இந்தியப் பங்குச்சந்தைகள் தொடர்ந்து 7வது நாளாக இன்றும் சரிந்துள்ளன. சென்செக்ஸ், நிப்டி மீளமுடியாமல் தடுமாறுகின்றன.
இந்தியப் பங்குச்சந்தைகள் தொடர்ந்து 7வது நாளாக இன்றும் சரிந்துள்ளன. சென்செக்ஸ், நிப்டி மீளமுடியாமல் தடுமாறுகின்றன.
அமெரிக்கப் பொருளாதார மந்தநிலை, பொருளாதார புள்ளிவிவரங்கள், பணவீக்கம், வட்டிவீத உயர்வைநினைத்து சர்வதேசசந்தைகள் கலங்கிப்போயுள்ளன. பெடரல் ரிசர்வ் எவ்ளவு வட்டியை உயர்த்தப் போகிறது என்பது எதிர்பார்ப்பாக இருக்கிறது. இதனால் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக இந்தியச் சந்தைகள் மீளமுடியாமல் தவிக்கின்றன
வங்கிகளுக்கு 12 நாட்கள் விடுமுறை| மார்ச்சில் எந்த நாட்களில் வங்கி இயங்காது தெரியுமா?
பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த பெடரல் ரிசர்வ் வட்டியை உயர்த்தும் எனும் அச்சம் முதலீட்டாளர்கள் முதலீடு செய்யும் ஆர்வத்தைக் குறைக்கிறது. அந்நிய முதலீட்டாளர்கள் இந்தியச்சந்தையில் முதலீடுசெய்த பணத்தை எடுத்து வருகிறார்கள்.
இதனால் காலை முதலே சந்தையில் சரிவு காணப்பட்டது. இந்த சரிவு வர்த்தகத்தின் நடுப்பகுதியில் அதிகரித்து பின்னர் குறைந்தது. இருப்பினும் மாலை வர்த்தகம் முடிவில் வீழந்தது. மும்பை பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 175 புள்ளிகள் சரிந்து, 59,288 புள்ளிகளில் நிலைபெற்றது. தேசியப் பங்குச்சந்தையில் நிப்டி 73 புள்ளிகள் குறைந்து, 17,392 புள்ளிகளில் நிலைபெற்றது.
மும்பை பங்குச்சந்தையில் உள்ள 30 முக்கிய நிறுவனப் பங்குகளில் 13 நிறுவனப் பங்குகள் மட்டுமே லாபத்தில் முடிந்தன. மற்ற 17 நிறுவனப் பங்குகள் சரிவில் முடிந்தன.
என்எஸ்இ பட்டியலில் அதானி நிறுவனங்கள்| பதறும் முதலீட்டாளர்கள்! SEBI தலையிட கோரிக்கை
ஏசியன்பெயின்ட்ஸ், பஜாஜ் பின்சர்வ், ஐடிசி, டைட்டன், நெஸ்ட்லே இந்தியா, பவர்கிரிட், இன்டஸ்இன்ட்வங்கி, சன்பார்மா பங்குகள் லாபத்தோடு நகர்கின்றன. ஐசிஐசிஐ வங்கி, கோடக் வங்கி, பவர்கிரி்ட், எச்டிஎப்சி, என்டிபிசி, ரிலையன்ஸ், எச்டிஎப்சி வங்கி, டைட்டன், ஆக்சிஸ் வங்கி பங்குகள் லாபமடைந்தன.
நிப்டியில் அதானி என்டர்பிரைசர்ஸ், பஜாஜ் ஆட்டோ, யுபிஎல், டாடா ஸ்டீல், இன்போசிஸ் பங்குகள் அதிகபட்ச இழப்பசைச்சந்தித்தன. ஐசிஐசிஐ வங்கி, கோடக் மகிந்திரா வங்கி, பவர்கிரிட் கார்ப்பரேஷன், எஸ்பிஐ எச்டிஎப்சி பங்குகள் லாபத்தில் உள்ளன. நிப்டியில் வங்கி, உலோகம், ரியல்எஸ்டேட் துறைகளைத் தவிர மற்ற துறைப் பங்குகள் வீழ்ந்தன