itr filing: itr date: வருமானவரி ரிட்டன் தாக்கல் செய்யும்போது கவனிக்க வேண்டிய அம்சங்கள் என்ன?

Published : Jul 07, 2022, 05:36 PM ISTUpdated : Jul 07, 2022, 05:39 PM IST
itr filing: itr date: வருமானவரி ரிட்டன் தாக்கல் செய்யும்போது கவனிக்க வேண்டிய அம்சங்கள் என்ன?

சுருக்கம்

2021-22ம் ஆண்டுக்கான வருமானவரி ரிட்டன் தாக்கல் செய்ய வரும் 31ம் தேதி கடைசி நாளாக இருக்கும் நிலையில், வருமானவரி செலுத்துவோர் ரிட்டன் தாக்கல் செய்யும்போது சில முக்கிய அம்சங்களைக் கவனிக்க வேண்டும்.

2021-22ம் ஆண்டுக்கான வருமானவரி ரிட்டன் தாக்கல் செய்ய வரும் 31ம் தேதி கடைசி நாளாக இருக்கும் நிலையில், வருமானவரி செலுத்துவோர் ரிட்டன் தாக்கல் செய்யும்போது சில முக்கிய அம்சங்களைக் கவனிக்க வேண்டும்.

இதுவரை ஐடி ரிட்டன் தாக்கல் செய்யாதவர்கள், அனைத்துவிதமான வருமான மூலங்கள், முதலீடு தொடர்பான ஆவணங்களை தயார் செய்வது அவசியம். முன்கூட்டியே ரிட்டன் பைல் செய்வது, கடைசி நேர பரபரப்பில் சிக்குவதை தவிர்க்கும். சரியான நேரத்தில் ஐடிரிட்டன் தாக்கல் செய்து அபாராதம் செலுத்துவதிலிருந்து தப்பிக்கலாம்.

 வீட்டுக்கடன் வாங்கும்போது எளிதாகக் கிடைக்கும். வரி ரீபண்ட் பெறுதலும் விரைவாக இருக்கும். அது மட்டுமல்லாமல் வருமானவரி ஆவணங்கள்தான், நம்முடைய முகவரிச் சான்றாகவும் அமையும்.
ரிட்டன் தாக்கல் செய்யும்போது மனதில் வைக்கவேண்டிய அம்சங்கள்

1.    வரி படிநிலை மாறியிருப்பதை கவனிக்க வேண்டும். பழைய வரிவிதிப்பு முறையில் செல்கிறீர்களா அல்லது, புதிய வரிவிதிப்பு முறையில் செல்கிறீர்களா என்பதை முடிவு செய்ய வேண்டும். புதிய வரிமுறையில் குறைவான ஸ்லாப் இருக்கும். ஆனால், அதிகமான தள்ளுபடிகள், விலக்கு தேவைப்பட்டால் பழைய வரிவிதிப்பை தேர்வு செய்யலாம்.

2.    ரிட்டன் தாக்கல் செய்வதை எளிதாக்க, வருமானவரித்துறை ஏற்கெனவே நிரப்பப்பட்ட படிவங்களை வழங்குகிறது. அந்த படிவங்களை வாங்கி, உங்களின் அனைத்து ஆவணங்களோடு ஒப்பீடு செய்து ஒவ்வொரு பிரிவாக சரிபார்க்கலாம். பல வங்கிகளில் வங்கிக்கணக்கு இருந்தால், பல முதலீடுகள் இருந்தால் இதுஅவசியம்.

3.    வருமானவரி ரிட்டன் ஆன்-லைனில் தாக்கல் செய்யும்போது, தவறுகள் செய்வதைத் தவிர்க்க வேண்டும்

4.    உங்களின் அனைத்து விதமான வருமான இனங்களையும் குறிப்பிட்டுவிட்டீர்களா என்பதை உறுதி செய்ய வேண்டும். இது அபராதம் விதிப்பதிலிருந்து தப்பிக்க உதவும்.

5.    ஃபார்ம் 16, மற்றும் ஃபார்ம் 26ஏஎஸ் ஆகியவற்றை நினைவில் வைக்க வேண்டும். இதில் ஃபார்ம்16 என்பது ஓர் ஆண்டில் நீங்கள் பெற்ற வருமானத்தை வேலைபார்க்கும் நிறுவனம் குறிப்பிடுவதாகும். அதற்கான டிடிஎஸ் பிடித்தம் செய்யப்படும். ஃபார்ம்26ஏஎஸ் என்பது, உங்கள் சார்பாக வரிபிடித்தம் செய்யப்பட்டு, செலுத்தப்பட்ட தொகையைக் குறிக்கும்.

6.    ரிட்டன் தாக்கல் செய்யும் முன், ஃபார்ம்-16 மற்றும் ஃபார்ம் 26ஏஎஸ் ஆகியவற்றில் வரி பிடித்தம் செய்யப்பட்டதை ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும்.ஃபார்ம்16 படிவத்திலும் 26ஏஎஸ் படிவத்திலும் டிடிஎஸ் தொகை ஒரே மாதிரியாக இல்லவிட்டால், பணிபுரியும் நிறுவனத்தை நாடி அதை சரி செய்ய வேண்டும்.

7.     வரி சேமிப்பு ஆவணங்களை குறிப்பிட மறுந்துவிட்டால் அல்லது வாடகை ரசீது வழங்க மறந்துவிட்டால், அதற்கு வரிப்பிடித்தம் செய்தால், பழைய வரிமுறையின் கீழ், அனைத்து ஆவணங்களையும் அளித்து ரீபண்ட் பெறலாம். 

8.    ஐடிஆரைச் சரிபார்க்கும் வரை செயல்முறை முடிவடையாது. ஆதலால், வருமான வரியைத் தாக்கல் செய்த பிறகு வருமானம் குறித்து ஆன்லைனில் சரிபார்த்து அதை உறுதி செய்ய வேண்டும்


 

PREV

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

Read more Articles on
click me!

Recommended Stories

தங்க கடனில் புதிய விதிகள்.. ஆர்பிஐயின் அதிரடி மாற்றம்.. மக்களே நோட் பண்ணுங்க
அரசு ஊழியர்கள் வயிற்றில் பாலை வார்த்த மத்திய அரசு.. 1 கோடி குடும்பங்கள் நிம்மதி.!