஆண்டு ஜூலை மாதத்துக்குபின் கச்சா எண்ணெய் விலை 130 டாலருக்கும்மேல் சென்றது. 2009ம் ஆண்டில் பேரல் 139 டாலர் அளவுக்கு உயர்ந்தது குறிப்பிடத்தக்கது. இன்று வர்த்தகத்தின்போது, பிரன்ட் கச்சா எண்ணெய் விலை 147. 50 டாலர் வரையிலும், வெஸ்ட் டெக்சாஸ் 147.27 டாலர் வரை சென்றது.
இறக்குமதி தடை
ரஷ்யாவிலிருந்து இறக்குமதியை தடை செய்துஅமெரிக்காவும், ஐரோப்பிய நாடுகளும் அறிவித்துள்ளன. ரஷ்யாவிலிருந்து இறக்குமதிக்கு விதிக்கப்பட்ட தடை எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு சப்ளையில் பெரும் அழுத்தத்தையும், பற்றாக்குறையையும் உருவாக்கும். தேவையை அிதகரிக்கும் என்று சந்தை வல்லுநர்கள் நம்புகிறார்கள்.
இதனால் கச்சா எண்ணெய் வாங்குவதற்கு அதிகமாகச் செலவிடும்போது, இந்த விலை உயர்வு அதிகரிக்கிறது. இந்த விலை உயர்ந்து குறைந்த காலத்துக்குதான் இருக்கும், ஒருபேரல் கச்சா எண்ணெய் விலை 150 டாலர்ரை செல்லக்கூடும். இவ்வாறு உயர்வது சர்வதேச பொருளாதாரத்தின் மீது அழுத்தத்தை ஏற்படுத்தும், பணவீக்கத்தை உச்சத்துக்கு கொண்டு செல்லும், கடனுக்கான வட்டி வீதத்தை எவ்வாறு உயர்த்துவது என்று மத்தியவங்கிகள் சிந்திக்கும்.
என்ன காரணம்
2022ம் ஆண்டு பிறந்ததில் இருந்து சர்வதேச கச்சா எண்ணெய் விலை 65 % உயர்ந்துள்ளது. இதனால் உலகப் பொருளாதார வளர்ச்சிக் குறித்த கேள்வி எழுகிறது. ஏற்கெனவே உலகின் 2-வது மிகப்பெரிய பொருளாதாரத்தைக் கொண்ட சீனா, தனது பொருளதாரஇலக்கை 5.5% குறைத்துள்ளது.
பேங்க் ஆஃப் அமெரிக்கா ஆய்வாளர்கள் கூறுகையில் “ ரஷ்யாவிலிருந்து கச்சா எண்ணெய் விலை முற்றிலும் நின்றுவிட்டது. தினசரி 50லட்சம் பேரல்பற்றாக்குறை இருக்கிறது. இதனால் வரும் நாட்களில் கச்சா எண்ணெய்விலை பேரல் 100 டாலரிலிருந்து 200 டாலராக உயரலாம்” எனத் தெரிவிக்கின்றனர்
ஜே.பி. மோர்கன் நிறுவன ஆய்வாளர்கள், “ இந்த ஆண்டு இறுதிக்குள் கச்சா எண்ணெய் விலை பேரல் 185டாலருக்கு உயரும். ஈரானுடன் 2015ம் ஆண்டிலிருந்து அணுஒப்பந்தம் கிடப்பில் இருக்கிறது. அணுஒப்பந்தப் பேச்சு ஓரளவுக்கு சுமூகமாக முடிந்தால்கூட போதுமானஅளவு கச்சா எண்ணெய் சப்ளை தொடங்க பலமாதங்கள் ஆகும். இதுதவிர லிபியாவில் எல் பீல், சராராரா ஆயில்பீல்ட் ஆகிய எண்ணெய் கிணறுகளை மூடிவிட்டார்கள். இதனால், தினசரி 3.30 லட்சம் பேரல் கச்சா எண்ணெய் வருவதும் குறைந்துவிட்டது ” என நம்புகிறார்கள்