விலை ரூ. 1.47 கோடி : போர்ஷ் கேயென் ஸ்பெஷல் எடிஷன் இந்தியாவில் அறிமுகம்

Nandhini Subramanian   | Asianet News
Published : Jan 26, 2022, 04:53 PM IST
விலை ரூ. 1.47 கோடி : போர்ஷ் கேயென் ஸ்பெஷல் எடிஷன் இந்தியாவில் அறிமுகம்

சுருக்கம்

போர்ஷ் நிறுவனத்தின் கேயென் மாடல் ஸ்பெஷல் எடிஷன் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.

போர்ஷ் நிறுவனம் கேயென் பிளாட்டினம் எடிஷன் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. இந்த மாடல் கேயென் மற்றும் கேயென் கூப் என இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது. ஸ்பெஷல் எடிஷன் மாடலில் பிளாட்டினம் தீம் செய்யப்பட்ட டிசைன் வழங்கப்பட்டு இருக்கிறது. 

புதிய போர்ஷ் கேயென் பிளாட்டினம் எடிஷன் மற்றும் கூப் பிளாட்டினம் எடிஷன் மாடல்களின் விலை ரூ. 1.47கோடி என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. போர்ஷ் கேயென் இ-ஹைப்ரிட் பிளாட்டினம் எடிஷன் விலை ரூ. 1.88 கோடி என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளது. 

ஸ்டாண்டர்டு எடிஷனை போன்று ஸ்பெஷல் எடிஷன் மாடலிலும் 3.0 லிட்டர் டர்போ பெட்ரோல் வி6 என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 355  பி.ஹெச்.பி. திறன் வழங்குகிறது. இ-ஹைப்ரிட் மாடலில் வி6 பெட்ரோல் என்ஜினுடன் 17.9 கிலோவாட் ஹவர் பேட்டரி மற்றும் எலெக்ட்ரிக் மோட்டார் பவர் டிரெயின் வழங்கப்பட்டு இருக்கிறகது. இது 455 பி.ஹெச்.பி. திறன் வெளிப்படுத்துகிறது. 

போர்ஷ் கேயென் பிளாட்டினம் எடிஷன் விலை விவரங்கள்

கேயென்- ரூ. 1.47 கோடி 
கூப் - ரூ. 1.47 கோடி
கேயென் இ-ஹைப்ரிட் - ரூ. 1.88 கோடி
கூப் இ-ஹைப்ரிட் - ரூ. 1.88 கோடி  

இந்த காரின் வெளிப்புற ஏர் இன்டேக், 21 இன்ச் அலாய் வீல்கள், பின்புறம் போர்ஷ் லெட்டரிங் உள்ளிட்டவைகளில் ஸ்பெஷல் சேடின் பிளாட்டினம் ஃபினிஷ் செய்யப்பட்டுள்ளது. இத்துடன் பரிளாக் சைடு விண்டோ ட்ரிம் மற்றும் ஸ்போர்ட்ஸ் எக்சாஸ்ட் டெயில் பைப்கள் இந்த காருக்கு ஸ்போர்ட்ஸ் மாடலுக்கான தோற்றத்தை வழங்குகின்றன. 

புதிய ஸ்பெஷல் எடிஷன் மாடலில் எல்.இ.டி. ஹெட்லேம்ப்கள், போர்ஷ் டைனமிக் லைட் சிஸ்டம் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த மாடல்- மஹோகனி, கரரா வைட், ஜெட் பிளாக், கிரேயன் மற்றும் மூன்லைட் புளூ என ஐந்து வெவ்வேறு மெட்டாலிக் ஃபினிஷ் நிறங்களில் கிடைக்கிறது. 

PREV

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

click me!

Recommended Stories

ATM Rules: இந்த தவறு நடந்தா வங்கி உங்களுக்கு இழப்பீடு தரணும்.. தெரியுமா?
Vande Bharat Pets: செல்லப் பிராணியுடன் வந்தே பாரத் ரயிலில் பயணிக்கலாம்.. இந்திய ரயில்வே வெளியிட்ட சூப்பர் அப்டேட்