ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த 2 நாட்களாக சரிந்த நிலையில் இன்று விலை அதிகரித்துள்ளது. சென்னையில் இன்று காலை தங்கம் விலை கிராம் ஒன்றுக்கு 4ரூபாயும், சவரணுக்கு 32 ரூபாயும் உயர்ந்துள்ளது.
ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த 2 நாட்களாக சரிந்த நிலையில் இன்று விலை அதிகரித்துள்ளது. சென்னையில் இன்று காலை தங்கம் விலை கிராம் ஒன்றுக்கு 4ரூபாயும், சவரணுக்கு 32 ரூபாயும் உயர்ந்துள்ளது.
இதைப் படிங்க: ரூபாய் மதிப்பு சரிவு:களத்தில் இறங்கிய ரிசர்வ் வங்கி: டாலர் முதலீட்டை ஈர்க்க சலுகைகள்
சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று மாலை நிலவரப்படி கிராம் ரூ.4,672க்கும், சவரண் ரூ.37,376க்கும் விற்கப்பட்டது. இன்று காலை நிலவரப்படி சென்னையில் 22காரட் ஆபரணத் தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ.4உயர்ந்து, ரூ4,676 ஆகவும், சவரணுக்கு ரூ.32 அதிகரித்து ரூ.37,408க்கும் விற்கப்படுகிறது.
தங்கத்தின் விலை கடந்த 2 நாளாக சரிந்து வந்தது. கடந்த 1ம் தேதிமுதல் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,016 உயர்ந்த நிலையில் கடந்த இரு நாட்களில் மட்டும் சவரனுக்கு ரூ.1064 குறைந்தது. இதனால் சவரன் ரூ.38ஆயிரத்தில் இருந்த தங்கம் விலை திடீரென ரூ37ஆயிரத்துக்கு குறைந்தது.
இதை படிக்க மறக்காதிங்க: வருமானவரி ரிட்டன் தாக்கல் செய்யும்போது கவனிக்க வேண்டிய அம்சங்கள் என்ன?
அமெரிக்க பெடரல் வங்கி வட்டி வீதத்தை உயர்த்தும் என்ற எதிர்பார்ப்பு இருப்பதால், முதலீட்டாளர்கள் தங்கள் முதலீட்டை பாதுகாப்பாக டாலர் மீது வைப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் டாலர் மதிப்புதான் வலுப்பெறும், தங்கத்தின் மதிப்பு பெரிதாக மாறுவதற்கு வாய்ப்பில்லை என சந்தை வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள்.
இதன் காரணமாகவே கடந்த 2 நாட்களாக தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.ஆயிரத்துக்கு மேல் குறைந்திருந்தது. அதுமட்டுமல்லாமல், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடந்த இரு நாட்களாக நிலையற்றதாக இருந்து வருகிறது. அமெரிக்க வெஸ்ட் டெக்சாஸ், பிரன்ட் கச்சா எண்ணெய் பேரல் 100 டாலருக்கும் கீழ் சரிந்தது.
அதுமட்டுமல்லாமல் தங்கம் இறக்குமதியைக் கட்டுப்படுத்த மத்திய அரசு தங்கத்துக்கான இறக்குமதி வரியை 7.5 சதவீதத்திலிருந்து 15 சதவீதமாக உயர்த்தியுள்ளது. இதனால் தங்கத்தின் விலையில் மாற்றம் இருக்கும், உயரும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், கடந்தஇரு நாட்களாக தங்கம் விலை சரிந்து நிலையியல் இன்று சவரனுக்கு ரூ.32 அதிகரி்த்து கடும் ஊசலாட்டத்தில் தங்கம் விலை இருந்து வருகிறது.
வெள்ளி விலை இன்று சற்று உயர்ந்துள்ளது. வெள்ளி கிராம் ஒன்றுக்கு 10 காசு அதிகரித்து ரூ.62.50க்கு விற்பனையாகிறது. வெள்ளி ஒரு கிலோ ரூ.100 அதிகரித்து, ரூ.62,500க்கு விற்கப்படுகிறது.