KTM X-Bow : ரேஸ் கார் மாடலை ரோட்-லீகல் வேரியண்டாக உருவாக்கும் கே.டி.எம்.

By Kevin KaarkiFirst Published Jan 27, 2022, 11:26 AM IST
Highlights

கே.டி.எம்.  நிறுவனம் தனது ரேஸ் கார் மாடலின் ரோட்-லீகல் வேரியண்டை உருவாக்கும்  பணிகளில் ஈடுபட்டு வருகிறது.

ஆஸ்த்ரிய நாட்டு ஸ்போர்ட்ஸ் கார் மற்றும் மோட்டார்சைக்கிள் உற்பத்தியாளரான கே.டி.எம். தனது எக்ஸ்-போ ஜி.டி.  2 ரேஸ் கார் மாடலின் ரோட்-லீகல் வேரியண்டை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இந்த மாடல் குறைந்த எடை கொண்ட ரேடிக்கல் கேப்ச்சர் மற்றும் டல்லரா ஸ்டிரேடேல் போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமையும். இது கே.டி.எம்.  நிறுவனத்தின் இரண்டாவது ரோட் கார் மாடல் ஆகும். 

முன்னதாக ஓபன் ரூஃப் எக்ஸ்-போ மாடலை கே.டி.எம். அறிமுகம் செய்தது. இது 2008 ஆம் ஆண்டு முதல் பல வடிவங்களில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இது முழுமையான பி-ஸ்போக் பாடி ஷெல் கொண்டிருக்கிறது. இந்த மாடல் தற்போது உள்ள சூப்பர்கார் மாடல்களுக்கு தலைசிறந்த போட்டியாளராக நிலைநிறுத்துவதற்கு ஏற்ற அம்சங்கள் மற்றும் செயல்திறன் கொண்டிருக்கிறது.

இந்த மாடலில் 2.5 லிட்டர் டர்போசார்ஜ் செய்யப்பட்ட 5 சிலிண்டர் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இதே என்ஜின் ஆடி ஆர்.எஸ்.3 ஹாட் ஹேட்ச்பேக் மாடலிலும் வழழங்கப்பட்டு இருக்கிறது. ஜி.டி. 2 ரேசர் மாடலில் இந்த என்ஜின் 606 ஹெச்.பி. திறன், 791 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. எக்ஸ்-போ மாடலில் இதன் திறன் 298 ஹெச்.பி. மற்றும் 400 நியூட்டன் மீட்டர்களாக இருக்கிறது. 

இந்த என்ஜினுடன் 7 ஸ்பீடு சீக்வென்ச்சுவல் கியர்பாக்ஸ் வழங்கப்பட்டு இருக்கிறது. கே.டி.எம்.  எக்ஸ்-போ ஜி.டி. 2 ரேசர் மாடலின் மொத்த எடை 1048 கிலோ ஆகும். இத்துடன் அக்சஸரீக்களை சேர்க்கும் போது காரின் எடை மேலும் அதிகமாகும். இந்த காரின் வெளியீட்டு தேதியை கே.டி.எம்.  இதுவரை அறிவிக்கவில்லை. 

click me!