
கோ-லொகேஷன் வழக்கில் சிக்கியிருக்கும் தேசியப் பங்குச்சந்தையின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி சித்ரா ராம்கிருஷ்ணன் மீது தொலைப்பேசி ஒட்டுக் கேட்பு வழக்கை சிபிஐ புதிதாக பதிவு செய்துள்ளது.
யார் இந்த பின் லூ? எஸ்கேப் ஆன விவோ இயக்குநர்கள்: தோண்ட, தோண்ட புதுத்தகவல்கள் அம்பலம்
இதனால் சித்ரா ராம்கிருஷ்ணனுக்கு சோதனைக்கு மேல் சோதனை வந்து சேர்ந்துள்ளது. அது மட்டுமல்லாமல் ரவி நரேன், மும்பை முன்னாள் போலீஸ் ஆணையர் சஞ்சய் பாண்டே ஆகியோர் மீது தொலைப்பேசி ஒட்டுக்கேட்பு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
விவோவின் மெகா மோசடி! ரூ.62 ஆயிரம் கோடியை சீனாவுக்கு திருப்பியது அம்பலம்:அமலாக்கப்பிரிவு பகீர்
2009 முதல் 2017ம்ஆண்டு வரை தேசிய பங்குச்சந்தை ஊழியர்களின் தொலைப்பேசிகளை ஒட்டுக்கேட்ட விவகாரத்தில் மத்திய உள்துறை அமைச்சகத்தின் உத்தரவின் அடிப்படையில் சிபிஐ இந்த வழக்கைப் பதிவு செய்துள்ளது.
மும்பை முன்னாள் போலீஸ் ஆணையர் சஞ்சய் பாண்டேவுக்கு சொந்தமான இடங்களிலும் சிபிஐ அதிகாரிகள் ரெய்டு நடத்தி வருகிறார்கள் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
9-வது குழந்தைக்கு தந்தையான எலான் மஸ்க்: அலுவலக சிஓவுடன் இரட்டை குழந்தை
சிபிஐ பதிவு செய்த முதல் தகவல் அறிக்கையில் “ 2009 முதல் 2017ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் தேசியப் பங்குச்சந்தையில் பணியாற்றும் ஊழியர்களின் தொலைப்பேசி அழைப்புகள் ஒட்டுக்கேட்கப்பட்டுள்ளன. சித்ரா ராம் கிருஷ்ணா, ரவி நரேன் கேட்டுக்கொண்டதற்கின சஞ்சய் பாண்டே ஒட்டுக்கேட்டுள்ளார்” எனத் தெரிவித்துள்ளது.
இதற்கிடையே கடந்த 2015ம் ஆண்டு டார்க் ஃபைபர் வழக்கில் இன்டர்நெட் இணைப்பை தவறாகப் பயன்படுத்தி, தகவல்களை திரட்டிய வழக்கில், சித்ரா ராம்கிருஷ்ணா, ஆனந்த் சுப்பிரமணியன், உள்ளிட்ட 18 நிறுவனங்களுக்கு ரூ.43.8 கோடி அபராதம் விதித்தது.
இதில் சித்ராவுக்கு மட்டும் ரூ.5 கோடி அபராதம். தேசியப் பங்குச்சந்தைக்கு ரூ.7 கோடி அபராதம், என்எஸ்இ வர்த்தகப்பிரிவு அதிகாரி ரவி வாரணாசிக்கு ரூ.5 கோடி அபராதம் விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.