NSE SCAM: எப்ஐஆர் போட்டுவிட்டு 4 வருஷமா என்ன செஞ்சிங்க? சிபிஐ விளாசிய நீதிமன்றம்

Published : Mar 05, 2022, 05:40 PM ISTUpdated : Mar 05, 2022, 05:49 PM IST
NSE SCAM: எப்ஐஆர் போட்டுவிட்டு 4 வருஷமா என்ன செஞ்சிங்க? சிபிஐ விளாசிய நீதிமன்றம்

சுருக்கம்

NSE SCAM: என்எஸ்இ கோலொகேஷன் ஊழல் வழக்கில் முன்னாள் தலைமை செயல்அதிகாரி சித்ரா ராமகிருஷ்ணாவின் ஜாமீன்மனுவின் விசாரணையின்போது, முதல்தகவல்அறிக்கை தாக்கல் செய்து 4 ஆண்டுகளாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என சிபிஐ அதிகாரிகளை சிபிஐ நீதிமன்றம் விளாசியது.

என்எஸ்இ கோலொகேஷன் ஊழல் வழக்கில் முன்னாள் தலைமை செயல்அதிகாரி சித்ரா ராமகிருஷ்ணாவின் ஜாமீன்மனுவின் விசாரணையின்போது, முதல்தகவல்அறிக்கை தாக்கல் செய்து 4 ஆண்டுகளாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என சிபிஐ அதிகாரிகளை சிபிஐ நீதிமன்றம் விளாசியது.

அதுமட்டுமல்லாமல் பங்குச்சந்தை ஒழுங்கமைப்பான செபியும் இந்த விவகாரத்தில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் மீது மிகுந்த மென்மையான போக்கைக் கடைபிடித்துள்ளது என்று நீதிபதி சாடினார்.

கோ-லொகேஷன் வழக்கு

என்எஸ்இ சர்வர்கள் வைக்கப்பட்டிருக்கும் அருகே சில குறிப்பிட்ட பங்குதரகர்களின் சர்வர்களை வைத்து பங்கு வர்த்தக தகவல்களை விரைவாக சில முக்கிய தரகர்களுக்கு பகிர்ந்ததாக எழுந்தபுகாரில் சிபிஐ கடந்த 2018ம் ஆண்டு வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறது. இதுவரை ஒருவர் கூட கைது செய்யப்படவில்லை. 

இந்த வழக்கில் சில பங்குவர்த்தகர்களுக்கு ஆதரவாகச் செயல்பட்டதாகக் கூறி கடந்த மாதம் 25ம் தேதி ஆனந்த் சுப்பிரமணியனை சிபிஐ கைது செய்தது. தேசிய பங்கு சந்தையின் தலைமை செயல் அதிகாரியாக சித்ரா ராமகிருஷ்ணா இருந்தபோது, தலைமை செயல் அதிகாரியின் ஆலோசகர் சுப்பிரமணியன் இருந்தார். 

இதைப் படிக்கலாமே: China :இந்தியாவை விட 3 மடங்கு ராணுவத்துக்கான தொகையை ஒதுக்கிய சீனா : ஜிடிபி இலக்கு குறைப்பு

ஜாமின் மனு

இந்நிலையில் இந்த வழக்கில் தன்னை கைதுசெய்யாமல் இருக்க டெல்லி சிபிஐ நீதிமன்றத்தில் தேசிய பங்கு சந்தையின் தலைமை செயல் அதிகாரி சித்ரா ராமகிருஷ்ணா முன்ஜாமீன் மனுத் தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு சிபிஐ நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, சிபிஐதரப்பில் சித்ராவுக்கு ஜாமீன்வழங்க எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டது. சித்ரா ராமகிருஷ்ணாவுக்கு முன்ஜாமீன் வழங்குவதற்கு எந்தவிதமான முகாந்திரமும் இல்லை. அவருக்கு ஜாமீன் வழங்கக்கூடாது என்று சிபிஐ தரப்பில் வலியுறுத்தப்பட்டது. 

என்ன செய்தீர்கள்

அப்போது சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி சஞ்சீவ் அக்ரவால், சிபிஐ வழக்கறிஞரிகம் கூறுகையில் “ கோ-லொகேஷன் வழக்கில் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பே முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துவிட்டீர்கள். ஆனால் இந்த ஊழலில் யாரெல்லாம் ஆதாயம் அடைந்தார்களோ அவர்களை நெருங்கக்கூட முடியவில்லை. ஒவ்வொருமுறையும் சிபிஐ ஏதாவது ஒரு காரணத்தை கூறுவது சரியல்ல. இந்த 4 ஆண்டுகளாக இந்தஊழலில் பயன் பெற்றவர்கள் சுதந்திரமாக அலையும், சொகுசாகவாழவும் சிபிஐ அனுமதித்துள்ளது. 

முதலீட்டாளர்களின் பணத்தை கண்காணிக்கும் அமைப்பாகசெபி இருந்து கொண்டு, எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டபின்பும்கூட குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு ஆதரவாக மென்மையான போக்கைக் கடைபிடித்துள்ளது” எனத் தெரிவித்தார்

இதைப் படிக்க மறக்காதீங்க: NSE Scam:சித்ரா ராமகிருஷ்ணா கைதாகிறாரா? முன்ஜாமீன் மனுவை நிராகரித்தது சிபிஐ நீதிமன்றம்

கவுரமான குடும்பம்

அப்போது சிபிஐ தரப்பு வழக்கறிஞர் “ இந்தவழக்கில் முக்கியக் குற்றம்சாட்டப்படும் சித்ரா ராமகிருஷ்ணாவை கைது செய்யப்படுவார்” எனத் தெரிவித்தார். அதற்கு சித்ரா ராமகிருஷ்ணா வழக்கறிஞர்கள் தரப்பு, “ சித்ரா மிகவும் கவுரமான குடும்பத்தில் இருந்து வந்தவர், பட்டயக்கணக்காளராகப்பணியாற்றுபவர். பெரியநிதி நிறுவனத்திலும், என்எஸ்இ அமைப்பையும் நடத்தியவர். அவரை கைது செய்யாமல் ஜாமீன் வழங்கிட வேண்டும்” எனக் கேட்டுக்கொண்டனர்

இதற்கு சிபிஐ வழக்கறிஞர்கள் “ ராமகிருஷ்ணா சமூகத்தில் மிகுந்த செல்வாக்கானவர். அனைத்து தரப்பிலும் அவரிடம் விரிவாக விசாரிக்கப்பட வேண்டும். கோலொகேஷன் வழக்கில் தடயவியல் தணிக்கை செய்து விசாரிக்க வேண்டும். ஏற்கெனவே அவரிடம் விசாரி்த்தபோது சரியான ஒத்துழைப்பு தர மறுத்துவிட்டார். ஆதலால் அவருக்கு முன்ஜாமீன் வழங்கிடக்கூடாது” எனத் தெரிவித்தனர்.

இதையடுத்து, சித்ரா ராமகிருஷ்ணா தரப்பில் தாக்கல் செய்யப்பட்டிருந்த ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதைப் படிக்க மறக்காதிங்க: DA Hike: ரூ.90 ஆயிரம்வரை உயரும்: மத்திய அரசு ஊழியர்களுக்கு விரைவில் டிஏ உயர்வு

PREV

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

Read more Articles on
click me!

Recommended Stories

ஆதார் அட்டைக்கு புதிய பாதுகாப்பு: இனி நகல் தேவையில்லை!
நெட்வொர்க் இல்லையா.? நோ கவலை.. ஆப் இல்லாமல் இப்போ ஈசியா பணம் அனுப்பலாம்