இலங்கை மட்டுமல்ல…. இன்னும் ஒரு டஜன் நாடுகள் பொருளாதாரச் சிக்கல் அபாயத்தில் சிக்கித் தவிப்பு

By Pothy RajFirst Published Jul 16, 2022, 6:10 PM IST
Highlights

இலங்கை மட்டும் பெரும் பொருளாதாரச் சிக்கலில் சிக்கியிருக்கவில்லை. இன்னும் 12 நாடுகள் பொருளாதார அபாயக் கட்டத்தில் சிக்கி தவித்து வருகின்றன.

இலங்கை மட்டும் பெரும் பொருளாதாரச் சிக்கலில் சிக்கியிருக்கவில்லை. இன்னும் 12 நாடுகள் பொருளாதார அபாயக் கட்டத்தில் சிக்கி தவித்து வருகின்றன.

பணமதிப்பு சரிவு, பங்குவர்த்தகத்தில் புள்ளிகள் சரிவு, போன்ற வழக்கமான பிரச்சினைகளைக் கடந்து கோடிக்கணக்கான கடனுடன் 12 நாடுகள் ஒவ்வொரு நாளையும் கடந்து வருகின்றன. 

இலங்கை, லெபானான், ரஷ்யா, ஜாம்பியா போன்ற நாடுகள் ஏற்கெனவே வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்த முடியாமல் இருக்கின்றன. பெலாராஸ் ஆபத்தான கட்டத்தில் இருக்கிறது. பணவீக்கம், வெளிக்கடன், கரன்ஸி மதிப்பு சரிவு ஆகியவே ஒவ்வொரு நாட்டையும் பொருளாதார பேரழிவுக்குள் தள்ளுகிறது

அர்ஜென்டினா

தென் அமெரிக்காவில் இருக்கும் நாடான அர்ஜென்டியா உலகளவில் அதிகமான கடன் வாங்கி திருப்பிச் செலுத்த முடியாத நாடுகள் வரிசையில் இருக்கிறது. அர்ஜென்டினாவின் அந்நியச் செலவாணியும் மிகவும் மோசமாக இருக்கிறது, இந்த நாடு வெளிநாடுகளில் வாங்கிய கடனுக்கு வட்டி செலுத்தமுடியாமல் தடுமாறியது. அர்ஜென்டினா வெளியிடும் கடன் பத்திரங்கள், பங்கு பத்திரங்கள் அனைத்தும் டாலர் மதிப்பில் கூட இல்லாமல் சென்ட் மதிப்புக்கு குறைந்துவிட்டது. 

உக்ரைன்

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்தபின்புதான் அதன் பொருளாதாரமே உருக்குலைந்துவிட்டது. ரஷ்யா தன்னை மட்டும் அழிக்காமல், உக்ரைனையும் சேர்த்து அழித்துவிட்டது. உக்ரைனை மறுகட்டமைப்பு செய்ய 2000 கோடி டாலர் தேவைப்படும். செப்டம்பர் மாதத்தில் உக்ரைன் செலுத்த வேண்டிய கடன் மட்டுமே 120 கோடி டாலர் இருக்கிறது. ஆனால், உக்ரைன் இருக்கும் நிலையில் அந்த நாடு பொருளாதாரச் சரிவிலிருந்து மீள்வதே பெரிய விஷயம்

துனிசியா

சர்வதேச நிதியத்தில் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த ஏராளமான நாடுகள் கையேந்துகின்றன. அதில் முதலிடத்தில் துனிசியா இருக்கிறது. பட்ஜெட்டில் 10 சதவீதம் பற்றாக்குறை இருக்கிறது. உலகளவில் அதிகமாக அரசுஊழியர்களுக்கு ஊதியத்துக்காகச் செலவிடும் நாடாக துனிசியா இருக்கிறது.

கானா

ஆப்பிரிக்க நாடான கானாவில் பணவீக்கம்30 சதவீதம் உயர்ந்துள்ளது. கானா நாட்டின் கரன்ஸியான செடி மதிப்பு மட்டும் 25 சதவீதம் குறைந்துள்ளது.ஏற்கெனவே கானா அரசு வரிவருவாயில் பாதியைச் செலவிட்டுள்ளது. இனிமேல் கடனுக்கான வட்டி செலுத்த வேண்டும். இதனால் நாட்டின் ஜிடிபி 85 சதவீதம் சரி்ந்துவிட்டது.

