தனிநபர் கடன் பல்வேறு நிதித் தேவைகளுக்காக பெறுகிறோம். உதாரணமாக, மருத்துவ அவசரச் செலவுகள், உயர் கல்வி, சர்வதேச பயணம், திருமணச் செலவு அனைத்துக்கும் தனிநபர் கடன் பெறுகிறோம்.
தனிநபர் கடன் பல்வேறு நிதித் தேவைகளுக்காக பெறுகிறோம். உதாரணமாக, மருத்துவ அவசரச் செலவுகள், உயர் கல்வி, சர்வதேச பயணம், திருமணச் செலவு அனைத்துக்கும் தனிநபர் கடன் பெறுகிறோம்.
தனிநபர் கடன்களைப் பொறுத்தவரை எளிதாகக் கிடைத்தும், எந்தவிதமான பிணையம் இல்லாத கடன்களாகக் கூட கிடைக்கும். ஆனால், தனிநபர் கடனில் வட்டிவீதம் மிகவும் அதிகமாக இருக்கும். உதாராணமாக கார், வீட்டுக்கடன் ஆகியவற்றுக்கு கடன்வட்டி அதிகமாகும்.
இப்போதுள்ள சூழலில் தனிநபர் கடன் வாங்கச் செல்லும் முன் சில விஷயங்களைத் தெரிந்து கொண்டு கடனுக்கு விண்ணப்பிப்பது சிறந்தது
கடன் தகுதி(Eligibility)
கடன் பெறுவோருக்கான தகுதியை ஒவ்வொரு வங்கியும் ஒவ்வொரு விதமாக நிர்ணயிக்கின்றன. குறிப்பாக வருமான நிலைத்தன்மை, கடன்பெறுவோரின் வயது, சிபில் ஸ்கோர் ஆகியவற்றை அடிப்படைத் தகுதியாக வைத்துள்ளனர்
சிபில் ஸ்கோர்(cibil score)
வங்கியில் கடன் பெறுவதற்கு முக்கியமானத் தகுதியாக இருப்பது சிபில் ஸ்கோர்தான். கடன் பெறுபவருக்கு சிபில் ஸ்கோர் 750க்கு மேல் இருப்பதுதான் பாதுகாப்பானது.கடன் எளிதாகக் கிடைக்கும் வாய்ப்பாக இருக்கும். சிபில் ஸ்கோரில் அதிகமான மதிப்பெண் வைத்திருப்பது, கடன் பெறுவதை எளிதாக்கும்.
வட்டி வீதம்: (interest rate)
தனிநபர் கடனுக்கு விண்ணப்பிக்கும் முன் பல்வேறு வங்கிகளிலும் வட்டி குறித்து விசாரித்தபின் கடனுக்கு விண்ணப்பிக்கலாம். வட்டிவீதம் ஒவ்வொரு வங்கிக்கும் மாறுபடும். வங்கி சாராத நிறுவனங்களும் தனிநபர் கடன் வழங்குகின்றன. வங்கி சாராத நிறுவனங்கள், வங்கிகள் வழங்கும் கடனுக்கான வட்டிவீதத்தை ஒப்பிட்டுப் பார்த்தபின்பு கடன் வாங்குவது சிறந்தது. பொதுவாக வங்கிகள், 10.50 சதவீதம் முதல் 24 சதவீதம் வரை ஆண்டு வட்டியில் கடன் வழங்குகின்றன.
எளிதாக அப்ளே செய்யலாம்(Easy apply)
தனிநபர் கடனை ஆன்லைன் மூலமோ அல்லது நேரடியாகச் சென்றோ பெறலாம். தனிநபர் கடன் பெறுபவர் வங்கியின் வாடிக்கையாளராக இருந்தால், அல்லது நீண்டகாலமாக வாடிக்கையாளராக இருந்தால், என்பிஎப்சியாகஇருந்து கடனுக்கு விண்ணப்பித்தால், குறைந்த வட்டியில் கடன் கேட்கலாம். கிரெடிட் கார்டு வைத்திருப்பவர்களுக்கு எளிதாக தனிநபர் கடன் கிடைக்கும். ஆனால், கிரெடிட் கார்டின் பயன்பாட்டைப் பொறுத்தும், பணத்தை எவ்வாறு திருப்பி செலுத்தியுள்ளீர்கள் என்பதைப் பொறுத்தும் வட்டி மாறுபடும்
முன்கூட்டியே கடனை முடித்தால் கட்டணம்
தனிநபர் கடன் பெற்றவர் குறிப்பிட்ட காலத்துக்குள் கடன் தொகையை அடைக்க முன்வந்தால், அதற்கு வங்கிகள், அல்லது வங்கி சாராத நிறுவனங்கள் கூடுதல் கட்டணம் வசூலிக்கும். தனிநபர் கடன் வாங்கும்போது, கடனைத் திருப்பி செலுத்தம்போதும் கட்டணம் ஏதும் வசூலிப்பார்களா என்பதை அறிந்து கொள்வது அவசியம்