எக்கச்சக்க அம்சங்கள் நிறைந்த ரேன்ஜ் ரோவர் எஸ்.வி. - இந்திய முன்பதிவு துவக்கம்

By Kevin KaarkiFirst Published Jan 27, 2022, 5:14 PM IST
Highlights

லேண்ட் ரோவர் நிறுவனத்தின் புதிய தலைமுறை ரேன்ஜ் ரோவர் மாடலுக்கான முன்பதிவு  துவங்கி நடைபெற்று வருகிறது.

லேண்ட் ரோவர் இந்தியா நிறுவனம் புதிய ரேன்ஜ் ரோவர் எஸ்.யு.வி. மாடலுக்கான முன்பதிவை துவங்கி இருக்கிறது. இந்த மாடலில் ஸ்பெஷல் டிசைன் தீம், விசேஷ டீடெயில் மற்றும் மெட்டீரியல் விருப்பங்களுடன் கிடைக்கிறது. இதன் எஸ்.வி. வேரியண்ட் பிரத்யேக அம்சங்களை அடுத்துக் கட்டத்திற்கு கொண்டு செல்கிறது. புதிய ரேன்ஜ் ரோவர் மாடல்களின் விலை ரூ. 2.32 கோடி, எக்ஸ்-ஷோரூம் என துவங்குகிறது. 

புதிய ரேன்ஜ் ரோவர் ஸ்டாண்டர்டு மற்றும் லாங்  வீல்பேஸ் வெர்ஷன்களில் 5 சீட்டர் வடிவில் கிடைக்கிறது. மேலும் இதே மாடலை வாடிக்கையாளர் விரும்பும் பட்சத்தில் 4 சீட்டர் எஸ்.யு.வி. போன்றும் மாற்றிக் கொள்ளலாம். "புதிய ரேன்ஜ் ரோவர் எஸ்.வி. அதிகளவு ஆடம்பரம் மற்றும் தனித்துவம் மிக்க ஆப்ஷன்களை சேர்த்து உருவாக்கப்பட்டுள்ளது. இது எங்களின் வாடிக்கையாளர்களுக்கு தனித்துவம் மிக்க ரேன்ஜ் ரோவரை அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப உருவாக்க வழி செய்கிறது," என ஜாகுவார் லேண்ட் ரோவர் இந்தியா தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் ரோகித் சூரி தெரிவித்தார்.

ரேன்ஜ் ரோவர் எஸ்.வி. மாடல் வித்தியாசமான பம்ப்பர், புதிதாக 5-பார் கிரில் டிசைன், மென்மையான செராமிக், தலைசிறந்த மரப்பலகைகள், மின்னும் மெட்டல் பிளேட்களுடன் மிக நேர்த்தியாக உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்த மாடலில் 13.1 இன்ச் அளவில் ரியர் சீட் எண்டர்டெயின்மெண்ட் ஸ்கிரீன்கள் உள்ளன. 

புதிய ரேன்ஜ் ரோவர் எஸ்.வி. மாடலில் 4.4 லிட்டர் டுவின் டர்போ பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 523 பி.ஹெச்.பி. திறன், 750  நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 3 லிட்டர் ஸ்டிரெயிட்-6 டீசல் என்ஜின் ஆப்ஷனும் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 346 பி.ஹெச்.பி. திறன், 700 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது.

click me!