
இன்று முதல் திருத்தி அமைக்கப்பட்ட ஜிஎஸ்டி ரேட் வீதம் பல்வேறு பொருட்களுக்கு அமலாகிறது. அதில் நாம் அன்றாடம் பயன்படுத்தும் பல பொருட்களுக்கு வரி அதிகரிக்கப்பட்டுள்ளது, சிலவற்றுக்கு குறைக்கப்பட்டுள்ளது.
47-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் இந்த மாதத் தொடக்கத்தில் சண்டிகரில் நடந்தது. அதில் ஏராளமான பொருட்களுக்கு வரி உயர்த்தப்பட்டது, பல பொருட்கள் வரிவிதிப்பில் கீழ் கொண்டுவரப்பட்டன, பல பொருட்களுக்கு வரிச்சலுகையும் கிடைத்தது.
மாற்றத்தில் கோவை: டெஸ்ஸ்டைல் சிட்டிஅல்ல இனி டெக்னாலஜி நகரம்
ஜிஎஸ்டி வரி உயர்வு வரும் 18ம் தேதி முதல் அமலாகிறது.
1. பேக்கிங் செய்யப்பட்ட, லேபிள் ஒட்டப்பட்ட பைகளில் அடைக்கப்பட்ட தயிர், பனீர், மோர்,அரிசி, கோதுமை, கோதுமை மாவு, ஆகிவற்றுக்கு 5 சதவீதம் ஜிஎஸ்டி வரி. இதற்கு முன் வரிவிலக்கு அளிக்கப்பட்டிருந்தது.
vரூபாய் மதிப்புச் சரிவு மார்க்கதர்ஷக் மண்டல் வயதைக் கடந்துவிட்டது: காங்கிரஸ் கட்சி கிண்டல்
2. எல்இடி விளக்கு, அச்சகங்களுக்கு பயன்படும், எழுதப்பயன்படும் மை, பிளேட், பென்சில் ஷார்ப்னர், கத்தி, ஸ்பூன், போர்க், ஏணி, ஸ்கிம்மர்ஸ், கேக் சர்வர்ஸ், எழுதும், அச்சடிக்கப் பயன்படும் மை, மெட்டல் பிரின்ட் சர்க்யூட் ஆகியவற்றுக்கு 18 சதவீதம் ஜிஎஸ்டி வரி
3. பவர்-டிரைவ் பம்ப்ஸ், சைக்கிள்களுக்கு காற்றடிக்கும் பம்ப், பால் பதப்படுத்தும் மையங்களுக்கான எந்திரங்களுக்கு 18 சதவீதம் வரி.
4. பருப்பு, விதைகளை சுத்தம் செய்யும் எந்திரம், தரம் பிரிக்கும் எந்திரம், பருப்பு, தானியங்கள் பதப்படுத்தும் தொழிற்சாலையில் பயன்படுத்தும் எந்திரங்கள், ஆட்டா சக்கி, கிரைண்டர் ஆகியவற்ருக்கு 18 சதவீதம் வரி
பணவீக்கத்தால் அலறும் அமெரிக்கா :41 ஆண்டுகளில் இல்லாத உயர்வு: அடுத்து என்ன நடக்கும்?
5. காசோலை, காசோலை தொலந்துவிட்டு புதிதாக வாங்கினாலோ 18 சதவீதம் வரி
6. சோலார் வாட்டர் ஹீட்டர் 12 சதவீதம் வரி
7. தோல் பொருட்கள், பணி முடிக்கப்பட்டது, தயாரிப்பு, அனைத்துக்கும் 12 சதவீதம் வரி
8. அட்லஸ் வரைபடம், வரைபடம் ஆகிய அனைத்துக்கும் 12 சதவீதம் வரி
9. ஹோட்டலில் தினசரி ரூ.1000ம் வரை கட்டணம் வசூலிக்கும் அறைக்கு 12 சதவீதம் ஜிஎஸ்டி வரி
10. மருத்துவமனையில் ஐசியு தவிர, மற்ற அறைகளில் தினசரி ரூ.5ஆயிரம் வாடகை வசூலித்தால் அதற்கு 5 சதவீதம் ஜிஎஸ்டி வரி
11. சாலை ஒப்பந்தப்பணி, பாலங்கள், மெட்ரோ பணிகள், நீர் சுத்திகரிப்பு திட்டங்கள், தகணம்செய்யும் இடம் ஆகியவற்றுக்கு 18சதவீதம் வரி.
12. வரலாற்றுநினைவிடங்களில் ஒப்பந்தப் பணி செய்தல், அணைக்கட்டுகள், பைப்லைன், மாநிலஅரசு, உள்ளாட்சிகளுக்கு கட்டிடப்பணிகளுக்கு 18 சதவீதம் ஜிஎஸ்டி வரி
13. நிலத்தை தோண்டுதல், சுரங்கம் உள்ளிட்டவை, துணை ஒப்பந்தங்கள்ஆகியவற்றுக்கு 12 சதவீதம் ஜிஎஸ்டி வரி
இந்தப் பொருட்கள் அனைத்தும் வரும் 18ம் தேதி முதல் விலை உயரும்
1. மலைப்பகுதிகள், வனப்பகுதிளில் ரோப் கார் மூலம் மக்களை அழைத்துச் செல்லுதல், பொருட்களை கொண்டு செல்லுதலுக்கான ஜிஎஸ்டி வரி 18 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாகக் குறைக்கப்படுகிறது
2. சரக்குகளை ஏற்றிச்செல்லும் வாகனங்களை வாடகைக்கு விடுவோருக்கு ஜிஎஸ்டி வரி 18 சதவீதத்திலிருந்து 12 சதவீதமாகக் குறையும்.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.