2000 ரூபாய் நோட்டுகளை மாற்ற பார்ம், ஐடி கார்டு ஏதும் தேவை இல்லை: ஸ்டேட் வங்கி அறிவிப்பு

By SG BalanFirst Published May 21, 2023, 2:39 PM IST
Highlights

2000 ரூபாய் நோட்டுகளை மாற்றிக்கொள்ள எந்தவிதமான படிவத்தை நிரப்புவதோ, அடையாளச் சான்றைக் காட்டுவதோ தேவை இல்லை என ஸ்டேட் வங்கி அறிவித்துள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிவிப்பில், 2000 ரூபாய் நோட்டுகள் திரும்பப் பெறப்படுவதாகவும் அவற்றை செப்டம்பர் 30ஆம் தேதி வரை வங்கிகளில் கொடுத்து மாற்றக்கொள்ளவோ கணக்கில் வரவு வைத்துக்கொள்ளவோ செய்யலாம் எனவும் கூறப்பட்டிருக்கிறது.

இந்நிலையில், 2000 ரூபாய் நோட்டுகளை மாற்றும்போது வங்கியில் தரப்படும் படிவத்தை நிரப்ப வேண்டும் எனவும் ஆதார் அட்டை போன்ற அடையாளச் சான்று ஒன்றைக் காட்ட வேண்டும் எனவும் தகவல்கள் பரவிவந்தன. ஆனால், இன்று ஸ்டேட் வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பில், அவை ஏதும் தேவையில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதைப்பற்றி ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா சார்பில் இன்று அதன் அனைத்து கிளைகளுக்கும் அறிவுறுத்தியுள்ளது. தினமும் ஒரே நேரத்தில் 20 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான ரூ.2000 நோட்டுகளை டெபாசிட் செய்யலாம் அல்லது வேறு ரூபாய் நோட்டுகளாக மாற்றிக்கொள்ளலாம் என எஸ்பிஐ அறிவிப்பில் சொல்லப்பட்டிருக்கிறது.

கட்டுக்கட்டாக சிக்கிய ரூ.2000 நோட்டுகள்! ராஜஸ்தான் அரசு அலுவலகத்தில் ரூ.2.31 கோடி பறிமுதல்!

ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்காக ஆதார் அட்டை போன்ற அடையாள ஆவணங்களைச் சமர்ப்பிப்பதோடு ஒரு படிவத்தையும் பூர்த்தி செய்ய வேண்டும் என சமூக ஊடகங்களில் தவறான தகவல்கள் பரவும் நிலையில், எஸ்பிஐ அறிவிப்பு அதற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.

ஒரு நபர் ஒரு நாளைக்கு 20,000 ரூபாய் மதிப்பிலான இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகளை மட்டுமே மாற்றலாம் என்றும் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த வரம்பை அதிகரிக்க வேண்டும் என வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா வலியிறுத்தியுள்ளார். மாற்றுவதற்கான அவகாசத்தையும் குறைந்தது டிசம்மர் 31ஆம் தேதி வரை நீட்டிக்க வேண்டும் எனக் கூறியுள்ளார்.

2000 ரூபாய் நோட்டுகள் 2016ஆம் ஆண்டு 500, 1000 ரூபாய் நோட்டுகள் மதிப்பு நீக்கம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து முதலில் அறிமுகம் செய்யப்பட்டன. அப்போது சிறிது காலம் புழக்கத்தில் இருந்த 2000 ரூபாய் நோட்டுகளை கடந்த 2 ஆண்டுகளாகவே அதிகம் காணமுடியவில்லை. அண்மையில் ரிசர்வ் வங்கி 2000 ரூபாய் அச்சிடுவதை நிறுத்திவிட்டதாவும் மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தெரிவித்தது.

தொழில் தொடங்க பணம் இல்லையா? கவலைப்படாதீங்க.! இனி ஈஸியா லோன் கிடைக்கும் !!

click me!