எகிப்து

எகிப்து நாட்டின் ஜிடிபியில் 95 சதவீதம் கடனில் இருக்கிறது. அடுத்த 5 ஆண்டுகளில் எகிப்து அரசு கடனுக்காக 10000 கோடி டாலர் செலுத்தவேண்டும். 2024ம் ஆண்டுக்குள் 3300 கோடி டாலர் தொகையை கடன் பத்திரங்களுக்காக வழங்க வேண்டும்.  

கென்யா

கிழக்கு ஆப்பிரிக்க நாடான கென்யா அரசு தனது வருவாயில 30 சதவீதத்தை வட்டி செலுத்த மட்டுமே செலவிடுகிறது. கென்ய அரசின் கடன் பத்திரங்கள் மதிப்பு பாதியாகக் குறைந்துவிட்டது. 2024ம் ஆண்டில் 200 கோடி டாலர் கடனுக்காகச் செலுத்த வேண்டும். 

எத்தியோப்பியா

எத்தியோப்பியா அதிபர் அடிஸ் அபிபா நாட்டை விரைவாக பொருளாதார முன்னேற்றத்துக்கு கொண்டு வர நினைக்கிறார்கள். ஆனால், நாட்டில் நடக்கும் உள்நாட்டுப்போர் பொருளாதார வளர்ச்சியை இழுத்துப்பிடிக்கிறது. 100 கோடி டாலருக்கு மேல் கடன் பத்திரங்களுக்கு தர வேண்டிய நிலையில் இருக்கிறது

எல்சால்வடார்

பிட்காயினை சட்டப்பூர்வமாக அங்கீகரித்த நாடு எல்சாலவடார். இதனாலேயே சர்வதேச நிதியம் எல்சால்வடாருக்கு கதவுகளை மூடியது. அடுத்த 6மாதத்தில் 80 கோடிக்கு கடன் பத்திரங்களுக்கு பணம் தர வேண்டும் எவ்வாறு தரப்போகிறது எனத் தெரியவில்லை 

பாகிஸ்தான்

சர்வதேச நிதியத்திடம் பேசி கடனிலிருந்து மீள பாகிஸ்தான் முயன்று வருகிறது. ஆனால், எதுவுமே சரியான நேரத்தில் நடக்கவில்லை.பாகிஸ்தானின் அந்நியச் செலாவணி கையிருப்பு 980 கோடி டாலராகக் குறைந்துவிட்டது, இன்னும் ஒரு மாதஇறக்குமதிக்கு மட்டுமே கைவசம் டாலர் இருக்கிறது. இப்போது விழிக்காவிட்டால்,இலங்கை நிலைக்கு செல்லும். பாகிஸ்தான் பணமதிப்பு வரலாற்று காணாத சரிவில் இருக்கிறது. புதிதாக வரும் அரசு செலவினத்தை கடுமையாக குறைக்க வேண்டிய நிலையில்இருக்கிறது. பாகிஸ்தான் அரசின் வருவாயில் 40 சதவீதம் வட்டி செலுத்த மட்டுமே செலவிடப்படுகிறது.

பெலாரஸ்

உக்ரைன் போரில் ரஷ்யாவுக்கு விதிக்கப்பட்ட தடையால் பெலாரஸும் பாதிக்கப்பட்டுள்ளது. ரஷ்யாவுக்கு ஆதராவக் செயல்பட்டால்த பெலாரஸும் பொருளாதாரத் தடையால் பெரும் கடனில் சிக்கியிருக்கிறது.

ஈக்வெடார்

லத்தின் அமெரிக்க நாடான ஈக்வெடார் 2 ஆண்டுகளுக்கு முன்பே கடனைத் திருப்பிச் செலுத்த முடியாத நாடாக மாறிவிட்டு. உள்நாட்டு குழப்பம், வன்முறை ஆகியவை நாட்டின் சிக்கலை மேலும் தீவிரப்படுத்தின.

நைஜீரியா

நைஜிரியாவின் கடன் பத்திரங்களுக்காக இந்த ஆண்டுக்குள் 50 கோடி டாலர் செலுத்த வேண்டும். ஆனால், அரசின் வருமானத்தில் 30 சதவீதம் வட்டிக்கு மட்டும் செலவிடுவதால், பெரும் கடனில் சிக்கியிருக்கிறது. 

click me!