Maruti Baleno : புதிய பலேனோ மாடல் உற்பத்தி துவக்கம்

By Kevin KaarkiFirst Published Jan 27, 2022, 10:36 AM IST
Highlights

மாருதி சுசுகி நிறுவனத்தின் 2022 பலேனோ மாடல் உற்பத்தி துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த மாடல் அடுத்த மாதம் அறிமுகம் செய்யப்படுகிறது.

மாருதி சுசுகி லிமிடெட் நிறுவனம் இந்த ஆண்டு பல்வேறு கார் மாடல்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. அந்த வகையில், செலரியோ CNG வேரியண்ட் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து தற்போது பலேனோ ஃபேஸ்லிப்ட் மாடலை அறிமுகம் செய்வதற்கான பணிகளில் மாருதி சுசுகி ஈடுபட்டு வருகிறது. 

இந்த நிலையில், புதிய மாருதி பலேனோ மாடலுக்கான உற்பத்தி பணிகள் துவங்கி நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த மாடல் அடுத்த மாதத்தின் இரண்டாவது வாரத்தில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. புதிய ஃபேஸ்லிப்ட் மாடலின் உள்புறம் கணிசமான மாற்றங்கள் செய்யப்பட்டு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மாருதி சுசுகியின் குஜராத் ஆலையில் புதிய பலேனோ உற்பத்தி செய்யப்படும் புகைப்படம் இணையத்தில் வெளியாகி உள்ளது. 2022 பலேனோ மாடலை  தொடர்ந்து புதிய தலைமுறை பிரெஸ்ஸா மற்றும் அதன் CNG வேரியண்ட் அறிமுகம் செய்ய மாருதி சுசுகி திட்டமிட்டுள்ளது. இதுதவிர இந்த ஆண்டு தீபாவளி  பண்டிகைக்கு முன் டொயோட்டா நிறுவனத்தின் டி.என்.ஜி.ஏ. பிளாட்ஃபார்மை சார்ந்து உருவாக்கப்பட்டுள்ள 5-சீட்டர் மிட்-சைஸ் எஸ்.யு.வி. மாடலை அறிமுகம் செய்யவும் மாருதி சுசுகி முடிவு செய்துள்ளது.

புதிய மிட்-சைஸ் எஸ்.யு.வி.-யை தொடர்ந்து 7 சீட்டர் ஃபிளாக்‌ஷிப் எஸ்.யு.வி., மேம்பட்ட எர்டிகா மற்றும் XL6, காம்பேக்ட் எஸ்.யு.வி. உள்ளிட்ட மாடல்களும் அறிமுகம் செய்யப்பட இருக்கின்றன. புதிய மாடல்கள் மூலம் இந்திய சந்தையில் தனது நிலையை மேலும் உறுதிப்படுத்திக் கொண்டு பிரீமியம் பிரிவில் முன்பை விட அதிக கவனம் செலுத்த மாருதி சுசுகி திட்டமிட்டுள்ளது.  

2022 மாருதி பலேனோ மாடலின் வெளிப்புறம் மேம்பட்ட முன்புற தோற்றம், கூர்மையான ஹெட்லேம்ப், பிரமாண்ட கிரில், டுவீக் செய்யப்பட்ட பொனெட், ரி-ஸ்டைல் செய்யப்பட்ட முன்புற பம்ப்பர், அகலமான ஏர் இன்லெட் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. இத்துடன் புதிய வடிவமைப்பு கொண்ட எல்.இ.டி. டெயில் லைட்கள், மேம்பட்ட ரியர் பம்ப்பர், சிறதாக இண்டகிரேட் செய்யப்பட்ட ஸ்பாயிலர் வழங்கப்படுகிறது.

உபகரணங்களை பொருத்தவரை பெரிய தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், ஆப்பிள் கார்பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ, குரூயிஸ் கணட்ரோல், என்ஜின் ஸ்டார்ட் / ஸ்டாப் பட்டன், ஸ்டீரிங் வீல் மற்றும் பல்வேறு இதர அம்சங்கள் வழங்கப்படுகிறது. இந்த மாடலில் 1.2 லிட்டர் பெட்ரோல் மற்றும் மைல்டு ஹைப்ரிட் பெட்ரோல் என்ஜின் ஆப்ஷன்கள் வழங்கப்படலாம்.

click me!