Ford Bronco Raptor : அதிரடி ஆஃப்ரோடு அம்சங்களுடன் அறிமுகமான ஃபோர்டு பிரான்கோ ரேப்டார்

By Kevin KaarkiFirst Published Jan 27, 2022, 12:08 PM IST
Highlights

ஃபோர்டு நிறுவனம் இதுவை  வெளியானதில் அதிக சக்திவாய்ந்த ரோட்-லீகல் பிரான்கோ ரேப்டார் மாடலை அறிமுகம் செய்தது.

ஃபோர்டு நிறுவனம் தனது பிரபல பிரான்கோ எஸ்.யு.வி. மாடலின் ஹார்டுகோர் வேரியண்டை அறிமுகம் செய்தது. புதிய வேரியண்ட் பிரான்கோ ரேப்டார் என அழைக்கப்படுகிறது. இதில் ஏராளமான ஆஃப்-ரோடு சார்ந்த அப்கிரேடுகள் செய்யப்பட்டுள்ளன. "இதில் வழங்கப்பட்டுள்ள அப்கிரேடுகள் பாலைவனங்களில் அதிவேகமாக செல்வதோடு, கடும் பாறைகளிலும் ஏறும் திறன் கொண்டிருக்கிறது," என ஃபோர்டு தெரிவித்துள்ளது. 

பிரான்கோ ஸ்டாண்டர்டு மாடலை  போன்றே புதிய பிரான்கோ ரேப்டார் எஸ்.யு.வி. மாடலும் அமெரிக்க சந்தையில் மட்டுமே அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஃபுல் சைஸ் பிரான்கோ, ரோடு-சார்ந்து உருவாக்கப்பட்ட பிரான்கோ ஸ்போர்ட் மாடல்கள் வரிசையில், மூன்றாவது மாடலாக புதிய பிரான்கோ ரேப்டார் அறிமுகமாகி இருக்கிறது. 

புதிய ரேப்டார் மாடலில் ப்ரோடெக்டிவ் பாடிகிட், டோ ஹூக், சண்கி அண்டர்பாடி பேஷ் பிளேட், 8.6 இன்ச் அகலமான டிராக் வழங்கப்பட்டு, ரைடு உயரம் 4.8 இன்ச் வரை அதிகரிக்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் 37 இன்ச் ஆல்-டிரெயின் டையர்கள் வழங்கப்பட்டுள்ளன. அமெரிக்க எஸ்.யு.வி.க்களில் இதுபோன்ற டையர் இதுவரை எந்த மாடலிலும் வழங்கப்படவில்லை என ஃபோர்டு தெரிவித்துள்ளது.

இதுதவிர ஃபோர்டு  பிரான்கோ ரேப்டார் மாடலில் 3 லிட்டர், டுவின் டர்போ சார்ஜ் செய்யப்பட்ட வி6 பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது.  இந்த என்ஜின் 400 ஹெச்.பி. திறன் வெளிப்படுத்துகிறது. புதிய பிரான்கோ ரேப்டார் இதுவரை வெளியானதிலேயே அதிக சக்திவாய்ந்த ரோட்-லீகல் பிரான்கோ மாடல் ஆகும். இத்துடன் 10 ஸ்பீடு ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ், பி-ஸ்போக் எக்சாஸ்ட் சிஸ்டம் வழங்கப்பட்டு இருக்கிறது.

வரும் வாரங்களில் புதிய ஃபோர்டு பிரான்கோ ரேப்டார் பற்றி அதிக விவரங்கள் வெளியாகும் என தெரிகிறது. இந்த மாடலின் விற்பனை இந்த ஆண்டு இறுதியில் வட அமெரிக்காவில் முதலிலும் அதன் பின் மற்ற நாடுகளிலும் துவங்க இருக்கிறது.

click me!