ed raid vivo: விவோவின் மெகா மோசடி! ரூ.62 ஆயிரம் கோடியை சீனாவுக்கு திருப்பியது அம்பலம்:அமலாக்கப்பிரிவு பகீர்

By Pothy RajFirst Published Jul 8, 2022, 10:47 AM IST
Highlights

சீன செல்போன் நிறுவனமான விவோ இந்தியா, 2017ம் ஆண்டு முதல் 2021ம் ஆண்டுவரை வரி ஏய்ப்பில் ஈடுபட்டு ரூ.62ஆயிரத்து 476 கோடியை சீனாவுக்கு திருப்பியுள்ளது என்று அமலாக்கப்பிரிவு விசாரணையில் தெரியவந்துள்ளது.

செல்போன் நிறுவனமான விவோ இந்தியா, 2017ம் ஆண்டு முதல் 2021ம் ஆண்டுவரை வரி ஏய்ப்பில் ஈடுபட்டு ரூ.62ஆயிரத்து 476 கோடியை சீனாவுக்கு திருப்பியுள்ளது என்று அமலாக்கப்பிரிவு விசாரணையில் தெரியவந்துள்ளது.

படிக்க மறக்காதிங்க: சமையல் எண்ணெய் விலை லிட்டருக்கு ரூ.15 வரை குறைகிறது: விவரம் என்ன?

சீனாவைச் சேர்ந்த விவோ செல்போன் நிறுவனம் தனது விற்றுமுதலில் 50 சதவீதத்தை தனது சொந்த நாட்டுக்குக் கொண்டு செல்வதற்கு இந்தியாவைச் சேர்ந்த 18 நிறுவனங்கள் துணையாக இருந்துள்ளன.  இந்தக் காலகட்டத்தில் மட்டும் விவோ நிறுவனம் ரூ.1.25 லட்சம் கோடிக்கு விற்பனை செய்துள்ளது.

சீனாவைச் சேர்ந்த விவோ செல்போன் நிறுவனம் சட்டவிரோதப் பணப்பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக எழுந்த புகாரையடுத்து, கடந்த  இரு நாட்களுக்கு முன் 44 இடங்களில் அமலாக்கப்பிரிவு சோதனை நடத்தினர். அந்த சோதனையின் விவரங்கள் குறித்து அமலாக்கப்பிரிவு வெளியிட்டுள்ளது.

கண்டிப்பாக படிங்க: வருமானவரி ரிட்டன் தாக்கல் செய்யும்போது கவனிக்க வேண்டிய அம்சங்கள் என்ன?

அந்த சோதனையின் முடிவில், விவோ நிறுவனத்துக்கு சொந்தமான 119 வங்கிக்கணக்குகள் இருப்பதும், அதில் மொத்தமாக ரூ.465 கோடி இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.இதில்  வைப்பு நிதியாக ரூ.66 கோடி, தங்கக் கட்சிகளாக ரூ.73 லட்சம் மதிப்பில் 2 கிலோ இருந்ததை சட்டவிரோதப் பணப்பரிமாற்றச்சட்டத்தின் கீழ் அமலாக்கப்பிரிவினர் பறிமுதல் செய்தனர்.

விவோவுக்கு துணையாக செயல்பட்ட நிறுவனங்கள் மூலம் சீனாவுக்கு தனது விற்றுமுதலை கடத்திவிட்டு, நஷ்டம் ஏற்பட்டதாக விவோ நிறுவனம் தெரிவித்துள்ளது. அமலாக்கப்பிரிவு விசாரணையில், விவோ நிறுவனம் மற்றும் அதன் துணை நிறுவனங்கள், இந்தியாவில் 48 இடங்களில் கிளை தொடங்கியுள்ளனர் என்பது தெரியவந்துள்ளது. 

2014ம் ஆண்டு இந்தியாவில் நிறுவனத்தை தொடங்கிய விவோ, ஹாங்காங்கை தலைமையிடமாகக் கொண்ட மல்டி அகார்டு லிமிட்டட் நிறுவனத்தின் துணை நிறுவனமாகப் பதிவு செய்தது.

உங்களுக்காகத்தான்: ஹெல்த் முக்கியம்! 2022ம் ஆண்டின் சிறந்த மருத்துவக் காப்பீடு திட்டங்கள்: ஒரு பார்வை

விவோ நிறுவனத்தின் துணை நிறுவனமான கிராண்ட் பிராஸ்பக்ட் இன்டர்நேஷனல் கம்யூனிகேஷன் பிரைவேட் லிமிடட் நிறுவனம் அதன் இயக்குநர்கள், பங்குதாரர்கள் உள்ளி்ட்டோர் மீது மத்திய கார்ப்பரேட் விவகாரத்துறை போலீஸில் புகார் செய்தது. இந்த புகாரையடுத்து, அமலாக்கப்பிரிவு விசாரணையைத் தொடங்கியது.

கிராண்ட் பிராஸ்பக்ட் இன்டர்நேஷனல் கம்யூனிகேஷன் பிரைவேட் லிமிடட் நிறுவனம் போலியான ஆவணங்கள், முகவரிகளை அளித்து நிறுவனத்தை தொடங்கியுள்ளது என்று மத்திய கார்ப்பரேட் விவகாரத்துறை சார்பில் புகார் அளிக்கப்பட்டது.

போலீஸார் நடத்திய விசாரணையில் கார்ப்பேரட் விவகாரத்துறை புகாரில் உண்மை இருப்பது தெரியவந்தது. அரசு கட்டிடத்தை பயன்படுத்தி, ஆவணங்களாக் காண்பித்து நிறுவனத்தை தொடங்கியுள்ளனர். மூத்த அரசு அதிகாரியின் வீட்டு முகவரியை முகவரிச்சான்றாக விவோ நிறுவனம் பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டது.

கணக்குத் தணிக்கை அதிகாரி நிதின் கார்க் உதவியுடன், ஹெங்ஷென் வூ, பின் லூ, ஹாங் ஜி ஆகியோரால் விவோ நிறுவனம் உருவாக்கப்பட்டது. விவோ நிறுவனத்தின் இயக்குநர்களில் ஒருவரான பின் லூ கடந்த 2018ம் ஆண்டு ஏப்ரல் மாதமே இந்தியாவைவிட்டு வெளியேறிவிட்டார்.  மற்ற இரு இயக்குநர்களான ஹெங்ஷென் வூ, ஹாங் ஜி ஆகியோர் 2021ம் ஆண்டு இந்தியாவிலிருந்து வெளியேறினர். 

இதில் கிராண்ட் பிராஸ்பக்ட் இன்டர்நேஷனல் கம்யூனிகேஷன் பிரைவேட் லிமிடட் நிறுவனத்தின் இயக்குநராக இருந்தவர் பின் லூ. இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் ஏராளமான நிறுவனங்களை பின் லூ நடத்தியுள்ளார்.

2014-15ம் ஆண்டு விவோ நிறுவனம் தொடங்கப்பட்டதிலிருந்து ஏறக்குறைய 18 துணை நிறுவநங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. மற்றொரு சீன நிறுவனமான ஹிக்சின் வீ 4 துணை நிறுவனங்களை உருவாக்கியுள்ளது

இவ்வாறு அமலாக்கப்பிரிவு தெரிவித்துள்ளது.
 

click me!